search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "inspection"

    • புதுக்கோட்டையில் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்
    • விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி ஊராட்சி, சிதம்பரவிடுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ்  கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின் போது பணிகளை விரைவாகவும், நேர்த்தியாகவும் முடிக்க அவர் உத்தரவிட்டார்.  வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன், இந்திராகாந்தி, ஊராட்சிமன்றத் தலைவர் மெய்யநாதன் மற்றும் அரசுஅலுவலர்கள்  இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்.

    குழந்தைகளுக்கு சத்துணவு நல்ல முறையில் வழங்குகிறார்களா என்று சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.


    வால்பாறை,

    கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 80-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளது. வால்பாறை அருகே 11 வது வார்டு உட்பட்ட பச்சமலை எஸ்டேட் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 2ஆசிரியர்களும், 23 பள்ளி குழந்தைகளும் படித்து வருகின்றனர்.

    இதில் வட மாநில மாணவர்களும் படித்து வருகின்றனர். 11-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் அப்பகுதிக்கு சென்று பழமையான பள்ளி கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு ஆய்வு செய்தார்.

    பின்னர் பள்ளி குழந்தைகளின் சத்துணவு மையத்தை ஆய்வு செய்தார். குழந்தைகளுக்கு சத்துணவு நல்ல முறையில் வழங்குகிறார்களா என்று சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

    • காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காதி பொருட்களின் விற்பனை, வடிக்கையாளர்களின் வருகை, காதி பொருட்களின் தரம், இருப்பு உள்ளிட்ட வைகளை குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் நாமக்கல் கதர் உப கிளையில் ஆய்வு மேற்கொண்டு கதர் ஆடைகளின் தரம், மதிப்பு உள்ளிட்டவைகளை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பஸ் நிலைய காதி கிராப்ட் விற்பனை நிலையம் பூமாலை வணிக வளாகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள கதர் கிராம தொழில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சுரேஷ்குமார் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

    காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காதி பொருட்களின் விற்பனை, வடிக்கையாளர்களின் வருகை, காதி பொருட்களின் தரம், இருப்பு உள்ளிட்ட வைகளை குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து மோகனூர் சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மோகனூர் எழில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாய உற்பத்தி பொருட்கள் நேரடி கொள்முதல் மையத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டு தயாரிப்புகள் குறித்து கேட்டறிந்து நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சோப்பு உற்பத்தி அலகு கட்டடத்தை பார்வையிட்டு பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு பிற துறைகளுக்கு பயன்பாட்டிற்கு வழங்கலாம் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் நாமக்கல் கதர் உப கிளையில் ஆய்வு மேற்கொண்டு கதர் ஆடைகளின் தரம், மதிப்பு உள்ளிட்டவைகளை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்
    • எண்ணைய்‌ ஆலை, பண்டகசாலை, அச்சகம்‌ உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றது

    புதுக்கோட்டை, 

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மரு.ந.சுப்பையன் புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூட்டு றவு சங்கங்களில் ஆய்வு செய்தார்.திருமயம் வேளாண்மைஉற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், திருமயம் கூட்டுறவு வேளாண் மற்றும்ஊரக வளர்ச்சி வங்கி, புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி திருமயம்கிளை ஆகிய இடங்களிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும்அச்சங்கத்தின் பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் செயல்படும் கடலைஎண்ணைய் ஆலை, புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைபண்டகசாலையின் சுய சேவை பிரிவு மற்றும் கிட்டங்கி மற்றும் மாவட்ட கூட்டுறவுஅச்சகம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு சங்கங்களின் செயல்பாடு கள்குறித்து அறிவுரைகள் வழங்கினார்.அதனை தொடர்ந்து வங்கிவாடிக்கையாளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைமையிடத்தில் டாப்செட்கோ கடன், கைம்பெண்கள் கடன், மகளிர்தொழில்முனைவோர் கடன், வீடடு வசதி கடன், சுய உதவி குழுக் கடன் மற்றும் சிறுவணிககடனாக 61 பயனாளிகளுக்கு ரூ.52.30 லட்சம் அளவிற்கு கடனுதவிவழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டலஇணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், புதுக்கோட்டை மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் செயலாட்சியருமான தனலெட்சுமி,புதுக்கோட்டை சரகத் துணைப்பதிவாளர் அப்துல் சலீம், அறந்தாங்கிசரகத் துணைப்பதிவாளர் ஆறுமுகப்பெருமாள், துணைப்பதிவாளரும்முதன்மை வருவாய் அலுவலருமான மண்வண்ணன் மற்றும் மொத்த விற்பனைபண்டகசாலையின் கூட்டு றவு சார்பதிவாளரும் செயலாட்சியருமான வினிதாஆகியோர் கலந்துகொண்டனர்.

