search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதி மறைவு- இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஒரு வாரம் தள்ளிப்போகிறது
    X

    கருணாநிதி மறைவு- இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஒரு வாரம் தள்ளிப்போகிறது

    தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி புதுவை இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஒரு வாரம் தள்ளிப்போகிறது. #karunanidhideath #dmk

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேர்தல் வருகிற 11, 12, 13-ந்தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    புதுவை மாநில இளைஞர் காங்கிரசுக்கு தேர்தல் மூலம் இளையராஜா கடந்த 2013-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகள்.

    2016-ம் ஆண்டு இவரின் பதவிக்காலம் முடிவடைந்தது. சட்டமன்ற தேர்தல் குறுக்கிட்டதால் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை கட்சி தலைமை நடத்தவில்லை.

    இந்த நிலையில் 2 ஆண்டுக்கு பிறகு இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தலை கட்சித்தலைமை அறிவித்தது. இதற்காக உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது. இதில் 1½ லட்சம் உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    மாநில, மாவட்ட, வட்டார தலைவர்களுக்கு வேட்புமனு தாக்கல் நடந்து முடிந்துள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனையும் முடிக்கப்பட்டு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி காலமானார். இதனால் ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

    இந்நேரத்தில் தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என்பதால் தேர்தலை தள்ளிப்போட முடிவு செய்துள்ளனர். ஒருவாரம் தேர்தலை தள்ளிவைக்கப்படும் என தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. #karunanidhideath #dmk

    Next Story
    ×