search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk member suicide"

    • கடந்த 3 மாதங்களாக பார் ஏலத் தொகையை கட்ட வில்லை. இதனால் கலால்துறை அதிகாரிகள் பாருக்கு சீல் வைத்தனர்.
    • கடன் பிரச்சினையால் மனமுடைந்த தி.மு.க பிரமுகர் தற்கொலை செய்து கொண்டார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு கடமலைக்குண்டு அருகே தெய்வேந்திர புரத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவர் தி.மு.க. கிளைச் செய லாளராக இருந்தார். குமணன் தொழு பகுதியில் டாஸ்மாக் மது பார் நடத்தி வந்தார். கடந்த 3 மாத ங்களாக பார் ஏலத் தொகையை கட்ட வில்லை. இதனால் கலால்துறை அதிகாரிகள் பாருக்கு சீல் வைத்தனர்.

    மேலும் பல லட்ச ரூபாய் கடன் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. கடன் பிரச்சினை தொடர்பாக மனைவி கவிதாவுடன் தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த முருகன் வீட்டின் பின்புறம் இருந்த புளியமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் முருகனின் உடலை பிரேத பரிசோத னைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • திவாகர் தற்கொலை செய்தது பற்றி அறிந்ததும் கள்ளக்காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • அவர்கள் சிக்கினால் தான் திவாகர் மிரட்டப்பட்டாரா? அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும்.

    பொன்னேரி:

    பொன்னேரி, ஜீவா தெருவை சேர்ந்தவர் திவாகர் (வயது32). நகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராக இருந்தார். இவரது மனைவி ரஞ்சனி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    திவாகர், பொன்னேரியை அடுத்த வேம்பாக்கத்தில் வீட்டு உபயோக பொருட்களை சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வந்தார். இதில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்தார்.

    கடையில் வேலை பார்ப்பதால் அந்த இளம்பெண்ணுடன் திவாகருக்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் நேற்று இரவு வேம்பாக்கத்தில் உள்ள கடையில் திவாகர் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெண் தகராறில் திவாகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையே கடையில் வேலைபார்த்த இளம்பெண்ணுடன் திவாகருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும், இதை அறிந்த கள்ளக்காதலியின் குடும்பத்தினர் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதால் திவாகர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரது மனைவி ரஞ்சனி போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக திவாகரின் மனைவி ரஞ்சனி பொன்னேரி போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் திவாகர் வேம்பாக்கத்தில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை பழுதுபார்க்கும் கடை வைத்து உள்ளார். இங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலைபார்த்த இளம்பெண்ணுடன் எனது கணவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை நான் பலமுறை கண்டித்தேன்.

    இதனால் அந்த பெண்ணுடன் உள்ள தொடர்பை கணவர் விட்டு விடும் நிலை இருந்தது. இந்த நிலையில் அந்த பெண்ணின் தாய், அக்காள் மற்றும் அண்ணன் ஆகியோர் எனது கணவரை ஏமாற்றி விட்டதாக மிரட்டினர்.

    மேலும் ரூ.10 லட்சம் கேட்டனர். கணவரிடம் என்னை விவாகரத்து செய்யும்படியும் கட்டாயப்படுத்தினர். இதனால் கணவர் மிகவும் மனவேதனையில் இருந்தார். அந்த இளம்பெண் ஏற்கனவே வேறு வாலிபரை காதலித்து உள்ளார்.

    அந்த வாலிபரும் எனது கணவரை மிரட்டி இருக்கிறார். வீட்டை விற்று கணவர் பணம் வைத்து இருந்தார். இதனை அறிந்து அவர்கள் பணத்தை பறிக்க தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளனர். இந்த நிலையில் கணவர் திவாகர் தற்கொலை செய்துள்ளார்.

    இதற்கு காரணமான இளம்பெண் மற்றும் அவரது அக்காள், அண்ணன் மற்றும் முன்னாள் காதலன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இதற்கிடையே திவாகர் தற்கொலை செய்தது பற்றி அறிந்ததும் அந்த கள்ளக்காதலி மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அவர்கள் சிக்கினால் தான் திவாகர் மிரட்டப்பட்டாரா? அவரது தற்கொலை முடிவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது தெரியவரும். தி.மு.க. பிரமுகர் தற்கொலை செய்த சம்பவம் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டபடி தாழையூர் தி.மு.க. அலுவலகத்துக்கு தங்கவேல் வந்தார்.
    • கேனில் பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த பி.என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (வயது 85).

    இவர் நங்கவள்ளி தி.மு.க. முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும் மணி, ரத்னவேல் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    இவர் தி.மு.க. மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்றுள்ளார்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை இவர் இந்தி திணிப்பை எதிர்த்து கோஷமிட்டபடி தாழையூர் தி.மு.க. அலுவலகத்துக்கு வந்தார். கேனில் பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் தீப்பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளைத் தாளில் வாசகம் ஒன்று எழுதியுள்ளார்.

    அதில் மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம் தாய்மொழி தமிழ் இருக்க இந்தி எதுக்கு என குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தொண்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கருணாநிதி இறந்ததை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்த திமுக பிரமுகர் துக்கம் தாங்காமல் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த வி.சி.மோட்டூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 39) தி.மு.க. பிரமுகர். இவர் 20 ஆண்டுகளாக கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

    கருணாநிதி இறந்ததை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார். இவர் கருணாநிதி அடக்கம் செய்யும் காட்சியை பார்த்து விட்டு துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு கதறினார்.

    திடீரென அறைக்குள் சென்ற அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாலாஜா போலீசார் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×