போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனு அளித்தனர் குறைகளை கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது. போலீஸ் சூப்பி ரண்டு பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் மனுவை அளித்த னர். அதனை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு சம் பந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 10 மனுதாரர்களை நேரில் அழைத்து. அவர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

இதில் துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com