மல்லிகார்ஜூன கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார்: தம்பிதுரை

செங்கோட்டையில் பிரதமர் மோடி 10-வது முறையாக நேற்று கொடியேற்றினார்அவரது இரண்டு முறை பிரதமர் பதவி காலத்தில் கடைசி சுதந்திர தின உரை
மல்லிகார்ஜூன கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார்: தம்பிதுரை
Published on

சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார். அப்போது அடுத்த முறையும் டெல்லி செங்கேட்டையில் கொடியேற்றுவேன். இந்தியாவின் சாதனைகளை நாட்டு மக்களுக்கு பட்டியலிடுவேன் எனக் கூறினார்.

மோடியின் இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் விமர்சன கருத்துகளை தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ''பிரதமர் மோடி அடுத்த வருடம் அவரது வீட்டில்தான் கொடி ஏற்றுவார்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது செங்கோட்டையில் மோடியின் கடைசி கொடியேற்றம் என லல்லு பிரசாத் யாதவ், மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க.-வின் மாநிலங்களவை எம்.பி., மல்லிகார்ஜூன கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தம்பிதுரை கூறுகையில் ''பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. இந்தியாதான் அவரது குடும்பம், செங்கோட்டைதான் அவரது வீடு. பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில்தான் தேசியகொடி ஏற்றுவார் என காங்கிரஸ் தலைவர் கார்கே சரியாகத்தான் கூறியுள்ளார்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com