search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Independence Day"

    • விழாவில் இசக்கி சுப்பையா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.
    • கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி இசக்கி வித்யாஷ்ரம் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அம்பை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் இசக்கி குழுமத்தின் நிறுவனருமான இசக்கி சுப்பையா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

    இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் டாக்டர்.மோனிகாடீ சோசா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். இவ்விழாவில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இசக்கி வித்யாஷ்ரம் நிர்வாகம் சார்பாக இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • கீழக்கடையம் ஊராட்சியில் அதன் தலைவர் பூமிநாத் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
    • தெற்கு மடத்தூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் பிரேமராதா ஜெயம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டார்.

    கடையம்:

    கடையம் யூனியனுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. கோவிந்தபேரி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கி ஊராட்சி அலுவலகத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். பின்னர் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை கலெக்டர் கவிதா பங்கேற்றார்.

    மேலும் ஊராட்சி இயக்குனர் தணிக்கை ருக்மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) திருமலை, முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஊராட்சி செயலர் மூக்காண்டி, துணைத்தலைவர் இசேந்திரன், வார்டு உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், மாரிதுரை, சிங்கக்குட்டி, வெள்ளத்துரை, ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    இதேபோல் கீழக்கடையம் ஊராட்சியில் அதன் தலைவர் பூமிநாத் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். தெற்கு மடத்தூர் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் பிரேமராதா ஜெயம் தேசிய கொடியினை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் மரக்கன்றுகள் நட்டார். இதில் துணைத் தலைவர் சிவக்குமார், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ரவணசமுத்திரம் ஊராட்சியில் முகமது உசேன், தெற்கு கடையம் ஊராட்சியில் முத்துலெட்சுமி, சேர்வைகாரன்பட்டி ஊராட்சியில் ரவிச்சந்திரன், ஏ.பி. நாடானூர் ஊராட்சியில் அழகுதுரை, பொட்டல்புதூர் ஊராட்சியில் கணேசன், துப்பாக்குடி ஊராட்சியில் செண்பகவல்லி ஜெகநாதன், பாப்பான்குளம் ஊராட்சியில் முருகன், கீழாம்பூர் ஊராட்சியில் மாரிசுப்பு, மேலாம்பூர் ஊராட்சியில் குயிலி லெட்சுமணன், திருமலையப்பபுரம் ஊராட்சியில் மாரியப்பன், மடத்தூர் ஊராட்சியில் முத்தமிழ் செல்வி ரஞ்சித் , அஞ்சாங்கட்டளை ஊராட்சியில் முப்புடாதி பெரியசாமி, மந்தியூர் ஊராட்சியில் கல்யாணசுந்தரம் தலைமையிலும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் அரசு அதிகாரிகள், பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நற்பணி மன்றம் சார்பில் முடங்கியார் ரோட்டில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
    • அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோவில் நற்பணி மன்றம் சார்பில் முடங்கியார் ரோட்டில் சுதந்திர தின விழா நடைபெற்றது. மன்ற தலைவரும், சமூக சேவகருமான ராமராஜ் தலைமை தாங்கினார். பண்ணையார் ஆர்ச் என்று அழைக்கப்படும் சுதந்திர தின நினைவு வளைவில் தேசியக்கொடியை தீயணைப்பு நிலைய அதிகாரி ஸ்ரீனிவாசன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் என்.சி.எம். ராதாகிருஷ்ணராஜா, கணேஷராஜா,முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் தேசிங்குராஜா ராஜூக்கள் கல்லூரி என்.சி.சி மாணவர்கள், மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது

    • பெண்கள் பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

    ராஜபாளையம்,

    ராஜபாளையம் எஸ்.எஸ்.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. பேசுகையில், ஓரிரு வாரங்களில் மிதிவண்டி வழங்கப்படும், ராஜ பாளையம் தொகுதியில் கடந்த வருடம் அரசு பள்ளி களில் ஆண்டுவிழா நடத்தப்பட்டது.

    அதுபோல் இனிவரும் வருடங்களில் அரசே தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார். தொடர்ந்து போட்டி களில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது. இதில் தி.மு.க. நகர செயலா ளர்கள் ராம மூர்த்தி, மணிகண்டராஜா நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சுதந்திர தினவிழா நடந்தது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

    விழாவில் நகர செய லாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் செல்வமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோபி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் இளங்கோ, நகர துணை செயலாளர் மோகன், ஷாஜஹான், நாலு கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் காஜா, பழனி, மாரிமுத்து, வட்ட செயலாளர் முருகன், மாவட்ட பாசறை பொரு ளாளர் சரவணன், மின்வா ரிய திட்ட செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பாசறை இணை செயலாளர் சதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெற்குப்பையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. பேரூராட்சி சேர்மன் பழனியப்பன் (பொறுப்பு) தலைமை வகித்தார்.

    இளநிலை உதவியாளர் சேரலாதன், வரித்தண்டர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் கவுரவிக்கப் பட்டனர். தூய்மை பணியா ளர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. பின்னர் பிடாரி அம்மன் கோவிலில் தூய்மை பணி நடந்தது.

    • தொண்டியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா வரவேற்றார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணை தலைவர் பால சுப்பிரமணியன் கொடியேற்றினர்.நகர் தலைவர் காத்த ராஜா இனிப்பு வழங்கினார். தனியார் மின் பணியாளர்கள் சங்கம் சார்பில் கவுரவ தலைவர் ஜவஹர் அலிகான் தேசிய கொடியை ஏற்றினார். பாவோடி ஆட்டோ சங்கம், அக்ரஹாரம் குடியிருப்போர் சங்கம் சார்பில் தேசியகொடி ஏற்றப்பட்டது. கிங் பீட்டர் இனிப்பு வழங்கினார்.

    திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தேசியகொடி ஏற்றினார். பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜெயந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா வரவேற்றார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    • முதுகுளத்தூர் அருகே சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ் தேசிய கொடி எற்றி வைத்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தலைமை துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலகப் பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்தில் சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ் தேசிய கொடி எற்றி வைத்தார். ஆணையாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வெங்கல குறிச்சி கிராமத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செங்கோட்டையில் பிரதமர் மோடி 10-வது முறையாக நேற்று கொடியேற்றினார்
    • அவரது இரண்டு முறை பிரதமர் பதவி காலத்தில் கடைசி சுதந்திர தின உரை

    சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அடுத்த முறையும் டெல்லி செங்கேட்டையில் கொடியேற்றுவேன். இந்தியாவின் சாதனைகளை நாட்டு மக்களுக்கு பட்டியலிடுவேன் எனக் கூறினார்.

    மோடியின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் விமர்சன கருத்துகளை தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ''பிரதமர் மோடி அடுத்த வருடம் அவரது வீட்டில்தான் கொடி ஏற்றுவார்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இது செங்கோட்டையில் மோடியின் கடைசி கொடியேற்றம் என லல்லு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.-வின் மாநிலங்களவை எம்.பி., மல்லிகார்ஜூன கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தம்பிதுரை கூறுகையில் ''பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. இந்தியாதான் அவரது குடும்பம், செங்கோட்டைதான் அவரது வீடு. பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில்தான் தேசியகொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார்'' என்றார்.

    • 4 வீரர்களும் சேர்ந்து தேசிய கொடியுடன் கூடிய கம்பியை கடலுக்குள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஊன்றினர்.
    • பாம்பன் ரோடு பாலம், கப்பல் நிறுத்தும் தளம் உள்ளிட்ட இடங்களிலும் கொண்டாடினார்கள்.

    ராமநாதபுரம்:

    நாடு முழுவதும் சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், இந்திய கடலோர காவல் படையினரும் உற்சாகமாக கொண்டாடினார்கள். இதையொட்டி கடல், கடற்கரை, கப்பல்களில் தேசியக்கொடி ஏற்றினார்கள்.

    மூழ்கு நீச்சலில் (ஸ்கூபா டைவிங்) நிபுணத்துவம் பெற்ற கடலோர காவல் படை வீரர்கள் 4 பேர் இணைந்து, தேசியக்கொடியுடன் கடலுக்குள் நீந்திச்சென்றனர். 4 வீரர்களும் சேர்ந்து தேசிய கொடியுடன் கூடிய கம்பியை கடலுக்குள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஊன்றினர். தொடர்ந்து, தேசியக் கொடியானது கடலுக்கு மேல்பரப்பில் பறந்தது. அப்போது கடலுக்குள் இருந்தபடியே கடலோர காவல் படை வீரர்கள் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்களில் நின்றபடி, அனைத்து வீரர்களும் தேசியக்கொடியை கைகளில் உயர்த்தி, சுதந்திர தின விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். மேலும் இந்திய கடல் எல்லையில் உள்ள 5-வது மணல் திட்டு பகுதியில் கடலோர காவல் படை வீரர்கள் இந்தியாவின் வரைபடம் போல் அணிவகுத்து நின்று, தேசிய கொடியை உயர்த்தி மரியாதை செலுத்தினர்.

    பாம்பன் ரோடு பாலம், கப்பல் நிறுத்தும் தளம் உள்ளிட்ட இடங்களிலும் கொண்டாடினார்கள். இதுகுறித்த வீடியோவை இந்திய கடலோர காவல் படையின் டுவிட்டர் பக்கத்திலும், சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோக்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் மூவர்ண கொடி ஒளிபரப்பானது.
    • வெளிநாடுகளிலும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன

    துபாய்:

    சுற்றுலாவாசிகளின் சொர்க்கம் என அழைக்கப்படும் துபாய் நாட்டில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ளது.

    124 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தில் நட்சத்திர ஓட்டல்கள், அலுவலகங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் என அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. இது 2,717 அடி (828 மீட்டர்) உயரம் கொண்டது. முழுவதும் கருப்பு நிற சலவைக்கற்கள், எவர்சில்வர் மற்றும் கண்ணாடிகளால் இந்த கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கட்டிடத்தை ஒட்டியுள்ள நீர்நிலையில் லேசர் ஒளிவெள்ளத்தில் இசைக்கேற்ப நடனமாடும் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    புர்ஜ் கலிபா மற்றும் துபாயில் உள்ள பல்வேறு பொழுதுப்போக்கு அம்சங்களுக்காக உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாவாசிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.

    இதற்கிடையே, இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் இன்று கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது

    இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலிபா கட்டிடத்தில் லேசர் ஒளியால் இந்தியாவின் மூவர்ண கொடி, மகாத்மா காந்தியின் உருவம் உள்ளிட்டவை லேசர் ஒளியில் ஒளிபரப்பானது.

    • முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தனர்.
    • இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.

    இந்தியாவின் 77-வது சுதந்திர தினம் கோலகாலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுக்க பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு என நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    மேலும் உலக நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், முக்கிய தலைவர்கள் இந்தியாவுக்கு தங்களின் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில், இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவிலும் இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று இருக்கிறது.

    அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள பிரபலமான டைம்ஸ் சதுக்கத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர். 

    ×