    • கந்தர்வகோட்டையில் நெற்பயிரில் இலைசுருட்டு, குருத்து பூச்சி தாக்குதல் ஏற்பட தொடங்கி உள்ளது
    • உதவி இயக்குனர் தலைமையில் வேளாண் துறையினர் ஆய்வு

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை வட்டா ரத்தில் நடப்பு ஆண்டு சம்பா பருவத்தில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ள பட்டது. தற்போது நிலவி வரும் தட்பவெப்பநிலை காரணமாக நெல்பயிரில் இலைசுருட்டு புழு மற்றும் குருத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை முன்னிட்டு வேளாண்மை உதவி இயக்குநர்அன்பரசன் தலைமையில் வேளாண் துறை களப்பணியாளர்கள் துவார், அக்கச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    • ஒவ்வொரு மணல் குவாரியிலும் விற்பனையான மணல் அளவு, அதற்கான பில் போன்றவற்றை சமர்பிக்கும்படி அறிக்கை கேட்டனர்.
    • நீர்வளத்துறை முதன்மை செயற்பொறியாளர் முத்தையா மற்றும் செயற் பொறியாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    சென்னை:

    தமிழகத்தில் மணல் விற்பனையை அரசின் நீர்வளத்துறை நேரடியாக செய்து வருகிறது. இடைத்தரகர்கள் இல்லாமல் மக்களுக்கு குறைவான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு மணல் விற்பனையை செய்கிறது.

    ஒரு யூனிட் மணல் விலை ரூ.1000-க்கும் மணலை யார்டுக்கும் கொண்டு வந்து ஒப்பந்ததாரர் வழங்க ரூ.1680 என மொத்தம் ரூ.2680 வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் அரசு மணல் விற்பனையில் தவறுகள் நடப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 12-ந் தேதி சோதனையில் ஈடுபட்டனர். திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதனால் கடந்த ஒரு மாதமாக மணல் விற்பனை முழுமையாக நடைபெறவில்லை. ஆறுகளில் இருந்து மணல் எடுக்கப்படவில்லை. யார்டுகளில் உள்ள மணல் மட்டும் மிக குறைந்த அளவில் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். ஒவ்வொரு மணல் குவாரியிலும் விற்பனையான மணல் அளவு, அதற்கான பில் போன்றவற்றை சமர்பிக்கும்படி அறிக்கை கேட்டனர்.

    இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீர்வளத்துறை முதன்மை செயற்பொறியாளர் முத்தையா மற்றும் செயற் பொறியாளர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் முதன்மை பொறியாளர் முத்தையா, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதுவரையில் ஆற்று மணல் எடுக்கப்பட்ட அளவு விவரம், விற்பனை செய்த அளவு, அதற்கான பில் போன்றவற்றை அதிகாரிகள் அவரிடம் கேட்டனர். அம லாக்கத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர்.

    • ஒவ்வொரு பூத்கமிட்டியிலும் ஆய்வு செய்து புத்தகத்தில் கையெழுத்திட்டனர்
    • சிறப்பாக செயல்பட்ட ஊட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி, மகளிர் குழு இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆகிய பணிகள் நிறைவுபெற்றன.

    தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளரும், புரட்சித்தலைவிஅம்மா பேரவை மாநில இணை செயலாளருமான பொன்ராஜா தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் முன்னிலை வகித்தார்.தொடர்ந்து அனைத்து ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகி மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒவ்வொரு பூத்கமிட்டியிலும் பொறுப்பாளர் ஆய்வு செய்து புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

    பின்னர் சிறப்பாக செயல்பட்ட ஊட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர்அணி பாலநந்தகுமார், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தேனாடு லட்சுமணன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் டி.கே.தேவராஜு, பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு, ஊட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பா.குமார், குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்தின், பேரூராட்சி செயலாளர் கேத்தி கண்ணபிரான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் எப்பநாடு கண்ணன், மீனவரணி மாவட்ட செயலாளர் விஷாந்த் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார் பார்வையிட்டார்.
    • விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையும் கிருஷ்ணகுமார் ஆய்வு செய்தார்.

    அம்பை:

    அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர் நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகி உள்ளது.

    அவ்வாறு பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார் பார்வை யிட்டார். குறிப்பாக ஆலடியூர்-2 கிராமத்தில் சமீபத்தில் பெய்த மழை யினால் சாய்ந்த நெல் வயல்களை பார்வையிட்டார்.

    அங்கு இருந்த விவசாயிகளிடம் பாதிப்பு குறித்த விபரங்கள் கேட்டறிந்தார். உடன் அம்பாசமுத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் கற்பகராஜ்குமார், வேளாண்மை துணை வேளாண்மை அலுவலர் திவான் பக்கீர் முகைதீன், உதவி வேளாண்மை அலுவ லர் சாமிராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் திருமலைக்குமார், இசக்கி முத்து, கிராம உதவியாளர் ரபீக் மற்றும் அப்பகுதி விவசாயிகள் உடனிருந்தனர். வேளாண் மைத்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களை பாதிப்பு குறித்து விவசாயிகள் வாரி யாக கணக்கெடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் அவர் விக்கிரமசிங்க புரத்தில் உள்ள துணை வேளா ண்மை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து விதைகள் விநியோகம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி அம்பாசமுத்திரத்தில் உள்ள சில்லரை உரவிற்பனை கடையினை திடீர் ஆய்வு மேற்கொண்டார். உரங்கள் விற்பனை மற்றும் இருப் பினை ஆய்வு செய்தார். இருப்பு வித்தியாசம் இருந்த உரக்கடைக்கு விற்பனை தடை விதிக்கப் பட்டது.

    ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மை அலு வலர் ஷாஹித் முகையதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

    வேலாயுதம்பாளையம் பகுதியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

    வேலாயுதம்பாளையம் , 

    கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்ப டுத்தப்படும் வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தங்க வேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் கோம்பு பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ) மாவட்ட கலெக்டர் தங்கவேல் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொ ள்ளப்ப ட்டு வரும் பல்வேறு வ ளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புஞ்சை தோட்டக்குறிச்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைநேய பள்ளி திட்டத்தின் கீழ் ரூ.31.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணிகளை பார்வையிட்டார். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    தொடர்ந்து அதே பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை பார்வை யிட்டு நாள்பட்ட முட்டை களை கழிவு செய்து விட வேண்டும். அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் தரம் குறைவாக காணப்ப ட்டால் அலுவலர்களை தொடர்பு கொண்டு உணவுப் பொருட்களில் தரம் குறித்து தெரிவிக்க வேண்டும். என்று தெரிவித்தார்

    அதேபோல் கோம்புபாளையம் ஊரா ட்சிக்கு உட்பட்ட நவலடி நகரில் ரூ.4 லட்சம் மதிப்பீ ட்டில் அமைக்க ப்பட்டுள்ள சிமெ ண்ட் சாலை பணியினை பார்வை யிட்டார்.

