என் மலர்
நீங்கள் தேடியது "Ambasamuthiram"
- மகளிர் தின விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார்.
- சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு பேசினார்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கல்லூரி உள் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தீபாலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலர் டாக்டர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளருமான விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை தங்க செல்வி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆயிஷாள் பீவி நன்றி கூறினார். கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் டாக்டர் வேலையா, உதவிப் பேராசிரியர் தனலெட்சுமி, பேராசிரியர் சிவக்குமார் மற்றும் கல்லூரியின் ஏனைய பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.
- இந்த ஆண்டுக்கான மாசி மகா ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
- ஊர்வலத்திற்கு முன்பாக சிறுவர், சிறுமிகளின் கோலாட்டம் நடைபெற்றது.
சிங்கை:
அம்பை அருகே உள்ள வாகைக்குளம் வாகைபதியில் ஒவ்வொரு ஆண்டும் அய்யா அவதார தினத்தன்று மாசி மகா ஊர்வலம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மாசி மகா ஊர்வலம் நேற்று மாலை தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அம்பை கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வகைபதி அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளினார்.
ஊர்வலம் தொடங்கி மேற்கு நோக்கி அம்பாசமுத்திரம் பூக்கடை பஜார் வழியாக அகஸ்தியர் கோவில், வண்டி மறிச்சி அம்மன் இராணிஸ் ஸ்கூல் வழியாக தென்காசி சாலை யில் வாகைக்குளம் விலக்கு வழியாக வாகைக்குளம் வாகைபதிக்கு சென்றடைந்தது.
இந்த மகா ஊர்வலத்தில் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 32 பதிகளில் இருந்துஅய்யா வைகுண்டர் அனுமன்,பல்லக்கு,தொட்டில்,கருடன், காளி,காளை,நாகம்,வேல், பூம்பல்லக்கு போன்ற பல வாகனங்களில் அய்யா வைகுண்டர் எழுந்தருளி மக்களுக்கு அருள் ஆசி வழங்கி ஊர்வலமாக வந்தார். ஊர்வலத்திற்கு முன்பாக சிறுவர், சிறுமிகளின் கோலாட்டமும், இளைஞர்களின் செண்டை மற்றும் சிங்காரி மேளமும், அய்யா ஹர ஹர என்ற கோஷம் முழங்கஊர்வலம் நடைபெற்றது. அம்பாச முத்திரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
ஊர்வலம் வாகைக்குளம் வாகைபதி வந்தடைந்ததும் அங்கு சிறப்பு பணிவிடைகள் செய்யப்பட்டு அனை வருக்கும் அன்னதர்மம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு பதிகளுக்கும் வாகன வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாகைபதி அய்யாவழி அன்பு கொடி மக்களும், சுற்றுவட்டார அன்பு கொடிமக்களும் செய்திருந்தனர்.
- மகா சிவராத்திரியை முன்னிட்டு அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
- சிவராத்திரி பூஜைகள் இன்று அதிகாலை வரை நடந்தது.
கல்லிடைக்குறிச்சி:
மகா சிவராத்திரியை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், அம்பாசமுத்திரம் பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பர் மற்றும் வடிவாம்பிகை அம்பாள் கோவில் மகா சிவராத்திரி பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை வரை சிவன் கோவில்களில் சிவராத்திரி பூஜைகள் நடந்தது. இதற்காக பக்தர்கள் இரவு முழுவதும் சிவாலயங்களில் இருந்து விடிய, விடிய நடந்த 4 கால பூஜைகளில் கலந்து கொண்டனர்.
- சூழல் சரக வனக்குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார திறன் மேம்பாட்டிற்காக ஆரி எம்பிராய்டரிங்க் ஒர்க் தையல் பயிற்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலர் அன்பு தலைமை தாங்கினார்
கல்லிடைக்குறிச்சி:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பை மற்றும் பாபநாசம் சூழல் சரக வனக்குழு உறுப்பினர்களுக்கு வாழ்வாதார திறன் மேம்பாட்டிற்காக ஆரி எம்பிராய்டரிங்க் ஒர்க் தையல் பயிற்சி நடைபெற்றது.
அம்பையில், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு அலுவலர் அன்பு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வனச்சரக அலுவலர் கிருஷ்ண மூர்த்தி, வனவர் மோகன்தாஸ், பயிற்சி நிலைய நிறுவனர் பிரியா மற்றும் சூழல் மேம்பாட்டு தன்னார்வலர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.