search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gudiyatham"

    குடியாத்தம் அருகே லாரி மீது பைக் மோதியதில் பலியான ஆந்திர வாலிபர் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
    குடியாத்தம்:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த பங்காருபாளையம் ரால்லுவங்க கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவரது மகன் ஈஸ்வரன் (வயது 23). கட்டிட தொழிலாளி. திருமணமாகாதவர்.

    குடியாத்தம் அடுத்த பரதராமியில் இருக்கும் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நேற்று நடந்தது. இந்த திருவிழாவிற்காக ஈஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த அருண் (20) என்ற நண்பருடன் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    குடியாத்தம் அடுத்துள்ள பெருமாள்பல்லியில் வந்த போது, முன்னாள் சென்ற லாரி மீது பைக் மோதியது. இந்த விபத்தில் ஈஸ்வரன் மற்றும் நண்பர் அருண் பலத்த காயமடைந்தனர்.

    சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஈஸ்வரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நண்பர் அருணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, பலியான ஈஸ்வரனின் கண்களை தானமாக வழங்க அவருடைய பெற்றோர் முன்வந்தனர்.

    ஈஸ்வரனின் கண்களை ரோட்டரி கண் மற்றும் உடல் உறுப்பு தான சங்க தலைவர் கோபிநாத் தானமாக பெற்று கொண்டார். இந்த விபத்து குறித்து பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    குடியாத்தம் அருகே நாகப்பாம்பு கடித்ததில் பெண் பரிதாபமாக இறந்தார். உறவினர்கள் பாம்பை அடித்துக்கொன்று ஆஸ்பத்திரிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோதண்டன். விவசாய கூலி. இவருடைய மனைவி அம்பிகா (வயது 40). நேற்றிரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர்.

    அதிகாலை 2 மணியளவில் அம்பிகாவின் கையில் நாகப் பாம்பு கடித்தது. தூக்கத்தில் இருந்த அவர் ஏதோ பூச்சி என்று உதறி தள்ளியுள்ளார். மீண்டும் நாகப்பாம்பு கடித்த போது, அலறி அடித்து எழுந்தார்.

    குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அம்பிகாவை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நாகப்பாம்பையும் அடித்துக் கொன்று ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அம்பிகாவின் நிலைமை மிகவும் மோசமானதால், வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அம்பிகா இன்று காலை இறந்தார்.

    குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே பைக் மீது காரை மோதி இளம்பெண்னை கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பீமன். இவரது மகன் அய்யப்பன் என்கிற மணிகண்டன் (வயது 32). பெயிண்டர். இவருடைய மனைவி சுமதி (25). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 8 வயதில் ஒரு மகன், 6 வயதில் ஒரு மகள் உள்ளனர்.

    இன்று காலை மணிகண்டன் மனைவியுடன் பைக்கில் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோடிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சுமதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார்.

    குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த மணிகண்டன் மற்றும் பலியான சுமதியின் உடலை மீட்டு 108 ஆம்புலன்சுகள் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, காரை ஓட்டிய மோடிக்குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்தகுமார் (30) என்பவர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில் பைக் மீது காரை மோதி வசந்தகுமார் சுமதியை கொன்றது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-

    லாரி டிரைவரான வசந்தகுமாருக்கும் பலியான சுமதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. கள்ளக்காதல் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, சுமதியின் குடும்பத்திற்கும் வசந்த குமாருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து வசந்தகுமாருடன் இருந்த கள்ளக்காதல் உறவை சுமதி துண்டித்தார். சுமதியை சந்தித்து தொந்தரவு செய்துவந்தார். ஆனால் கள்ளக்காதலனுடன் பேசுவதை சுமதி முற்றிலும் தவிர்த்தார். இதனால் வசந்தகுமார் ஆத்திரத்தில் இருந்தார்.

    இந்த நிலையில், வசந்தகுமாரின் குடும்பத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இதற்காக திருமண வேளைகளை கவனிக்க காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு குடியாத்தத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது மோடிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் பைக்கில் கணவன் மணிகண்டனுடன் சுமதி அமர்ந்திருந்தார். இதனை கவனித்த கள்ளக்காதலன் வசந்தகுமார் காரை ஏற்றி சுமதியை கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக வசந்தகுமாரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே சத்துணவு ஊழியர் வீட்டில் 17 பவுன் நகை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த அக்ராவரம் ரங்க சமுத்திரத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் மனைவி பானுமதி (வயது 55). சத்துணவு ஊழியர். பானுமதி, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவை தரிசிக்க சென்றுவிட்டார்.

    திருவிழாவிற்கு சென்ற அவர், அங்குள்ள உறவினர் வீட்டில் இரவு தங்கினார். நேற்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ.7,500 பணம் கொள்ளை போயிருந்தது.

    இதுகுறித்து, குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்து கொள்ளையர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். #Tamilnews
    குடியாத்தம் அருகே ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த கீழ் ஆலத்தூரில் காட்பாடி ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஏ.டி.எம். உள்ளது. நள்ளிரவில் கொள்ளை கும்பல், ஏ.டி.எம். மையத்திற்கு கடப்பாரை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்தனர்.

