search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hostel"

    • பள்ளி கல்லூரிகளில் கழிப்பறை வசதியுடன் மகளிர் ஓய்வறை கட்டும் திட்டம்.
    • பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா?

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகப்பட்டினம் தொகுதியில், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், நாகப்பட்டினத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி விரைவில் கட்டப்படும் என்றும், மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் படிப்படியாக செய்யப்படும் என்றும் கூறினார்.

    • மாணவர்கள் விடுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும்.
    • விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அமைந்துள்ளது.

    இதன் அருகே கல்லூரி மாணவர்களுக்கான பிற்பட்டோர் நல விடுதி அமைந்துள்ளது.

    இந்த விடுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு உணவு தரமான முறையில் வழங்கப்படவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்தன.

    இதையடுத்து.

    இந்த விடுதியில் திடீரென மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமான முறையில் உள்ளதா? எனறு சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

    அப்போது சாம்பாரில் சரியான முறையில் காய்கறி இல்லை.

    மோர் மோசமாக இருந்தது கண்டு மாணவர்களுக்கு சாம்பார், மோர் ஆகியவற்றை முறையாக தரமாக வழங்க வேண்டும்.

    சாப்பாடு உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களும் தரமாக இருக்க வேண்டும் என்று விடுதி ஊழியர்களிடம் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    அதற்கு மாணவர்கள் விடுதியை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும், மின் விளக்குகள் வரியாக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டிடங்களை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கூறினர்.

    கோரிக்கைகளை சம்பந்தபட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

    மேலும் உங்களது தேவைகள் எதுவானாலும் தயங்காமல் என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறி தனது மொபைல் எண்ணை தெரிவித்தார்.

    கடந்த டிசம்பர் 30-ந்தேதி தேதி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில் உள்நோயாளிகளுடன் வருவோர் தங்கும் விடுதி கட்டப்பட்டது. இதனை கடந்த டிசம்பர் 30-ந்தேதி தேதி அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார். இந்த நிலையில் திறந்து வைத்து பல நாட்கள் ஆன நிலையில், இன்னும் அந்த காத்திருப்போர் தங்கும் விடுதி வளாகம் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது:-

    காத்திருப்போர் தங்கும் விடுதி வளாகத்தை பராமரிப்பு பணி மேற்கொள்ள, தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு வந்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள். அதன் பின்னர் காத்திருப்போர் தங்கும் விடுதி செயல்படும் என தெரிவித்தனர்.

    • வனவிலங்குகள்-பறவைகளை கண்டு ரசிக்கலாம்
    • சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    பொள்ளாச்சி,

    கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் வால்பாறையும் ஒன்று.

    இங்கு முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, சோலையார் அணை, புல் குன்று, நல்ல முடி எஸ்டெட் ஆகியவை அறியப்படுகின்றன.மேலும் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.வால்பாறையில் எப்போதும் சீதோஷண நிலை இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டு முழுவதும் இருக்கும்.

    வால்பாறையில் யானைகள் கூட்டம், காட்டெருமை, கடமான், இருவாச்சி பறவை மற்றும், பல்வேறு அறியவகை பறவைகளை கண்டு ரசிக்கலாம். வால்பாறைக்கு சுற்றுலா வரும் மக்கள் தனியார் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் தங்க வேண்டி உள்ளது. இந்த நிலையில் சிறுகுன்றா பகுதியில் வனத்துறையினருக்கு சொந்தமான விடுதி இருந்தது. இதனை புதுப்பித்தால் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் சிறுகுன்றா அரசு விடுதியை புதுபிக்க முடிவு செய்தனர். ரூ.16 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை புத்தாண்டின் முதல் வாரத்தில் செல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் தங்குவதற்கு ரூ.16 லட்சம் செலவில் சிறுகுன்றா பகுதியில் இருந்த விடுதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது வால்பாறை டவுனில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் மலையில் அமைந்து உள்ளது.

    4 அறைகளை கொண்ட இந்த விடுதியின் வாடகை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 வரை நிர்ணைக்கப்பட்டுள்ளது. இங்கு தங்கும் சுற்றுலா பயணிகள் சின்ன கல்லாறு, நீர் வீழ்ச்சி, செக்கல்முடி, சோலையார் அணை, பு நல்ல முதி பூங்சோலை ஆகிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும்.மேலும் இந்த பகுதியில் இருந்து அறியவகை பறவைகள், மயில், இருவாச்சி பறவை, யானைகள், காட்டெறுமை, காடமான் ஆகியவற்றை விடுதியில் இருந்து கண்டு ரசிக்க முடியும். விடுதிக்கான முன்பதிவு ஆன்லை மூலம் செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

    • ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம்.
    • ஏனங்குடி அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை தலைமைச் செயலகத்தில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தார்.

