search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grievance"

    • சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • 2-வது சனிக்கிழமை போகி பண்டிகை வருவதால் 3-வது சனிக்கிழமையான வருகிற 21-ந்தேதி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடைபெறுகிறது

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளி

    யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 2-வது சனிக்கிழமை போகி பண்டிகை வருவதால் 3-வது சனிக்கிழமையான வருகிற 21-ந்தேதி ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடைபெறுகிறது

    இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இக்குறைதீர் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக ஆன்லைன் பதிவுகளை அந்தந்த வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம்.

    மேலும், செல்போன் எண் பதிவு , மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்படின் அவற்றை யும் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் அளிக்கலாம். தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன்படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையலாம்.

    இவ்வாறு அவர், அதில் தெரிவித்துள்ளார்.

    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கீழக்கரை

    கீழக்கரை நகராட்சி சார்பில் மக்கள் குறைதீர்க் கும் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.

    கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் பாசித் இல்யாஸ் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதா வது:-

    நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 6 இடங்களில் மினி ஹைமாஸ் விளக்குகள் சில நாட்களுக்கு முன்பு பொருத்தப்பட்டது. அதில் 3 இடங்களில் விளக்கு எரிய வில்லை. கடற்கரை கழிவு கள் கடலில் கலப்பதால் பகுதியில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் கழிவுநீர் குழாய்கள் போடப்பட்டும் முறையாக பணி மேற்கொள்ள பபடாமல் உள்ளது.

    இனி வரும் காலங்களில் இது போன்று கண்துடைப்பு பணி நடக்காமல் சேர்மன், நகராட்சி கமிஷனர், பொறி யாளர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகர் மாவட்டத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக வாட்ஸ்-அப் மூலம் குறை தீர்க்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
    • குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:-

    அரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு சேவைகளில், மாவட்டத்திற்கு தேவை யான முக்கியமான அரசு சேவைகளின் தகவல்கள், இணையதள முகவரிகள், தொடர்பு எண்கள் உள்ளிட்ட தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் அறிந்து பயன்பெறும் வகையில், இந்தியாவிலேயே முதன்மு றையாக விருதுநகர் மாவட்டத்தில் ''விரு'' (VIRU) தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இந்த விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை பொதுமக்களுக்கு தேவையான அரசு தகவல்களை உடனுக்குடன் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 94884 00438 என்ற எண்ணிற்கு "HI" என்று அனுப்புவதன் மூலம் இந்த சேவையுடன் தொடர்பு கொண்டால், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சேவைகளான உங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க, வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரை தேட, புதிய வாக்காளராக பதிவு செய்ய, வாக்காளர் பட்டியலில் நீக்கம், இடமா ற்றம், திருத்தம் செய்ய, நகல் வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி பதிவு செய்ய என சேவைகளின் பட்டியல்கள் காண்பிக்கப்படும்.

    மேலும் மின்னணு வாக்காளர் அட்டையினை பதிவிறக்கம் செய்ய, உங்களுடைய வாக்குச்சாவடி அமைவிடம், வாக்குச்சாவடி நிலை அலுவலரை தெரிந்து கொள்ள, முதல்வரின் தனிப்பிரிவு-முதல்வரின் முகவரி, எங்கிருந்தும் எந்த நேரத்திலும் நிலவு டமை ஆவணங்கள் -பட்டா, சிட்டா, அ-பதிவேடு மற்றும் புலப்படம், இணையவழி சான்றிதழ் சேவைகள், முக்கிய உதவி எண்கள், அறிவிப்புகள், திட்டங்கள், செய்தி வெளியீடு, தமிழக அரசுத்துறைகளின் சமூக வலைதள பக்கங்கள், இணையதள முகவரிகள் என சேவைகளின் பட்டியல்கள் காண்பிக்கப்படும்.

