search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayalalitha"

    • சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன.
    • அரசு கருவூலத்தில் சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் இல்லை, தங்க நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே இருப்பதாக நீதிபதி கூறினார்.

    பெங்களூரு

    சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பெங்களூரு செசன்சு கோர்ட்டில் நீதிபதி எச்.ஏ.மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக ஏற்கனவே கிரண் எஸ்.ஜவலி நியமிக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து, நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்ற போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தரப்பில் வக்கீல் சத்யமூர்த்தி ஆஜராகி வாதிட்டார்.

    அப்போது ஜெயலலிதாவின் வாரிசு ஜெ.தீபா என்று கூறி சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அறிவித்து, சொத்துகளை ஒப்படைத்துள்ளது. எனவே கர்நாடக அரசு கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் பொருட்கள், பிற உடைமைகளை தீபாவிடமே ஒப்படைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

    இந்த வழக்கில் உங்களது தரப்பில் இருந்து முறையாக மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை, அதனால் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதிபதி கூறினார். மேலும் முறையாக மனு தாக்கல் செய்யும்படி தீபா தரப்பு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    அதே நேரத்தில் நரசிம்மமூர்த்தி கூறியபடி அரசு கருவூலத்தில் சேலைகள் உள்ளிட்ட பொருட்கள் இல்லை, தங்க நகைகள் உள்ளிட்ட ஆபரணங்கள் மட்டுமே இருப்பதாக நீதிபதி கூறினார்.

    இதையடுத்து, அரசு கருவூலத்தில் இருக்கும் பொருட்கள் குறித்து கருவூல துறையிடம் முறையான ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதாக நரசிம்மமூர்த்தி கூறினார். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 26-ந் தேதிக்கு நீதிபதி எச்.ஏ.மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது.
    • ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    காரைக்குடி

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் ஒன்றியம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அரியக்குடியில் நடந்த விழாவில் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தனர்.

    ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.இதில் அரியக்குடி கிளை அவைத் தலைவர் சீனிவாசன், கிளை கழக செயலாளர்கள் சுப்பிரமணியன், செந்தில்நாதன், மோகன், முத்துராஜ், அந்தோணிமகிமை, முருகன், துரைராஜ்குமார், ஊராட்சிமன்ற துணை தலைவர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் என்.ஜி.ஓ.காலனியில் நடந்த விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், தேவிமீனாள், மாவட்ட பேரவை துணை செயலாளர் நாகராஜன், கிளை செயலாளர் மகேந்திர குமார், ஐ.டி.விங் கபிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொது மக்களுக்கு இணிப்புகள் வழங்கினர்.

    இதில் மாவட்ட அவைதலைவர் பழனிச்சாமி, மாவட்ட அம்மா பேரவை தலைவர் அட்லஸ் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் பூலுவபட்டி பாலு, இணைச் செயலாளர் சங்கீதா சந்திரசேகர், மாவட்ட எம் .ஜி .ஆர். மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வர்த்தக அணி செயலாளர் எஸ்.பி. என். பழனிச்சாமி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெய லலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரெட்டி யார்பட்டி நாராயணன், முருகையாபாண்டியன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் பெரிய பெருமாள், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம்,

    ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பி ரமணியன், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், கவுன்சிலர் சந்திரசேகர், நிர்வாகிகள் சீனிமுகம்மது சேட், வெள்ளப்பாண்டி, ஜெய்சன் புஷ்பராஜ், பழையபேட்டை கணேஷ், பாறையடி மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளரும், குமாரகிரி ஊராட்சி தலைவருமான ஜாக்சன்துரை மணி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய உறுதியேற்போம் என்று கோஷம் எழுப்பப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் கோரம்பள்ளத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளரும், குமாரகிரி ஊராட்சி தலைவருமான ஜாக்சன்துரை மணி தலைமை தாங்கினார்.

    வடக்கு மாவட்ட தொழிற்சங்க செயலாளரும், அய்யனடைப்பு ஊராட்சி தலைவருமான ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மதியழகன், ஒன்றிய கவுன்சிலர் தங்கத்துரை, ஒன்றிய அவைத் தலைவர் சுடலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜவகர் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு லட்டுக்களை வழங்கினார்.

    அப்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய உறுதியேற்போம் என்று கோஷம் எழுப்பினர்.

    நிகழ்ச்சியில் புதுக்கோட்டை செயலாளர் துரைராஜ் உட்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் புதுக்கோட்டை பஜார், கூட்டம்புளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

    • சமூக ஆர்வலர் ஜெயலலிதாவின் சேலைகள், காலணிகளை ஏலம் விடும்படி கோரி இருந்தார்.
    • இந்த வழக்கில் நீதிபதி ராமச்சந்திர ஹுத்தார் நேற்று தீர்ப்பு கூறியுள்ளார்.

