அம்பை கலைக்கல்லூரியில் மகளிர் தினவிழா

மகளிர் தின விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு பேசினார்.
மகளிர் தினவிழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
மகளிர் தினவிழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

கல்லிடைக்குறிச்சி:

அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரியில் சர்வதேச மகளிர் தினவிழா கல்லூரி உள் அரங்கத்தில் நடந்தது. விழாவிற்கு அம்பை கலைக்கல்லூரி முதல்வர் சவுந்திரராஜா தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் தீபாலட்சுமி வரவேற்றார். கல்லூரி செயலர் டாக்டர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி.யும், தி.மு.க. மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளருமான விஜிலா சத்தியானந்த் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியை தங்க செல்வி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆயிஷாள் பீவி நன்றி கூறினார். கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் டாக்டர் வேலையா, உதவிப் பேராசிரியர் தனலெட்சுமி, பேராசிரியர் சிவக்குமார் மற்றும் கல்லூரியின் ஏனைய பேராசிரியர்கள், அலுவலர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com