    அந்த பட்டியலில் தங்களுக்கு தேவையான சேவையின் ஆங்கில வரிசை எழுத்தை உள்ளீடு செய்து தேர்ந்தெடுத்து பயன் பெறலாம். இந்த சேவையை பொதுமக்கள் 24 மணி நேரமும், எந்த இடத்தில் இருந்தும் தங்கள் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை எண்ணை விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பயனாளிகள் தங்கள் கைப்பேசியில் பதிவு செய்துள்ளனர். இந்த சேவையில் பொதுமக்கள் பயன்பாடு குறித்து தொடர்ந்து கண்காணிப்பதற்கும், அதற்கேற்றவாறு சேவை களை வழங்குவதற்கும் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து தரப்பட்ட பொதுமக்கள் இந்த விரு தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை தொடர்பான 94884 00438 வாட்ஸ்அப் எண் மூலம் அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் தலைமை தபால் துறை கிழக்கு கோட்ட முதுநிலை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் கோட்ட அளவில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • இக் கூட்டம் 29-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட தபால் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அருணாச்சலம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் தலைமை தபால் துறை கிழக்கு கோட்ட முதுநிலை கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் கோட்ட அளவில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பொதுமக்கள் அனைவரும் தபால் துறை சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றிய புகார்களை குறைதீர்க்கும் நாளன்று நேரிலோ அல்லது சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலக முகவரிக்கு 26-ந் தேதிக்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். புகாரின் தபால் உறையில் குறைதீர்க்கும் கூட்டம் என்பதை குறிப்பிட்டு எழுத வேண்டும். மணியார்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் என்றால் அனுப்பிய தேதி, முழு முகவரி, பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயர் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகார்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்பு தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட தொகை விவரங்கள் அல்லது வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கலெக்டர் கார்மேகம், தலைமையில் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 255 மனுக்கள் வரப்பெற்றன.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கலெக்டர் கார்மேகம், தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 255 மனுக்கள் வரப்பெற்றன.

    மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி மனுக்க ளை வழங்கும் வகையில் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளி களுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்களின் மீது, உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 9 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • இந்த தகவலை மதுரை கோ.புதூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை கோ.புதூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மேலூர் தெற்கு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கிழக்கு கோட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (8-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின் வினியோகம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரூ.96.11கோடியில் 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் பலவஞ்சிபாளையம் பகுதியில் கட்டிதரப்பட்டது.
    • அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலரும் மாநாகராட்சி மேயரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் நொய்யல் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.96.11கோடியில் 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் பலவஞ்சிபாளையம் பகுதியில் கட்டிதரப்பட்டது. தற்பொழுது நொய்யல் கரையோரம் வசித்து வந்த பலரும் இப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடிசை மாற்று வாரியம் கொடுத்த குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலரும் நேற்று திருப்பூர் மாநாகராட்சி மேயரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட மேயர் உடனடியாக அப்பகுதிக்கு ஆய்வுக்கு வருவதாக தெரிவித்தார்.அதன்படி அப்பகுதிக்கு சென்ற மேயர் தினேஷ்குமார் குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி,மின்சாரவிளக்கு ,தார்சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது அப்பகுதி மக்கள் கூறுகையில் ,போதிய அடிப்படை வசதிகள் இல்லை .பல நாட்களாக குடிநீரின்றி இருப்பதாகவும் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வருவதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். குடியிருப்பில் பல வீடுகளின் ஐன்னல் கதவுகள் உடைந்து உள்ளது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் இப்பகுதிக்கு குறித்த நேரத்திற்கு பேருந்துகள் வருவதில்லை . இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள்,வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் அவதிப்படுகிறார்கள் என்று தெரிவித்தனர்.