    ஏ.டி.எம். மையத்திற்குள் புகுந்து, பணம் இருக்கும் லாக்கரை கடப்பாரையால் தாக்கி உடைக்க முயன்றனர். லாக்கரை நீண்ட நேரமாக முயற்சித்தும் உடைக்க முடியவில்லை. கொள்ளை முயற்சி தோல்வியடைந்ததையடுத்து, திருட்டு கும்பல் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    இதனால் பல லட்சம் ரூபாய் தப்பியது. இன்று காலை ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்ததையறிந்த குடியாத்தம் டி.எஸ்.பி. பிரகாஷ் பாபு மற்றும் கே.வி.குப்பம் போலீசார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். ஏ.டி.எம்.மில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றினர்.

    அதில், பதிவாகி உள்ள கொள்ளையர்களின் உருவம் மற்றும் அடையாளங்களை வைத்து அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம். மையத்திற்கு காவலாளிகள் நியமிக்கப்படவில்லை.

    கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு வேலூர் மேல்மொணவூர் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மற்றும் காட்பாடி திருநகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம்.களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.9 லட்சத்தை கும்பல் கொள்ளையடித்தனர்.

    ஆம்பூர் அடுத்த மாதனூரில் தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள ஏ.டி.எம்.மையும் உடைத்து கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.

    ஒடுகத்தூர் மற்றும் அணைக்கட்டு காந்திநகரில் உள்ள 2 ஏ.டி.எம்.களிலும் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.

    இதுபோன்று தொடர் வங்கி, ஏ.டி.எம். கொள்ளையை தடுக்க இரவு நேர காவலாளியை நியமிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளை போலீஸ் உயர் அதிகாரிகள் விதித்தனர். ஆனால், வேலூர் மாவட்டத்தில் உள்ள பல வங்கி, ஏ.டி.எம்.களில் காவலாளிகள் இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகளை கடை பிடிக்காத வங்கிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். #Tamilnews
    குடியாத்தம் அருகே ரூ.1 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்தியது தொடர்பாக 6 பேரை கைது செய்த போலீசார் பணம், மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், பைக்கை பறிமுதல் செய்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் நடுப்பேட்டை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 60). இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் உள்ளது. மேலும் பல நிதி நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளார்.

    கடந்த 6-ந்தேதி காலையில் தொழிலதிபர் சேகர் நடைபயிற்சி முடித்து விட்டு குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது காரில் வந்த 6 பேர் கும்பல் துப்பாக்கி முனையில் அவரை கடத்தி சென்றனர். அவரது குடும்பத்தினருக்கு போன் செய்து ரூ.1 கோடி கேட்டுள்ளனர். மேலும் சேகரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

    இந்த நிலையில் தொழிலதிபர் குடும்பத்தினர் பல லட்ச ரூபாயை கடத்தல் கும்பலிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடத்தல் கும்பல் அவரை விடுவித்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

    இது குறித்து குடியாத்தம் போலீசில் புகார் செய்தனர். குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு தலைமையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    சேகர் கடத்தப்பட்ட அன்று அவரது குடும்பத்தினருக்கு வந்த செல்போன் அழைப்புகளையும், சேகரின் செல்போன் சிக்னல்கள் இருந்த டவர்களும் தீவிரமாக ஆராயப்பட்டது. அப்போது ராணிப்பேட்டையை அடுத்த காரைகூட்ரோடு பகுதி மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த என்.ஆர்.பேட்டை பகுதியை காட்டியது.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் குறித்தும் துப்பு கிடைத்தது. இதனையடுத்து நடத்திய விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேகர் வீட்டிற்கு தேவையான ஸ்டீல் கிரில் செய்ய குடியாத்தத்தை சேர்ந்த ஒரு வெல்டிங் கடையில் ஆர்டர் கொடுத்து அதற்கான பணத்தை கொடுத்துள்ளார்.

    ஆனால் பலமாதங்கள் ஆகியும் ஸ்டீல் கிரில் செய்து கொடுக்கவில்லை. அப்போது சேகர் வெல்டிங் கடை உரிமையாளர் மூர்த்தி என்பவரை அவதூறாக பேசியுள்ளார்.

    இதனால் கோபமடைந்த மூர்த்தி, சேகரை பழிவாங்க முடிவு செய்து தனது கடை ஊழியருடன் பெங்களூருவை சேர்ந்த கடத்தல் கும்பலுடன் தொடர்பு கொண்டு சேகரை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர்.

    இதனையடுத்து பெங்களூருவை சேர்ந்த கடத்தல் கும்பல் சித்தூர் என்.ஆர்.பேட்டையை சேர்ந்த சிலருடன் குடியாத்தத்திற்கு வந்துள்ளனர். பின்னர் வெல்டிங் கடை உரிமையாளர் மூர்த்தியின் காரில் துப்பாக்கி முனையில் சேகரை கடத்தி சென்று ராணிப்பேட்டை வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் என்.ஆர்.பேட்டையில் உள்ள மாந்தோப்புக்கு கொண்டு சென்று சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அவரது குடும்பத்தினரிடம் இருந்து பணம் பெற்று சேகரை விடுவித்தது தெரியவந்தது.

    இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக குடியாத்தத்தை சேர்ந்த வெல்டிங் கடை உரிமையாளர் மூர்த்தி (39), ஊழியர் பாபு (34) மற்றும் சித்தூர் என்.ஆர்.பேட்டையை சேர்ந்த வினோத்குமார் (24), சங்கர் (25), ராஜாமணி (28), முன்னா என்கிற முனீஷ்கான் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணம், ஒரு கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெங்களூர் பசவேஸ்வரா நகரை சேர்ந்த நவீன், அருண், ரபீக், சித்தூரை சேர்ந்த சுதாகர் ஆகியோரை தேடி வருகின்றனர்.#tamilnews
    ×