search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓய்வறை"

    • தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 ஆயிரம் பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக கும்பகோ ணம் கோட்ட தலைமை அலுவலகத்தில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஓய்வெடுக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய ஓய்வு அறை தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஓய்வு அறை கட்டிடத்தின் திறப்பு விழா கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்தது.

    எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஓய்வு அறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. ஆட்சியில் தான் போக்குவரத்து தொழிலாளர்களின் வாழ்க்கையில் வசந்தம் ஏற்படும் என்கிற வகையில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    கடந்த நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் குளிர்சாதன வசதி செய்து தரப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன்படி கும்பகோணம் போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் அறை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து கழக அலுவலகங்களில் பணியாளர்கள் ஓய்வெடுக்கும் அறையில் குளிர்சாதன வசதி செய்யப்படும்.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 ஆயிரம் பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கியுள்ளார். இதற்கான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது.

    புதிய பஸ்கள் வாங்கப்பட்டதும் புதிய வழித்தடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கவும் நவக்கிரக தலங்களை இணைத்து பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் கும்பகோணம் போக்குவரத்து கழக அலுவலகத்தில் புதிதாக டிரைவர் கண்டக்டர்களை நியமிக்க ஆணை பிறப்பித்துள்ளார்.

    இந்த அரசாணையின்படி ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பெறுவதற்கு தகவல் தொழில்நுட்ப துறையுடன் சேர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைய  3 அல்லது 4 மாதங்கள் ஆகலாம்.

    அதன் பிறகு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெற்று தகுதியுள்ள பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளி கல்லூரிகளில் கழிப்பறை வசதியுடன் மகளிர் ஓய்வறை கட்டும் திட்டம்.
    • பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா?

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் நாகப்பட்டினம் தொகுதியில், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதி கட்டப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

    அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், நாகப்பட்டினத்தில் பணிபுரியும் மகளிர் விடுதி விரைவில் கட்டப்படும் என்றும், மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் படிப்படியாக செய்யப்படும் என்றும் கூறினார்.

    • அனைத்துத் துறை அலுவலகங்களிலும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளன
    • குடிநீர், கழிப்பறை வசதியுடன் அமைப்பு

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் அனைத்துத் துறை அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதியுடன் கூடிய ஓய்வறை அமைத்து அதன் புகைப்படத்தை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் சமர்ப்பித்தனர்.

    கரூர் கலெக்டர் பிரபு சங்கர் 2 வாரங்களுக்கு முன்பு அனைத்து துறை அலுவலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார். அதில் மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைப்படி தலைமைச் செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் அனைத்துத் துறை அலுவலகங்களிலும் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குடிநீர், கழழிப்பறை வசியுடன் கூடிய ஓய்வறை அமைத்து அந்த புகைப்படத்தை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

    ஆனால் 2 வாரங்களுக்கு மேலாகியும் யாரும் இப்பணிகளை மேற்கொள்ளாததால் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்க அலுவலர்கள் வரும் போது இந்த புகைப்படத்தை அவசியம் ெகாண்டு வந்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.

    இதையடுத்து தூய்மை பணியாளர்களுக்கு குடிநீர், கழிப்பறையுடன் கூடிய ஓய்வறை தயார் செய்து அதை புகைப்படம் எடுத்து கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

    மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குடிநீர், கழிப்பறையுடன் அமைக்கப்பட்டுள்ள ஓய்வறையை கலெக்டர் பிரபுசங்கர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    ×