search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karunanidhi death"

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தி.மு.க.தொண்டர்கள் 11 பேர் தங்கள் தலை முடியை மொட்டை அடித்தனர். #karunanidhideath #dmk

    ஈரோடு:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் கட்சி பேதமின்றி அனைத்து கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மவுன ஊர்வலம் நடத்தியும் வருகிறார்கள்.

    புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளியில் கருணாநிதி மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.

    புங்கம்பள்ளி பஸ் நிறுத்தத்தில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக புங்கம்பள்ளி குளத்தை அடைந்தது. பிறகு அங்கு தி.மு.க.தொண்டர்கள் 11 பேர் தங்கள் தலை முடியை மொட்டை அடித்தனர். அப்போது அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். ஊர்வலத்தில் தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்பட அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    இதே போல் கோபியில் தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம் நடத்தினர்.

    முன்னதாக அ.தி.மு.க.வினர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான அ.தி.மு.க.தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கோபி பெரியார் திடலில் அனைத்து கட்சி சார்பில் தி.மு.க.தலைவர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

    அந்தியூரில் கருணாநிதி மறைவையொட்டி அனைத்து கட்சி சார்பில் இரங்கல் ஊர்வலம் நடந்தது. இதில் தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ம.க.உள்பட பல்வேறு கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    தேரடி திடலில் தொடங்கிய ஊர்வலம் பர்கூர் ரோடு, பஸ் நிலையம், சத்தி ரோடு, பிரம்மதேசம் ரோடு, தவிட்டு பாளையம், சிங்கார வீதி வழியாக 2 கி.மீட்டர் தூரத்தை கடந்து மீண்டும் தேரடி திடலில் முடிவடைந்தது.

    தி.மு.க.அவைத்தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். மார்க்.கம்யூனிஸ்டு தாலுகா செயலாளர் ஆர். முருகேசன் இரங்கல் உரையாற்றினார். முடிவில் கலைஞர் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நம்பியூரிலும் தி.மு.க.தலைவர் மறைவை யொட்டி மவுன ஊர்வலம் நடந்தது. ஒன்றிய தி.மு.க.பொறுப்பு செயலாளர் மெடிக்கல் செந்தில், தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர். கோசனத்தில் ஊராட்சி செயலாளர் இளங்கோ ஏற்பாட்டில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    சத்தியமங்கலத்தில் அனைத்து பூ வியாபாரிகள் சார்பில் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கருணாநிதி படம் பல வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. #karunanidhideath #dmk

    கருணாநிதி மறைவு குறித்த காட்சியை டிவியில் பார்த்துக்கொண்டிருந்த பெண் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். #karunanidhideath #dmk

    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் புனவாசிப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், தி.மு.க. கிளை கழக பிரதிநிதி. இவரது மனைவி சரோஜா (43). முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாட்கள் முதல் தினமும் கவலையில் இருந்து வந்தார். 

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டி.வி. நிகழ்சியை குடும்பத்துடன் பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது கருணாநிதி மறைவு குறித்த காட்சியை பார்த்து விட்டு கதறி அழுத சரோஜா மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவருக்கு 2 ஆண், 3 பெண் குழந்தைகள் உள்ளனர். #karunanidhideath #dmk 

    கருணாநிதி இறந்ததை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்த திமுக பிரமுகர் துக்கம் தாங்காமல் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 39) தி.மு.க. பிரமுகர். இவர் 20 ஆண்டுகளாக கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    கருணாநிதி இறந்ததை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். இவர் கருணாநிதி அடக்கம் செய்யும் காட்சியை பார்த்து விட்டு துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறினார்.

    திடீரென அறைக்குள் சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாலாஜா போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த அதிர்ச்சியில் தி.மு.க.வினர் 3 பேர் குமரி மாவட்டத்தில் இறந்துள்ளனர்.
    குலசேகரம்:

    குலசேகரம் அருகே உள்ள உண்ணீர் கோணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (வயது52). இவர் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. ஆதி திராவிடர் துணைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

    இவர் நேற்று காலை முதல் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்தார். மாலையில் திடீரென்று கிறிஸ்துதாசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுச்சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    அஞ்சுகிராமம் அருகே உள்ள கனகப்பபுரத்தைச் சேர்ந்தவர் சாமிகண்நாடார்(62). நீண்ட கால தி.மு.க. உறுப்பினரான இவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டது முதல் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தை டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார்.

    திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(60). தீவிர தி.மு.க. தொண்டரான இவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தி கேட்டு மயங்கி விழுந்தார்.

    அவரை உறவினர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தி.மு.க. தொண்டர்கள் 3 பேர் பலியானது அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. தி.மு.க. நிர்வாகிகளும் அவர்களது உட லுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.



    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி புதுவை இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஒரு வாரம் தள்ளிப்போகிறது. #karunanidhideath #dmk

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேர்தல் வருகிற 11, 12, 13-ந்தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் மூலம் இளையராஜா கடந்த 2013-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்.

    2016-ம் ஆண்டு இவரின் பதவிக்காலம் முடிவடைந்தது. சட்டமன்ற தேர்தல் குறுக்கிட்டதால் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை கட்சி தலைமை நடத்தவில்லை.

    இந்த நிலையில் 2 ஆண்டுக்கு பிறகு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தலை கட்சித்தலைமை அறிவித்தது. இதற்காக உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. இதில் 1½ லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மாநில, மாவட்ட, வட்டார தலைவர்களுக்கு வேட்புமனு தாக்கல் நடந்து முடிந்துள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனையும் முடிக்கப்பட்டு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானார். இதனால் ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

    இந்நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என்பதால் தேர்தலை தள்ளிப்போட முடிவு செய்துள்ளனர். ஒருவாரம் தேர்தலை தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. #karunanidhideath #dmk

    சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே, கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #KarunanidhiFuneral #Trisha
    திமுக தலைவர் கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

    கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, நேற்று இரவு முதல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே கருணாநிதிக்கு பலரும் அஞ்சலி செலுத்த வந்தவண்ணமாக உள்ளனர். 

    இந்த நிலையில், மெரினாவில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். முன்னதாக இன்று காலை கவிஞர் வைரமுத்து அவரது மகன்களுடன் கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #Karunanidhi #KarunanidhiFuneral #Trisha

    இசை கச்சேரிக்காக ஆஸ்திரேலியா வந்திருப்பதால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியவில்லை என்று இசையமைப்பாளர் இளையராஜா வீடியோவில் இரங்கல் தெரிவித்துள்ளார். #Karunanidhi
    சென்னை:

    ஆஸ்திரேலிய நாட்டுக்கு இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்று இருக்கும் இசை அமைப்பாளர் இளையராஜா கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் பெருங்குடி மக்களே நமக்கெல்லாம் துக்க தினமாக இன்று ஆகிவிட்டது. டாக்டர் கலைஞர் ஐயா மறைந்தது நமக்கு எல்லாம் துக்க தினம் தான். இந்த துக்கத்தில் இருந்து எப்படி நாம் திரும்பி வரப்போகிறோம் என்று தெரியவில்லை.

    அரசியல் தலைவர்களிலேயே கடைசி அரசியல் தலைவர் ஐயா. சினிமா துறையிலே தூய தமிழ் வசனங்களை அளித்த கடைசி வசனகர்த்தா ஐயா. அரசியல், சினிமா, தமிழ், கலை, இலக்கியம் என்று எல்லா துறைகளிலும் தலைசிறந்து விளங்கிய ஐயாவின் இழப்பு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.


