குறை தீர்க்கும் முகாம்

மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் முகாம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
குறை தீர்க்கும் முகாம்
Published on

மதுரை

திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல (எண்5) அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இதில் மேற்கு மண்ட லத்திற்குட்பட்ட மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சவுபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம், சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், பாலாஜி நகர், அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

X

Maalai Malar
www.maalaimalar.com