search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்"

    • ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • அதன்படி, டிசம்பர் மாத 2-வது சனிக்கிழமையான வருகிற 10-ந்தேதி ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டிசம்பர் மாத 2-வது சனிக்கிழமையான வருகிற 10-ந்தேதி ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் குறைதீர் முகாம் நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து குறை நிவர்த்தி பெறலாம்.

    இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி முகாமில் கோரிக்கையினை அளிக்கும் பொதுமக்கள் மற்றும் அட்டைதாரர்கள் சார்பாக ஆன்லைன் பதிவுகளை அந்தந்த வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம்.

    செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்படின் அவற்றையும் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் அளிக்கலாம்.

    தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன்படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    • தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் அக்டோபர் மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது.
    • விவரங்களை 9-ந் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    சேலம்:

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பாக நிதி ஆப்கே நிகட் என்ற பெயரில் அக்டோபர் மாத குறைதீர் கூட்டங்கள் வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது. அதன்படி சேலம் ஸ்டீல் பிளான்ட் ரோடு தளவாய்பட்டியில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல அலுவலகத்தில் மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் சிவகுமார் தலைமையில் கூட்டம் நடக்கிறது.

    இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் மேற்கு இணைப்பு சாலை, கூட்டுறவு காலனி, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் ஹிமான்ஷு தலைமையிலும், ஈரோடு மாவட்ட அலுவலகம் ராஜ்மெஜஸ்டிஸ்ட், காவேரி சாலை, ஈரோடு சேலம் பிரதான சாலை கருங்கல்பாளையம், ஈரோடு, என்ற முகவரியில் அமலாக்க அதிகாரி சுப்ரமணிய் தலைமையிலும் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டங்களில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைகளை தெரிவிக்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதுகுறித்த விவரங்களுடன், தங்களது பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி எண், யு.ஏ.என். எண், டெலிபோன் மற்றும் செல்போன் எண்கள் ஆகிய விவரங்களை 9-ந் தேதிக்கு முன்னதாக இந்த அலுவலகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும். ஈரோடு மாவட்ட அலுவலகம் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகம் அல்லது மின்னஞ்சல் முகவரியிலும் பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கலெக்டர் கார்மேகம், தலைமையில் நடைபெற்றது.
    • அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 255 மனுக்கள் வரப்பெற்றன.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று கலெக்டர் கார்மேகம், தலைமையில் நடைபெற்றது. பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் மனுக்கள் பெறப்பட்டு, அவை அனைத்தும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 255 மனுக்கள் வரப்பெற்றன.

    மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமின்றி மனுக்க ளை வழங்கும் வகையில் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளி களுக்கென குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளிடம் பெறப்படும் மனுக்களின் மீது, உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் வழங்கிய 9 மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர், அது குறித்து புகார் மனுக்களை அளிக்க சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
    • காலை 10 மணி முதல் மாவட்ட எஸ்.பி மற்றும் அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களிடமும் பொதுமக்கள் நேரடியாக புகார் மனுக்களை கொடுக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர், அது குறித்து புகார் மனுக்களை அளிக்க சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாவட்ட எஸ்.பி மற்றும் அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களிடமும் பொதுமக்கள் நேரடியாக புகார் மனுக்களை கொடுக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுக்களின் மீது உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×