    இந்த நேரத்தில் நான் இங்கு ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக எனது குழுவினருடன் வந்து இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி 6 மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதால் தவிர்க்க முடியவில்லை. ஐயாவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு இளையராஜா பேசியுள்ளார். #Karunanidhi #KarunanidhiFuneral #KalaignarAyya #Ilayaraja

    திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவருக்காக கவிதை ஒன்றை எழுதியுள்ளார். #Karunanidhideath #Karunanidhi #KarunanidhiFuneral #Vijayakanth
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள கவிதை வருமாறு:-

    டாக்டர் கலைஞர் அவர்களுக்கு,

    உலகமே உங்களை கலைஞரே ! என்று அழைத்தாலும் உணர்வுப்பூர்வமாக உங்களை அண்ணா என்று வாஞ்சையோடு அழைத்து உங்களுடன் பழகிய அந்த நாட்களை எண்ணி வியக்கிறேன், விம்முகிறேன்.
    தள்ளாத வயதிலும் ஓய்வுக்கே ஓய்வு!
    என்பதன் அர்த்தத்தை 'உழைப்பு'
    என்று மாற்றிக்காட்டிய ஒப்பற்ற தலைவரே !

    அந்தி சாயும்பொழுது ஒரு சூரியன் மறைவது இயற்கை. ஆனால் 07.08.2018 அன்று மாலை 6.10 மணியளவில் இரு சூரியன் ஒரு சேர மறைந்ததோ ! என்று என்னும்வண்ணம்,இவ்வுலகையே இருட்டாக்கியது போன்ற ஒரு உணர்வை தந்து சென்றவரே !

    உங்கள் உடல் இவ்வுலகை விட்டு பிரிந்தாலும், உங்கள் சரித்திரம் சகாப்தமாய் என்றும் எங்களுடனேயே இருக்கும் உங்களை வணங்குகிறேன்.

    உங்களின் நினைவாக என்றென்றும்...

    தமிழன் என்று சொல்லடா!
    தலை நிமிர்ந்து நில்லடா!

    என்ற உங்கள் வாசகத்துடன்.

    இப்படிக்கு
    உங்கள் விஜி என்னும் விஜயகாந்த்

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Karunanidhideath #Karunanidhi #KarunanidhiFuneral #Vijayakanth
    தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மறைவையொட்டி உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 4 ராஜகோபுரங்களிலும் நேற்று இரவு 7 மணிக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
    சிதம்பரம்:

    உடல்நல குறைவால் மரணமடைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

    இதையொட்டி உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள 4 ராஜகோபுரங்களிலும் நேற்று இரவு 7 மணிக்கு மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

    சென்னை மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கவிஞர் வைரமுத்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினார். #Karunanidhi #KarunanidhiFuneral #Vairamuthu
    திமுக தலைவர் கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

    முன்னதாக கோபாலபுரம் இல்லம், சிஐடி காலனி மற்றும் ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதியின் உடலுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி அளித்தனர். 

    கருணாநிதி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு, நேற்று இரவு முதல் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் கருணாநிதி சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அதிகாலையிலேயே கருணாநிதிக்கு பலரும் அஞ்சலி செலுத்த வந்தவண்ணமாக உள்ளனர். 



    மேலும் கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது மகன்கள் மதன் கார்க்கி மற்றும் கபிலன் வைரமுத்துவும் கருணாநிதி சமாதிக்கு நேரில் வந்து பால் ஊற்றி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, கருணாநிதி இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை என்று கூறினார். #Karunanidhi  #KarunanidhiFuneral #KalaignarAyya #Vairamuthu

    கருணாநிதி மரணம் அடைந்த அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள் 34 பேர் உயிர் இழந்தனர். மேலும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். #Karunanidhi #DMK
    பெரியபாளையம்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி பின்புறம் அடக்கம் செய்ய அனுமதி கோரப்பட்டது. ஆனால் தமிழக அரசு அதனை மறுத்துவிட்டது.

    இந்த செய்தியை கேட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள திருநிலை கிராமத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினரான ராஜ் (வயது 32) மிகுந்த வருத்தத்தில் இருந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ராஜ், நேற்று காலை திருநிலை கிராமத்தில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதற்கிடையே, அண்ணா சமாதி பின்புறம் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.



