search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chief Executive Officer"

    • காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காதி பொருட்களின் விற்பனை, வடிக்கையாளர்களின் வருகை, காதி பொருட்களின் தரம், இருப்பு உள்ளிட்ட வைகளை குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
    • தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் நாமக்கல் கதர் உப கிளையில் ஆய்வு மேற்கொண்டு கதர் ஆடைகளின் தரம், மதிப்பு உள்ளிட்டவைகளை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பஸ் நிலைய காதி கிராப்ட் விற்பனை நிலையம் பூமாலை வணிக வளாகம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள கதர் கிராம தொழில் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய தலைமை செயல் அலுவலர் சுரேஷ்குமார் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.

    காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காதி பொருட்களின் விற்பனை, வடிக்கையாளர்களின் வருகை, காதி பொருட்களின் தரம், இருப்பு உள்ளிட்ட வைகளை குறித்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து மோகனூர் சாலையில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மோகனூர் எழில் உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாய உற்பத்தி பொருட்கள் நேரடி கொள்முதல் மையத்தில் உள்ள பொருட்களை பார்வையிட்டு தயாரிப்புகள் குறித்து கேட்டறிந்து நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சோப்பு உற்பத்தி அலகு கட்டடத்தை பார்வையிட்டு பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு பிற துறைகளுக்கு பயன்பாட்டிற்கு வழங்கலாம் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் நாமக்கல் கதர் உப கிளையில் ஆய்வு மேற்கொண்டு கதர் ஆடைகளின் தரம், மதிப்பு உள்ளிட்டவைகளை குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வில் மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புள்ள 9,259 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளதாக தலைமை செயல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். #Tirupati

    திருமலை:

    திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான 1381 கிலோ தங்கத்தை சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் வழங்கிய பின்னர் 1381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

    சென்னையில் இருந்து திருப்பதிக்கு தங்கக்கட்டிகள் கொண்டு செல்லப்பட்டதில், தேவஸ்தானம் சரியான பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்கவில்லை என்றும், ஆவணங்கள் இன்றி தேவஸ்தானத்தின் தங்கக்கட்டிகளை கொண்டு சென்றதில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன என்றும் கூறி, இது தொடர்பாக ஆந்திர அரசு மற்றும் ஆந்திர அரசியல் கட்சிகள் விவாதிக்க முன்வரவேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

    இந்தநிலையில் 1381 கிலோ தங்கக்கட்டிகள் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட வி‌ஷயத்தில் சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்று விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஆந்திர மாநில தலைமை செயலர் சுப்ரமணியன் உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கத்தில் 1,938 கிலோ தங்கம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலும், 5,387 கிலோ தங்கம் பாரத ஸ்டேட் வங்கியிலும், 1,381 கிலோ தங்கம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியிலும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இது தவிர திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் 553 கிலோ தங்கம் உள்ளது. மொத்தம் ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புள்ள 9,259 கிலோ தங்கம் தேவஸ்தானத்திடம் இருப்பு உள்ளது.

    இதில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 1,311 கிலோ தங்கம் 3 ஆண்டு காலத்தில் 1.75 சதவீதம் வட்டியுடன் மீண்டும் தங்கமாக பெறும் விதமாக முதலீடு செய்யப்பட்டது. மூன்றாண்டு காலக்கெடு கடந்த 18-ந் தேதியுடன் நிறைவு பெற்றது.

    வட்டியாக கிடைத்த 70 கிலோ தங்கத்துடன் சேர்த்து மொத்தம் 1,381 கிலோ தங்கத்தை பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அதிகாரிகள் சென்னையில் இருந்து திருப்பதிக்கு கொண்டு வரும்போது தேர்தல் அதிகாரிகள் அதனை பிடித்தனர்.

    ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தேவஸ்தானத்திற்கு நோட்டீஸ் வழங்கினர். உடனடியாக சென்னை சென்று தமிழக போலீசாரிடமும், தேர்தல் அதிகாரிகளிடமும் தங்கத்தின் விவரங்கள் குறித்த ஆவணங்களை வழங்கினோம்.

    இதையடுத்து உரிய ஆவணங்களை வழங்கி திருமலை திருப்பதி தேவஸ்தான கருவூலத்திற்கு பத்திரமாக 1,381 கிலோ தங்கத்தை கொண்டு வந்துள்ளோம்.

    வங்கிகளில் தேவஸ்தானம் டெபாசிட் செய்துள்ள தங்கத்தை, டெபாசிட் காலம் முடிந்த பின்னர் திருப்பதிக்கு கொண்டு வந்து தேவஸ்தானத்தின் கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டியது வங்கிகளின் கடமை ஆகும்.

    எனவே, சென்னையில் இருந்து ஆயிரத்து 381 கிலோ தங்கக்கட்டிகளை கொண்டு வந்த வி‌ஷயத்தில் தேவஸ்தானம் சரியான நடைமுறைகளை பின்பற்றியதா என்ற கேள்விக்கே இடமில்லை. ஆந்திர மாநில தலைமை செயலரின் விசாரணை ஆணையை நாங்கள் வரவேற்கிறோம் என்றார்.

    இதன்மூலம், தேவஸ்தானத்திடம் இப்போதைய மார்க்கெட் மதிப்பின்படி, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 9 ஆயிரத்து 259 கிலோ தங்கம் இருப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது. #Tirupati

    ×