search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grievance redressal meeting"

    • திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை கூட்டம் நடக்கிறது.
    • மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறை நிறைகளை கூறலாம்.

    திருப்பூர் :

    அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே அவினாசியை சுற்றியுள்ள மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரில் மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

    தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலையில் 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் கலந்து கொள்கிறார். எனவே மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டு கூட்டத்தில் குறை நிறைகளை கூறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • குறை தீர்வு கூட்டம் நடந்தது
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

    இதில் காட்பாடி செங்குட்டையை சேர்ந்த பாரதி (வயது 43). என்பவர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தார். நீண்ட நேரம் வரிசையில் நின்று சென்ற பாரதி, மனு அளிக்க கலெக்டர் அருகே சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் அவருக்கு தண்ணீர் தெளித்து, எழுப்பினர். காலை முதல் பாரதி சாப்பிடாமல் இருந்ததால் திடீரென மயக்கம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

    பின்னர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அவரிடம் இருந்த கோரிக்கை மனுவை ஏற்று, அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    இதனையடுத்து பாரதி சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
    • காலை 11 மணியளவில் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

    உடுமலை :

    உடுமலை வருவாய் கோட்டத்தில் உள்ள உட்கோட்ட அளவிலான மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவில் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு உடுமலை ஆர்.டி.ஓ.ஜஸ்வந்த் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • தொழிலாளர் வைப்புநிதி குறித்த விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • நிறுவனங்களும் தங்களுடைய வைப்புநிதி தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மண்டல தொழி லாளர் வைப்புநிதி ஆணை யாளர் வீரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் உள்ள சக்தி சர்க்கரை ஆலை கலையரங்கத்தில் நாளை (29-ந் தேதி) தொழிலாளர் வைப்புநிதி குறித்த விழிப்புணர்வு மற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.

    காலை 9.30 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை இந்த கூட்டத்தில் தொழிலாளர் வைப்பு நிதி சந்தாதாரர்களும், மதியம் 2 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தொழில திபர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களும் தங்களுடைய வைப்புநிதி தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது.
    • பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம், ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் கடந்த 25-ந் தேதி தொடங்கி வரும் 31-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.

    அதன்படி கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, ஈரோடு மற்றும் நம்பியூர் ஆகிய வட்டங்களில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 29-ந் தேதி வரையிலும், தாளவாடி வட்டத்தில் 25-ந் தேதி அன்றும், அந்தியூர் வட்டத்தில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 30-ந் தேதி வரையிலும், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 31-ந் தேதி வரையிலும் (சனி, ஞாயிறு நாட்கள் நீங்கலாக) அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

    அதனால் வரும் 29-ந் தேதி (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெறுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மே 2023-ம் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெறுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது. தற்ேபாது நிர்வாக காரணங்களை முன்னிட்டு, வருகிற 30-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

    • சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறஉள்ளது.
    • வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலகத்தில் வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி( புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
    • கலெக்டர் கார்மேகம் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்கு நரக அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் முன்னிலையிலும் நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் பணி புரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறை கள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி( புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்கு நரக அரசு கூடுதல் செயலா ளர், நிதித்துறை இயக்குநர் முன்னிலையிலும் நடக்கிறது.

    எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபு ரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது முறை யீட்டு மனுக்களை 2 பிரதிக ளுடன் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரிவித்துள்ளார்.

    • 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்
    • குறைகளை கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. போலீஸ் சூப்பி ரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனுவை அளித்த னர். அதனை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சம் பந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    மேலும் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 10 மனுதாரர்களை நேரில் அழைத்து. அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

    இதில் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
    • இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விவசாயிகளிடம் இருந்த கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிகிறார்.

    இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.

    தற்போது கோடை மழை பெய்து இருப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடை மழையுடன் சேர்த்து சூறாவளி காற்றும் அடித்ததால் பல இடங்களில் அறுவடை பருவத்தில் இருந்த வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இந்த கோடை மழை சுட்டெரித்த கோடை வெப்பத்தை தணித்தாலும் பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களிலும் விவசாய பயிர்கள் அழிந்துள்ளன. எனவே இதற்கு இழப்பீடு கேட்டு ஏற்கனவே விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • ராமநாதபுரத்தில் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
    • மனுக்களை வழங்கி குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெற்று வருகின்றார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    இதில் கலெக்டர் மீனவர்களின் குறைகள் மற்றும் குறைகளை கேட்ட றிந்து பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீனவர்களின் நலனில் அக்கறைகொண்டு பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். மீனவர்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கை களை மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்க ளாகவும், நேரடியாகவும் தெரிவித்து வருகின்றனர்.

    குறிப்பாக மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க கோருதல், மீனவர்கள் கடலில் இறந்ததற்கான இறப்பு நிவாரண தொகை பெற கோருதல், மீன்பிடித்தடை காலத்திற்கான உதவித்தொகை பெறுதல், பதிவு செய்யப்படாத மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்ய கோருதல், மீனவர்களுக்கான பல்வேறு வகையான உதவித்தொகை பெறுதல் போன்ற கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை வழங்கி அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்து பயன் பெற்று வருகின்றார்கள்.

    அவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக தீர்வு காண உத்தரவி டப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை ராமநாதபுரமாக மாற்றும் வகையில் மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி நடந்து வருகிறது. இதற்கு உறுதுணையாக அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

    பள்ளி, கல்லுாரி மாணவ- மாணவிகள் என தொடங்கி அனைவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக உருவாக்குவதற்கு செயல்பட்டு வருகின்றனர். இதில் மீனவர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. மீனவர்கள் ஒவ்வொருவரும் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமை ராமநாதபுரமாக உருவாக்குவதற்கு ஏதுவாக தனித்தனியாகவும், மீனவ சங்கம் சார்பிலும் மரக்கன்றுகளை கடலோர பகுதிகளில் நடுவதன் மூலம் மண் அரிப்பில் இருந்து காத்திடவும், சுகாதாரமான சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், உதவி இயக்குநர்கள் ஜெயக்குமார் சிவக்குமார், கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • குறை தீர்வு கூட்டங்கள் மாதத்தில் முதல் வாரத்தில் வட்ட அளவிலும், 2-வது வாரம் கோட்ட அளவிலும், 3-வது வாரம் மாவட்ட அளவிலும் நடைபெறும்
    • பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை துறை இணை இயக்குனர் வடமலை உள்பட அதிகாரிகள் பலர் முன்னிலை முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ,விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் குறித்த நேரத்தில் நடத்த வேண்டும்,நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறது,நெல் பயிர் செய்யாத, விவசாயி அல்லாதவர்கள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து விற்பனை செய்து ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

    ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விலை பட்டியல் இருப்பது போன்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் விலை பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அந்தந்த பகுதி விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து தான் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    குறை தீர்வு கூட்டங்கள் மாதத்தில் முதல் வாரத்தில் வட்ட அளவிலும், இரண்டாவது வாரம் கோட்ட அளவிலும், மூன்றாவது வாரம் மாவட்ட அளவிலும் நடைபெறும், விவசாயிகளின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் இருந்தால் திடீர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×