    தேனி மாவட்டம் போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த தி.மு.க. தொண்டரான முருகேசன் (45) கருணாநிதி மரணம் குறித்த செய்தியை கேட்டதும் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கினார். மீளா துயரத்தில் இருந்த அவர் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம் மாவட்டம் எடப்பாடி கொங்கணாபுரத்தை அடுத்த எலவம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா என்ற வெள்ளகுட்டி (45). தி.மு.க. உறுப்பினர். கருணாநிதி இறந்ததை அறிந்த ராஜா துக்கம் தாங்காமல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள புறா கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (47), மயிலாடுதுறை அருகே உள்ள பண்டாரவடை நெய்குப்பை கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (70), மயிலாடுதுறையை அடுத்த பெரம்பூர் கீழத்தெருவை சேர்ந்த நாதஸ்வர வித்வானான ராஜேந்திரன் (50), மயிலாடுதுறை மேலபெரம்பூர் கிராமத்தை சேர்ந்த கலியமூர்த்தி (56), மணல்மேடு அருகே உள்ள கொற்கை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (70) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த செய்தி கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தனர்.

    அதே போல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழ்புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வரதன் (74), புளியரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுசீலா (60) மற்றும் ஆரணி அம்பேத்கர் நகரை சேர்ந்த பெருமாள் மனைவி பாப்பாம்மாள் (57) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் உயிர் இழந்தனர்.

    வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தை சேர்ந்த மேல்வல்லம் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் (65), நேற்று முன்தினம் மாலை கருணாநிதி இறந்த செய்தியை தொலைகாட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 34-வது வார்டு குருநகரை சேர்ந்த தி.மு.க. உறுப்பினர் சுப்பம்மாள் (60), வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிபட்டியை அடுத்த குரும்பட்டியை சேர்ந்த தி.மு.க. தொண்டரான கருப்பையா (55) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியால் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தனர்.

    தேனி மாவட்டம் தேவாரம் மெயின்பஜார் தெருவை சேர்ந்த சுலைமான் (65), போடியை சேர்ந்த தி.மு.க. தொண்டர் கோவிந்தன் (55) ஆகிய இருவரும் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்தனர்.

    விழுப்புரம் முத்தோப்பு வார்டு தி.மு.க. பிரதிநிதியான பன்னீர்செல்வம் (59) திருக்கோவிலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான குமரவேல் ஆகிய 2 பேரும் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

    அதேபோல் உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய தி.மு.க. மகளிரணி நிர்வாகியான பூவாடு கிராமத்தை சேர்ந்த பெருமா (60) என்பவர் நேற்று முன்தினம் மாலை கருணாநிதி உயிர் இழந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து மயங்கி விழுந்து இறந்தார்.

    சேலம் தென்அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (45). தி.மு.க. தொண்டரான இவர் அழகாபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியபோது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

    எடப்பாடி கக்சுபள்ளியை சேர்ந்த லட்சுமணன் (55), பூலாம்பட்டி சந்தை பேட்டையை சேர்ந்த தி.மு.க. தொண்டரான வெங்கடாசலம் (60) ஆகியோர் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கங்கதேவனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சிக்கதாய்ப்பா (80) கருணாநிதி மறைவு செய்தி அறிந்ததும் அதிர்ச்சியில், மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சவுளுபட்டி கொட்டாவூரை சேர்ந்த சண்முகம் (55) கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டதும் மயங்கி விழுந்து இறந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வடக்கு பொன்னன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா (65), தி.மு.க. கிளை உறுப்பினராக இருந்தார். நேற்று முன்தினம் கருணாநிதி மரணம் அடைந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த சின்னையா அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

    கீரனூர் அருகே உள்ள இளையாவயல் கிராமத்தை சேர்ந்த தி.மு.க. உறுப்பினரான ராமன் (50), திருவரங்குளம் பாரதியார் நகரை சேர்ந்த பழனியம்மாள் (75) ஆகிய இருவரும் கருணாநிதி இறந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயிர் இழந்தனர்.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா நத்தக்காடையூர் அருகே உள்ள புதுவெள்ளியம்பாளையத்தை சேர்ந்த குருசாமி (55) காங்கேயம் வடக்கு ஒன்றியம் நத்தக்காடையூர் ஊராட்சி 5-வது வார்டு தி.மு.க. செயற்குழு உறுப்பினராக இருந்தார். இவர் நேற்று முன்தினம் கருணாநிதி இறந்த செய்தியை கேட்டு, கவலையுடன் தூங்க சென்றார். நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே அவர் இறந்தார்.

