என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை கலெக்டர் ஆய்வு
    X

    புதுக்கோட்டை கலெக்டர் ஆய்வு

    • புதுக்கோட்டையில் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை கலெக்டர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார்
    • விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், தாந்தாணி ஊராட்சி, சிதம்பரவிடுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமானப் பணிகளை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பணிகளை விரைவாகவும், நேர்த்தியாகவும் முடிக்க அவர் உத்தரவிட்டார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலன், இந்திராகாந்தி, ஊராட்சிமன்றத் தலைவர் மெய்யநாதன் மற்றும் அரசுஅலுவலர்கள் இந்த ஆய்வின் போது உடனிருந்தனர்.

    Next Story
    ×