என் மலர்
உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
- அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா நடந்தது.
- ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
காரைக்குடி
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பில் ஒன்றியம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அரியக்குடியில் நடந்த விழாவில் சாக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.சாக்கோட்டை ஒன்றிய சேர்மன் சரண்யா செந்தில்நாதன், அரியக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா முன்னிலை வகித்தனர்.
ஜெயலலிதா படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.இதில் அரியக்குடி கிளை அவைத் தலைவர் சீனிவாசன், கிளை கழக செயலாளர்கள் சுப்பிரமணியன், செந்தில்நாதன், மோகன், முத்துராஜ், அந்தோணிமகிமை, முருகன், துரைராஜ்குமார், ஊராட்சிமன்ற துணை தலைவர் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கராபுரம் என்.ஜி.ஓ.காலனியில் நடந்த விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், தேவிமீனாள், மாவட்ட பேரவை துணை செயலாளர் நாகராஜன், கிளை செயலாளர் மகேந்திர குமார், ஐ.டி.விங் கபிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






