search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேயர்
    X

    பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேயர்.

    பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேயர்

    • ரூ.96.11கோடியில் 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் பலவஞ்சிபாளையம் பகுதியில் கட்டிதரப்பட்டது.
    • அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலரும் மாநாகராட்சி மேயரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் நொய்யல் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ.96.11கோடியில் 1280 அடுக்குமாடி குடியிருப்புகள் பலவஞ்சிபாளையம் பகுதியில் கட்டிதரப்பட்டது. தற்பொழுது நொய்யல் கரையோரம் வசித்து வந்த பலரும் இப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குடிசை மாற்று வாரியம் கொடுத்த குடியிருப்பில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்று அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பலரும் நேற்று திருப்பூர் மாநாகராட்சி மேயரை சந்தித்து மனு கொடுத்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட மேயர் உடனடியாக அப்பகுதிக்கு ஆய்வுக்கு வருவதாக தெரிவித்தார்.அதன்படி அப்பகுதிக்கு சென்ற மேயர் தினேஷ்குமார் குடிநீர், சாக்கடை கால்வாய் வசதி,மின்சாரவிளக்கு ,தார்சாலை மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.இது குறித்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது அப்பகுதி மக்கள் கூறுகையில் ,போதிய அடிப்படை வசதிகள் இல்லை .பல நாட்களாக குடிநீரின்றி இருப்பதாகவும் பல இடங்களில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வருவதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். குடியிருப்பில் பல வீடுகளின் ஐன்னல் கதவுகள் உடைந்து உள்ளது. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். மேலும் இப்பகுதிக்கு குறித்த நேரத்திற்கு பேருந்துகள் வருவதில்லை . இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள்,வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் காலை மற்றும் மாலை நேரங்களில் மிகவும் அவதிப்படுகிறார்கள் என்று தெரிவித்தனர்.

    இது குறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆகியோருடன் பிரச்சனைகள் பற்றி மேயர் கேட்டறிந்தார்.பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

    Next Story
    ×