    அதில் நாகப்பட்டினத்தில் பீச் வாலிபால் அகாடமி அமைப்பதுடன், அதற்கு ஏற்ற வகையில் விடுதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு மினி ஸ்டேடியம் என்ற அரசின் அறிவிப்பின் படி, நாகப்பட்டினம் தொகுதிக்கு உட்பட்ட திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் அதை அமைக்க வேண்டும்.

    ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பட்டியலிட்டு வழங்கினார்.

    இதைத் தொடர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    • குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை 30.9.2022க்குள் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை 30.9.2022க்குள் பதிவு செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை Tamilnadu Hostels and Homes for women and Children (Regulation) Act 2014-ன் கீழ் பதிவு செய்ய தெரிவிக்கப் பட்டுள்ளது.

    18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகள் உரிமம் பெற, மாவட்ட சமூகநல அலுவலகத்திலும் (அறை எண் : 35-36), 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் (அறை எண் : 630), மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் (அறை எண் : 23), பதிவு செய்ய அணுகுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி, URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது. பதிவு செய்யாத விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட பிரிவு 20 மற்றும் உட்பிரிவு 2-ன் படி கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அத்துடன் ரூ.50 ஆயிரம் வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.

    மேலும் பிரிவு 12ன் உட்பிரிவு 1, 2ன் படி, குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். இந்த சட்ட பிரிவுகள் 5, 6 மற்றும் 12-ன் கீழ் எந்த விதிகளுக்கும் இணங்க தவறிய எந்த ஒரு நபரும் வழக்கில் தண்டிக்கப்படுவார். முதல் குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை நீட்டிக்க கூடிய 2 ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம்அபராதமும், இரண்டாவது அல்லது அதை தொடர்ந்து குற்றமாக இருந்தால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கப் படலாம் மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் .

    அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை Tamilnadu Hostels and Homes for women and children (Regulation) Act 2014-ன் கீழ் 30.9.2022க்குள் பதிவு செய்யலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • தங்கும் விடுதி கட்டுமான தொடக்க விழா இன்று நடந்தது.
    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம்,கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு சொந்தமான எல்லீஸ் நகர் பகுதியில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    தங்கும் விடுதி கட்டுமான தொடக்க விழா இன்று நடந்தது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம்,கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் காலோன், மேயர் இந்திராணி, வெங்கடேசன் எம்.பி., கோ.தளபதி எம்.எல்.ஏ.,கோவில் செயல் அலுவலர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் ரூ.12.90 லட்சம் மதிப்பீட்டில் காதுகுத்து மண்டபம், விருந்து மண்டபம், முடிகாணிக்கை மண்டபம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

    அந்த பணிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் அ.வல்லா ளப்பட்டி பேரூராட்சி தலைவர் திருகுமரன், மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், வலையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், ஒன்றிய கவுன்சிலர் மலைசாமி, கிளை செயலாளர் முத்து, மதுரை மண்டல உதவி கோட்ட பொறியாளர் தனிக்கொடி, துணை ஆணையர் திருப்பூர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சக்திவேல் மரக்கன்றுகள் நட்டு தொடக்கி வைத்தார்.
    • விழாவின் முடிவில் விடுதியின் பின்புறம் தென்னங்கன்றுகள் நடப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வேலூர் ஊராட்சி தண்டலச்சேரி அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் கொடிமேடை அமைத்து, தேசிய கொடியேற்றி,தென்னை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    நடைபெற்ற நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அ.பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெ.சக்திவேல் மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார்.மாணவியர் விடுதி காப்பாளினி வ.ஆனந்தி வரவேற்புரை நிகழ்த்தினார்.

    இந்து சமய அறநிலையத்துறை பணி நிறைவு தை.ஜெயபால், முன்னிலையில் வேளூர் கிராம நல விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் தங்கவேல்,செல்லப்பா, நாராயணன்,கல்லூரி பேராசிரியர் நடேச மகரந்தன்,வேளூர் தினேஷ் குமார், ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் வேதகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் இளம்பரிதி, கிருஷ்ணமூர்த்தி, கருணாநிதி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,பணிதள மகளிர் பொறுப்பாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், கிராம பொதுமக்கள், கல்லூரி மாணவியர்கள், பெற்றோர்கள் விடுதி பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விடுதியின் பின்புறம் தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • சட்டம், 2014”, பிரிவு 4-ன்படி உரிமம் பெற வேண்டும் .
    • வழிமுறைகள் குறித்து விவரம் அறிய மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் மூலம் நடத்தப்படும் விடுதிகள் "தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (நெறிமுறைப்படுத்தும்) சட்டம், 2014", பிரிவு 4-ன்படி உரிமம் பெற வேண்டும் .அவ்வாறு உரிமம் பெறாது நடத்தும் விடுதிகள் மேற்படி சட்டப்பிரிவு 20-ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆதலால் அனைத்து தனியார் மற்றும் அரசுப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து வகையான விடுதிகளும் உரிமம் பெற்று நடத்திட விடுதி உரிமம் பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் வழிமுறைகள் குறித்து விவரம் அறிய மற்றும் கருத்துருக்கள் சமர்ப்பிக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

    மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு , மாவட்ட ஆட்சியர் வளாகம், தளம்-6, அறை எண் : 627, பல்லடம் ரோடு , திருப்பூர். தொலைபேசி : 0421 - 2971198, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம்)கைபேசி எண் : 6382614880.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

    • குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
    • URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ். வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; தமிழ்நாடு அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014ன்படி அமைந்துள்ள கல்வித்துறை, உயர் கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலக பாதுகாப்புமற்றும் சுகாதாரம், தொழிலாளர் நலத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விடுதிகளை நடத்துவதற்கு கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கும் விடுதிகள் உரிமம் பெற, மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் (அறைஎண் : 35, 36), 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இல்லங்கள், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் விடுதிகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் (அறை எண்: 630), மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் (அறை எண் : 23) சம்பந்தபப்பட்டவர்கள் அணுகி பதிவு செய்ய செய்து கொள்ள வேண்டும். மேலும் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் ஒழுங்கு முறைச்சட்டம் 2014-ன் படி,URL :http://tnswp.com என்ற Online Portal உருவாக்கப்பட்டு விரைவில் செயல் படுத்தப்படவுள்ளது. பதிவு செய்யாத விடுதிகளின் உரிமையாளர்கள் மீது சட்டபிரிவு 20 மற்றும் உட்பிரிவு 2-ன் படி, கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அத்துடன் ரூ.50,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படும். மேலும் பிரிவு 12 ன் உட்பிரிவு 1,2ன் படி, குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்யத் தவறினால் விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு 2 ஆண்டு கால சிறை தண்டனையும், ரூபாய் 50,000 அபராதமும் விதிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இதில் ஆண்களுக்கு 19 காலிப்பணியிடங்களும் , பெண்களுக்கு 17 காலிப்பணியிடங்களும் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் ரூ.3 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் 36 பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதில் ஆண்களுக்கு 19 காலிப்பணியிடங்களும் , பெண்களுக்கு 17 காலிப்பணியிடங்களும் நேர்காணல் மூலம் இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும், வயது வரம்பு 1-7-22 தேதியில் எஸ்.சி/ எஸ்.டி -18 முதல் 35, பி.சி, எம்.பி.சி, பி.சி.எம், டி.என்.சி -18 முதல் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

    மேற்படி தகுதிகளுடன் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளர் (தொகுப்பூதியம்) பணி புரிய விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்தும், உரிய சான்றுகளின் நகல் இணைத்தும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை சம்மந்தப்பட்ட அலுவலகத்தில் அடுத்த மாதம் 14-ந் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

    காலதாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முகவரி தவறாக இருந்து, அழைப்பாணை திரும்ப பெறப்படும் விண்ணப்பங்கள் ஆகியவற்றின் மீது அரசு பரிசீலிக்காது எனவும் மனுதாரரே முழுப்பொறுப்பு எனவும் தெரிவித்து கொள்ளப்படுகிறது. எனவே மனுதாரர்களை மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள், பயிற்சி இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்
    • ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர் பள்ளி, கல்லூரி விடுதிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கான 16 பள்ளி விடுதிகள், 2 கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகள் மற்றும் மாணவிகளுக்கு 10 பள்ளி விடுதிகள், 6 கல்லூரி, பாலிடெக்னிக் விடுதிகள் என மொத்தம் 34 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ. படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சேர்க்க தகுதியுடையவர்கள் ஆவர்.

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ-மாணவிகளும் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர். அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கும் உணவு மற்றும் தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள், பயிற்சி இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

    ஆண்டு வருமானம் பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    இந்த தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்கள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 21-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை வருகிற 31-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

    இலங்கை தமிழர்கள் மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் அளிக்கலாம். ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு விடுதியிலும் மீட்கப்படும் குழந்தை தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக் கொள்ளவும், அவர்களது படிப்பு முடியும் வரை விடுதிகளில் தங்கிபயில அனுமதிக்கப்படும். எனவே, மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×