    நெல்லை டவுனை சேர்ந்த குருநாதன் என்ற குருசாமி (49), நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளத்தை சேர்ந்த சண்முகையா (68), அதே ஊரை சேர்ந்த வேலுசாமி (68) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்து இறந்தனர்.

    மதுரையை சேர்ந்தவர் அழகுராஜா (27), மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த நாகராஜ் (34), அலங்காநல்லூரை அடுத்த மாணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சின்னச்சாமி (63), எர்ரம்பட்டியை சேர்ந்த அலங்கார கவுண்டர் (65), மதுரை பெருங்குடியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் கணபதியின் மனைவி சந்திரா (52) ஆகிய தி.மு.க. தொண்டர்கள் கருணாநிதி இறந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.

    குமரி மாவட்டம் திக்கணங்கோடு ஊராட்சி 17-வது வார்டு செயலாளராக இருந்தவர் அலெக்சாண்டர் (66). தி.மு.க.வின் தீவிர தொண்டரான இவர் நேற்று முன்தினம் மாலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தியை கேட்டு மயங்கி விழுந்து இறந்தார். 
    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #KarunanidhiDeath #SportsFraternity #Tribute
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். #KarunanidhiDeath #SportsFraternity #Tribute

    தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி பண்முக திறமை கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே நேரத்தில் அவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகரும் ஆவார். அவர் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் கிரிக்கெட் ஆட்டத்தை டெலிவிஷனில் கண்டு களிப்பதை வாடிக்கையாக வைத்து இருந்தார். சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் நேரில் வந்து பார்க்கும் பழக்கம் உடையவர்.

    கபில்தேவ், தெண்டுல்கர், ஸ்ரீநாத், டோனி, எல்.பாலாஜி ஆகியோர் கருணாநிதியை கவர்ந்த கிரிக்கெட் பிரபலங்கள் பட்டியலில் அடங்குவார்கள். ஜாம்பவான் தெண்டுல்கரின் சுயசரிதை புத்தக்கத்தை படித்து முடித்ததுடன், அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து இருந்தார். அவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளையும் ரசித்து பார்ப்பது உண்டு.

    நேற்று முன்தினம் மறைந்த கருணாநிதிக்கு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திர வீரர்கள் டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர். வீரர்களின் இரங்கல் வருமாறு:-

    ஆர்.அஸ்வின் (சுழற்பந்து வீச்சாளர்): கலைஞரின் மறைவு செய்தி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

    ஹர்பஜன்சிங் (சுழற்பந்து வீச்சாளர்): சூரியன் முழுமையாக அஸ்தமித்து விட்டது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும், மிக்காரும் இல்லா தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடுசெய்ய முடியாதது. இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை. முத்தமிழின் மூத்த மகனுக்கு எனது வீர வணக்கம்.

    முரளி விஜய் (தொடக்க ஆட்டக்காரர்): தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் முன்னேற்றத்துக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட சிறந்த தலைவர். அவரது மறைவு பேரிழப்பாகும்.

    விஸ்வநாதன் ஆனந்த் (முன்னாள் உலக செஸ் சாம்பியன்): தமிழகத்தின் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவரை நான் சிலமுறை சந்தித்து பேசி மகிழ்ந்து இருக்கிறேன். முதல்முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற போது அவர் என்னை பாராட்டியதோடு ஒரு செஸ் போர்டை வழங்கினார். அது மறக்க முடியாத பரிசாகும். அவர் விளையாட்டின் புரவலர். அவரது பேச்சாற்றல் என்னை மிகவும் கவர்ந்த தாகும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், முன்னாள் பேட்ஸ்மேன்கள் வி.வி.எஸ். லட்சுமண், முகமது கைப் மற்றும் சுரேஷ் ரெய்னா, வாஷிங்டன் சுந்தர் உள்பட பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர். 
    ×