    இது குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆகியோருடன் பிரச்சனைகள் பற்றி மேயர் கேட்டறிந்தார்.பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

    • மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் முகாம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மதுரை

    திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல (எண்5) அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இதில் மேற்கு மண்ட லத்திற்குட்பட்ட மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சவுபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம், சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், பாலாஜி நகர், அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    • சேலம் மண்டல அளவில் வருங்கால வைப்பு நிதி குறித்த குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி சேலம் இரும்பாலை சாலையில் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடக்கிறது.
    • மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மண்டல அளவில் வருங்கால வைப்பு நிதி குறித்த குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி சேலம் இரும்பாலை சாலையில் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடக்கிறது. வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமை தாங்குகிறார்.

    கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி சாலையில் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் அமலாக்க அதிகாரி சாத்தகிராமன் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. சந்தாதாரர்களுக்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், தொழில் அதிபர்களுக்கு மதியம் 3 மணி முதல் 4 மணி வரையிலும், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விருப்பம் உள்ளவர்கள் வருகிற 9-ந் தேதிக்கு முன்னதாக மாவட்ட அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டும். அல்லது ro.salem@epfindia.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ராமநாதபுரத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
    • ஜூலை மாதத்துக்கான கடந்த 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாதந்தோறும் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஜூலை மாதத்துக்கான கடந்த 26-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    தற்போது, மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வருகிற 6-ந்தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரம் சக்கரக்கோட்டையில் உள்ள மின்சார மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து நிவாரணம் பெறலாம். கூட்டம் குறித்த மற்ற விவரங்களுக்கு 04567-230577 மற்றும் 04567-231506 ஆகிய எண்களில் தொடா்புகொண்டு விவரங்களைப் பெறலாம்.

    • நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர், அது குறித்து புகார் மனுக்களை அளிக்க சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
    • காலை 10 மணி முதல் மாவட்ட எஸ்.பி மற்றும் அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களிடமும் பொதுமக்கள் நேரடியாக புகார் மனுக்களை கொடுக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர், அது குறித்து புகார் மனுக்களை அளிக்க சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாவட்ட எஸ்.பி மற்றும் அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களிடமும் பொதுமக்கள் நேரடியாக புகார் மனுக்களை கொடுக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுக்களின் மீது உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிளாம்பாடியில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
    • 3 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி பேரூராட்சி பகுதியில் க.ஒத்தக்கடையில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.இம்முகாமில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இதேபோல் கொடுமுடி அருகே கிளாம்பாடியில் தமிழக அரசின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம் முகாம் கொடுமுடி சமூகநல பாதுகாப்புத் திட்ட தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    கிளாம்பாடி பிர்க்காவுக்கு உட்பட்ட ஊஞ்சலூர், வெள்ளோட்டம் பரப்பு, கிளாம் பாடி, பாசூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். இம்முகாம்களில் குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, தெருவிளக்கு போன்ற மனுக்கள் பெறப்பட்டன.

    இம்முகாமில் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்முகாம்களில் மண்டல துணை தாசில்தார் பரமசிவம், கொடுமுடி நில வருவாய் அலுவலர் சக்திவேல், கிளாம்பாடி நில வருவாய் அலுவலர் அபிராமி, கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், சுதா, நித்யகல்யாணி, ஊஞ்சலூர் ரமேஷ், பிரபாகர், மருத்துவ துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பவானி வட்டத்திற்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகம், கவுந்தபாடி நில வருவாய் அலுவலகம், குறிச்சியில் உள்ள தனியார் மண்டபம் என 3 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், ஜாதிசான்றிதழ், வருமானம், குடியிருப்பு சான்றிதழ், குடிநீர் வசதி,சாலை வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் பவானி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் 171மனுக்களும், கவுந்தபாடியில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்ராஜ் தலைமையில் 208 மனுக்களும்,குறிச்சியில் மண்டல துணை தாசில்தார் இளஞ்செழியன் தலைமையில் 112 மனுக்களும் என மொத்தம் 491மனுக்கள் பெறப்பட்டது.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் வகையில் கோரிக்கை மனுக்களை வழங்கியவர்களுக்கு மரக்கன்றுகளை இலவசமாக தாசில்தார் முத்துகிருஷ்ணன் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    ×