    பெங்களூரு :

    மறைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக பதவி வகித்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தது. அவரது வீடுகளில் நடத்திய சோதனையில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடி அளவுக்கு சொத்துகளை குவித்தது தெரியவந்தது. இதுகுறித்த வழக்கு பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை தனிக்கோர்ட்டு விசாரித்து வந்தது.

    இந்த வழக்கில் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோா்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனு ஏற்கப்பட்டு, சிறை தண்டனை ரத்து செய்யப்பட்டது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்துவிட்டு, பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டார். இதையடுத்து அவரது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

    சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். அவர்கள் அனைவரும் தண்டனை அனுபவித்த பிறகு விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

    இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் செசன்சு கோர்ட்டில், பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரி ஒரு கடிதம் வழங்கினார்.

    அதே போல் கர்நாடக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் அவர் கடிதம் அனுப்பினார்.

    இந்த நிலையில் பெங்களூரு முதன்மை சிட்டி சிவில் செசன்சு கோர்ட்டில் சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி தாக்கல் செய்த மனுவில், 'சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சேலைகள் மற்றும் காலணிகளை ஏலம் விடும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி இருந்தார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் நீதிபதி ராமச்சந்திர ஹுத்தார் நேற்று தீர்ப்பு கூறியுள்ளார். அதில், ஜெயலலிதாவின் சேலைகள் உள்பட 29 பொருட்களை ஏலம் விட வேண்டும் என்றும், இந்த பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசு ஒரு சிறப்பு வக்கீலை நியமிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, "சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடும்படி அரசுக்கு உத்தரவிட கோரி நான் சிட்டி சிவில் செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். அந்த மனு மீது விசாரணை நடத்தி நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நான் 3 பொருட்களை மட்டும் ஏலம் விட கோரினேன். ஆனால் கோர்ட்டு, சம்பந்தப்பட்ட 29 பொருட்களையும் ஏலம் விடுமாறு உத்தரவிட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதுதொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை விரைவில் சந்தித்து விரைவாக வலியுறுத்த உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள்

    சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக மாநில கஜானாவில் இருக்கும் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களின் விவரம் பின்வருமாறு:-

    11,344 பட்டுப்புடவைகள் உள்ளிட்ட விலை உயர்ந்த சேலைகள், 44 குளிர்சாதன எந்திரங்கள், 33 தொலைபேசிகள், 131 சூட்கேசுகள், 91 கைக்கெடிகாரங்கள், 27 சுவர் கெடிகாரங்கள், 86 மின்விசிறிகள், 146 அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், 34 டீப்பாய்கள், 31 மேஜைகள், 24 மெத்தைகள், 9 உடை அலங்கார டேபிள்கள், 81 அலங்கார தொங்கும் மின்விளக்குகள், 20 ஷோபா செட்டுகள். தங்க சாமி சிலைகள், 750 ஜோடி செருப்புகள், 31 உடை அலங்கார டேபிள் கண்ணாடிகள், 215 மதுபானம் அருந்தும் கண்ணாடி டம்ளர்கள், 3 இரும்பு பெட்டகங்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதன பெட்டிகள், ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 514 மற்றும் ரூ.32 ஆயிரத்து 688 ரொக்கம், 10 டி.வி.க்கள், 8 வி.சி.ஆர்.கள் (வீடியோ பதிவு செய்யும் கருவிகள்), ஒரு வீடியோ கேமரா, 4 சி.டி. பிளேயர், 2 ஆடியோ பிளேயர்கள், 24 ரேடியோ பெட்டிகள் மற்றும் 1,040 வீடியோ கேசட்டுகள்.

    இதுதவிர தங்கம், வைரம், மரகதங்கள், முத்துக்கள், ரத்தின கற்கள், தங்க வளையல்கள், கை செயின்கள், கம்மல்கள், காதுமாட்டிகள், மூக்குத்திகள், வீர வாள்கள், மயில் சிலைகள், விலை உயர்ந்த பன்னீர் சொம்பு, முருக்கு செயின்கள், சந்தன கிண்ணம், தங்க பேனா, தங்க அட்டை, தங்க தட்டு, குங்கும சிமிழ், முதுகு வலிக்கு பயன்படுத்தும் பெல்ட், மோதிரம், தங்க காசு மாலை, தங்க பெல்ட், தங்க சாமி சிலைகள், காமாட்சி விளக்குகள், தங்க கீ செயின், தங்க மாம்பழம், தங்க கைக்கெடிகாரம் ஆகிய பொருட்கள் உள்ளன.

