search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசியகொடி"

    • கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
    • தேசியக்கொடிக்கு செங்கமலம் யானை மரியாதை செலுத்தியது.

    திருவாரூர்:

    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

    விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    அப்போது அங்கு பாகனுடன் ராஜகோபாலசாமி கோவில் யானை செங்கமலம் வந்தது.

    தொடர்ந்து யானை செங்கமலம் தனது துதிக்கையை தூக்கி தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியது.

    பாப் கட்டிங் செங்கமலம் என பக்தர்களால் அழைக்கப்பட்டு புகழ்பெற்ற செங்கமலம் யானை தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தியது கண்கொள்ளாக்காட்சியாக இருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

    • முதுகுளத்தூர் அருகே சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
    • சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ் தேசிய கொடி எற்றி வைத்தார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வட்டாட்சியர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். தலைமை துணை வட்டாட்சியர், மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலகப் பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்தில் சேர்மன் சண்முகபிரியா ராஜேஷ் தேசிய கொடி எற்றி வைத்தார். ஆணையாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் வெங்கல குறிச்சி கிராமத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தனது இல்லத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

    • 75-வது சுதந்திரதினவிழாவையொட்டி ஈரோட்டில் கலெக்டர் தேசியகொடி ஏற்றினார். மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • அதைத்தொடர்ந்து கலெக்டர் ஆண்டிகுளம் கிராமம், காடையாம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட மொழிப்பெயர் தியாகிகளின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் அவர்களது வீட்டுக்கே கலெக்டர் நேரடியாக சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈரோடு வ. உ. சி பூங்கா மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாலமாக நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். டிஆர்ஓ சந்தோஷினி சந்திரா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சரியாக 9.05 மணிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தேசிய கொடியை ஏற்றினார். அதைத் தொடர்ந்து கலெக்டர் ஆரஞ்ச், வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ண பலூனை பறக்க விட்டார். பின்னர் கலெக்டர் திறந்த ஜீப்பில் நின்றவாறு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 53 பேர், முன்னாள் ராணுவ வீரர் ஒருவர், வனத்துறையில் சிறப்பாக பணியாற்றிய 23 பேர், துணை இயக்குனர் குடும்ப நலப்பணியில் சிறப்பாக பணியாற்றிய 15 பேர், துணை இயக்குனர் சுகாதார பணிகள் சிறப்பாக பணியாற்றி 15 பேர், இணை இயக்குனர் சுகாதார பணிகள் சிறப்பாக பணியாற்றிய 15 பேர், மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 15 பேர் என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 313 பேருக்கு

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பாராட்டி நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி ஆர்.டி.ஓ. சதீஷ்குமார், தாசில்தார் பாலசுப்ரமணியம், ஏ.டி.எஸ்.பிக்கள் கனகேஸ்வரி, ஜானகிராமன், டவுன் டி. எஸ்.பி ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் ஆண்டிகுளம் கிராமம், காடையாம்பட்டியில் உள்ள சுதந்திரப் போராட்ட மொழிப்பெயர் தியாகிகளின் வாரிசுகளை கவுரவிக்கும் வகையில் அவர்களது வீட்டுக்கே கலெக்டர் நேரடியாக சென்று சால்வை அணிவித்து கவுரவித்தார்.

    • உள்ளாட்சி அமைப்புகளின்கீழ், பிரதிநிதிகள் வீடு, வீடாக சென்று தேசிய கொடி வழங்கினர்.
    • வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் ஏற்றப்பட்டன

    அரவேணு:

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு கேட்டு கொண்டது.

    அதன் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் நாளை வரை, வீடுகள் தோறும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பை ஏற்று மக்களும் ஆர்வமுடன் கொடி ஏற்றி வருகின்றனர்.

    நீலகிரியில், 4 நகராட்சி, 11 பேரூராட்சி, 35 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளின்கீழ், பிரதிநிதிகள் வீடு, வீடாக சென்று தேசிய கொடி வழங்கினர்.

    பா.ஜ., சார்பிலும் வீடுதோறும் தேசிய கொடி வழங்கப்பட்டது. தவிர, வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தேசிய கொடிகள் நேற்று ஏற்றப்பட்டன

    கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் மணிகண்டன், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத்தலைவர் உமாநாத், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் கோத்தகிரி அருகே உள்ள பூர்வக்குடி மக்களான கோத்தர் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிக்கு சென்று தேசிய கொடி வினியோகித்து, வீடுகளில் தேசிய கொடி ஏற்றுமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து அவர்களும் தங்கள் வீடுகளில் தேசியை கொடி ஏற்றினர். இந்த நிகழ்ச்சியில் கோத்தர் பழங்குடியின கிராமத்தில் உள்ள ஊர்தலைவர், பொது மக்கள் மற்றும் கோத்தகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    • தேசியகொடியை அவமதிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என கலெக்டர் எச்சரிக்கை விடுத்தள்ளார்.
    • இன்று (13-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை தேசியகொடியை பறக்கவிட வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின்75-வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு மத்திய, மாநில அரசு உத்தரவுகளின்படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகள், கட்டடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இன்று (13-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரை தேசியகொடியை பறக்கவிட வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

    சுதந்திர தினத்தன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி, அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் மட்டுமே தேசியகொடிையஏற்றி மரியாதை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் தேசியகொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும்.

    ஊராட்சிகளில் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் விருதுநகர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநரிடம் 7402608260 மற்றும் 04562-252765 என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். தேசியகொடியை அவ மதிப்பு செய்யும் செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும்.
    • கல்லூரி மாணவர்களிடையே தேசிய பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    ஆவடில்:

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியை கையில் ஏந்தி விழிப்புணர்வு நடைபயணம் சென்னையை அடுத்த ஆவடியில் நடைபெற்றது.

    திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தேசிய கொடியை கையில் ஏந்தியபடி புதிய ராணுவ சாலையில் பேரணியாக நடந்து சென்றார். 


    பின்னர் அங்கிருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது:

    மக்கள் எழுச்சியுடன் தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபயணத்தை மேற்கொண்டுள்ளோம். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடையே தேசிய பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

    தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேசிய கொடியை ஏற்றும் இயக்கத்தை முன்னெடுப்பது அவசியம். தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவேண்டும்.

    அதேபோல் தி.மு.க. தொண்டர்களையும் தேசிய கொடி ஏற்றும்படி மு.க.ஸ்டாலின் சொல்ல வேண்டும். பால்வளத்துறையில் ஊழல் நடைபெற்று வருகிறது. அமைச்சர் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×