search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bike hit"

    திண்டுக்கல் அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி டெய்லர் பலியானார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் பிரகாஷ் (வயது 26). பேகம்பூரில் உள்ள கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த நண்பர் மோகன்ராஜ் (19) பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

    அக்கரைபட்டி பகுதியில் வந்த போது சாலை ஓரம் உள்ள மின்கம்பத்தில் பயங்கரமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பிரகாஷ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியில் பிரகாஷ் இறந்தார். லேசான காயத்துடன் மோகன்ராஜ் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    குடியாத்தம் அருகே பைக் மீது காரை மோதி இளம்பெண்னை கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பீமன். இவரது மகன் அய்யப்பன் என்கிற மணிகண்டன் (வயது 32). பெயிண்டர். இவருடைய மனைவி சுமதி (25). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 8 வயதில் ஒரு மகன், 6 வயதில் ஒரு மகள் உள்ளனர்.

    இன்று காலை மணிகண்டன் மனைவியுடன் பைக்கில் குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மோடிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் சுமதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் மணிகண்டன் பலத்த காயம் அடைந்தார்.

    குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த மணிகண்டன் மற்றும் பலியான சுமதியின் உடலை மீட்டு 108 ஆம்புலன்சுகள் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மணிகண்டனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, காரை ஓட்டிய மோடிக்குப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வசந்தகுமார் (30) என்பவர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். விசாரணையில் பைக் மீது காரை மோதி வசந்தகுமார் சுமதியை கொன்றது தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-

    லாரி டிரைவரான வசந்தகுமாருக்கும் பலியான சுமதிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. கள்ளக்காதல் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, சுமதியின் குடும்பத்திற்கும் வசந்த குமாருக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதையடுத்து வசந்தகுமாருடன் இருந்த கள்ளக்காதல் உறவை சுமதி துண்டித்தார். சுமதியை சந்தித்து தொந்தரவு செய்துவந்தார். ஆனால் கள்ளக்காதலனுடன் பேசுவதை சுமதி முற்றிலும் தவிர்த்தார். இதனால் வசந்தகுமார் ஆத்திரத்தில் இருந்தார்.

    இந்த நிலையில், வசந்தகுமாரின் குடும்பத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நாளை நடக்கிறது. இதற்காக திருமண வேளைகளை கவனிக்க காரை வாடகைக்கு எடுத்துக் கொண்டு குடியாத்தத்திற்கு சென்றுள்ளார்.

    அப்போது மோடிக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் பைக்கில் கணவன் மணிகண்டனுடன் சுமதி அமர்ந்திருந்தார். இதனை கவனித்த கள்ளக்காதலன் வசந்தகுமார் காரை ஏற்றி சுமதியை கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

    இந்த சம்பவம் தொடர்பாக வசந்தகுமாரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×