    • ஜெயலலிதா நினைவு நாள் கபடி போட்டி நடந்தது.
    • பாகனேரிசரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அடுத்துள்ள ஏரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் ஆபரத்தனபட்டி பிரபு, சிங்கம்புணரி ஒன்றிய தலைவர் திவ்யாபிரபு ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கபடி போட்டி நடந்து வருகிறது. இதில் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அனிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

    முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.12 ஆயிரம், 3, 4-ம் பரிசாக தலா ரூ.8 ஆயிரம் ரொக்கமும், அம்மா நினைவு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டியை மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் போட்டி நடக்கிறது. தொடக்க நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் அருள்ஸ்டிபன், வழக்கறிஞர் மணிமாறன், பாகனேரிசரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சுப்ரீம் கோர்ட்டுக்கு சமூக ஆர்வலர் 2-வது முறையாக கடிதம் அனுப்பியுள்ளார்.
    • ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    பெங்களூரு :

    சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது. அதை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு வரும்போது, ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் நீக்கப்பட்டது.

    இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். அவர்கள் தண்டனை காலத்தை அனுபவித்து விட்டு வெளியே சென்றுவிட்டனர். இந்த வழக்கின்போது, ஜெயலலிதாவின் வீட்டில் இருந்து 27 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த பட்டு சேலைகள், சால்வைகள், 750 ஜோடி செருப்புகள் ஆகிய பொருட்களும் அடங்கும்.

    இதில் சேலைகள், சால்வைகள், செருப்புகள் ஆகிய 3 பொருட்களும் சேதம் அடையும் வகையானவை என்பதால் அவற்றை ஏலம் விட வேண்டும் என்று கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் அந்த பொருட்கள் இதுவரை ஏலம் விடப்படவில்லை. இந்த நிலையில் இப்போது அவர் 2-வது முறையாக இதே கோரிக்கையை அதாவது அந்த 3 பொருட்களையும் ஏலம் விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கூறுகையில், 'ஜெயலலிதாவின் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் சேலைகள், செருப்புகள், சால்வைகள் ஏலம் விடப்படும் வரை நான் சுப்ரீம் கோர்ட்டுக்கு கடிதம் அனுப்பி கொண்டே இருப்பேன்' என்றார்.

    • ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • வழக்கறிஞர்கள் செல்ல பாண்டியன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகர அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 6-வது ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

    நகரக் செயலாளர் டி. ஜி. சண்முகசுந்தர் தலைமையில், சிங்காரவேலு தெற்கு ஒன்றிய செயலாளர், ஆர். ஜி .எம். பாலகிருஷ்ணன் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னிலையில் ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் உமா மகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி முன்னாள் நகர் மன்ற தலைவர், சுரேஷ் குமார் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர், சுரேந்தர் மாவட்ட மாணவர் அணி செயலாளர், அன்பரசன் நகர அவைத் தலைவர், முருகதாஸ் மாவட்ட பிரதிநிதி, சிதம்பரம் நகர துணை செயலாளர், எம் முருகதாஸ் நகர பாசறை செயலாளர், டி பிரதீப் குமார் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர், கே ஜகபர் நகர எம்ஜிஆர் மன்ற தலைவர், மரியதாஸ் நகர இளைஞரணி செயலாளர், தினேஷ்குமார் நகர மாணவர் அணி செயலாளர், வழக்கறிஞர்கள் செல்ல பாண்டியன், வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
    • இதற்கான ஏற்பாடுகளை அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. செய்துள்ளார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையில் எம்.ஜி.ஆர். சிலை அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திரு உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி மாவட்ட செயலாளரும், பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமையில் அந்த கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் நிலை யூர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே. சந்திரன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் கவிஞர் மோகன்தாஸ், பகுதி துணைச் செயலாளர் செல்வகுமார், வட்ட செயலாளர் பொன்.முருகன், நாகரத்தினம், முத்துக்குமார், பாலா, என்.எஸ்.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கிரிவலப் பாதையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கையால் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார்.
    • பிரதமரோ, மத்திய அமைச்சர்களோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை இறுதி தீர்ப்பல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

    ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை தீர்ப்பு அல்ல, அது ஒரு பரிந்துறை. எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது, ​​அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் இந்திரா காந்தி. இதனால்தான் எம்.ஜி.ஆர். உயிர் பிழைத்தார். 


    அதேபோல், பிரதமரோ அல்லது மாநில அரசில் உள்ள அமைச்சர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மோடி செயல்பட்டிருந்தால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை.
    • சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கையில் வி.கே.சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் ராமமோகன ராவ் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தொடர்பாக அரசாங்கம் முடிவு செய்து விசாரிக்கலாம் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட 8 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஆணைய அறிக்கையின் பரிந்துரை மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×