    பின்னர் புன்னம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை பார்வையிட்டு மாணவர்க ளுக்கு உரிய நேரத்தில் உணவினை வழங்கி நல்ல சுவையாகவும் ,தரமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சண்முக வடிவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) தேன்மொழி, உதவி பொறியா ளர் பூர்ணா தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ண மூர்த்தி, நீலகண்டன், விஜயலெட்சுமி, செல்வி, கோம்புப் பாளையம்ஊ ராட்சி மன்ற தலைவர் பசுபதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சுத்திகரிக்கும் நீரை எவ்வாறு கொண்டு வருவது, வெளியேற்றும் வழிகள் ஆகியவை குறித்து ஆலோசனை
    • வருவாய் கோட்டாட்சியர் பண்டரினாதன் மற்றும்பேரூராட்சி தலைவர்கள் பங்கேற்பு

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளபாளையம் பேரூராட்சி, சூலூர் பேரூ ராட்சி, இருகூர் பேரூராட்சி மற்றும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலத்தை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, சுத்திகரிக்கும் நீரை எவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு கொண்டு வருவது அதை வெளியேற்றும் வழிகள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் பண்டரினாதன், சூலூர் தாசில்தார் நித்திலவள்ளி, மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பெலிக்ஸ், தலைமை எழுத்தர் சாமிநாதன், பேரூராட்சி தலைவர் சசிகுமார், சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவிமன்னவன், சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சசிகுமார், பேரூராட்சி தலைமை எழுத்தாளர் கோவிந்தராஜன், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ்.செல்வராஜ், செயல் அலுவலர் சுந்தர்ராஜன், தலைமை எழுத்தர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மணமேல்குடி, ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைகளில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்
    • உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா?, குறைகள் ஏதேனும் உள்ளதா? என நோயாளிகளிடம் கேட்டறிந்தார்

    புதுக்கோட்டை,

    மணமேல்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பற்றாக்குறை உள்ளதாகவும், மருத்துவமனை சுகாதாரமற்று இருப்பதாகவும் மணமேல்குடி வர்த்தக நல சங்கத்தினர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா மணமேல்குடி அரசு மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அங்கு இருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் வர்த்தக நல சங்க நிர்வாகிகளிடம் குறைகள் அனைத்தும் சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இந்த ஆய்வின்போது மணமேல்குடி தாசில்தார் சேக் அப்துல்லா, மணமேல்குடி இன்ஸ்பெக்டர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி, வர்த்தக சங்க தலைவர் கணேசன், வணிகர் சங்க நிர்வாகி சாமியப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    இதேபோல் ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா திடீரென ஆய்வு செய்தார். அப்போது அங்கு நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா?, குறைகள் ஏதேனும் உள்ளதா? என நோயாளிகளிடமும், போதிய மருத்துவ உபகரணங்கள் உள்ளனவா? என டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார். இந்த ஆய்வில் ஆவுடையார்கோவில் தாசில்தார் மற்றும் மருத்துவத்துறையினர், வருவாய் துறையினர் உடன் இருந்தனர்.

    • பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
    • சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலைய பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பட்டாசு கடைகளை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். அப்போது பட்டாசு கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து நிருபர்க ளிடம் அவர் கூறியதாவது:-

    பட்டாசு கடைகளில் அரசின் அறிவுறுத்தல் படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. சேலம் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் இரும்பாலை பகுதி என மொத்தம் 143 தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு கடைகளுக்கும் 3½ இடைவெளி விட்டு கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சிவகாசியில் இருந்து அதிக அளவில் புதிய பட்டாசுகள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடையிலும் 30 முதல் 40 லட்சம் வரை பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    விபத்து இல்லாமல் மாசற்ற வகையில் தீபாவளியை அனைவரும் கொண்டாட வேண்டும். அரசின் அறிவுறுத்தல் படி அனைவரும் ஒத்துழைத்து பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×