என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில், 28-ந் தேதிவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
- விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
- இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகிற 28-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, விவசாயிகளிடம் இருந்த கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிகிறார்.
இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.
தற்போது கோடை மழை பெய்து இருப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கோடை மழையுடன் சேர்த்து சூறாவளி காற்றும் அடித்ததால் பல இடங்களில் அறுவடை பருவத்தில் இருந்த வாழை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இந்த கோடை மழை சுட்டெரித்த கோடை வெப்பத்தை தணித்தாலும் பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல இடங்களிலும் விவசாய பயிர்கள் அழிந்துள்ளன. எனவே இதற்கு இழப்பீடு கேட்டு ஏற்கனவே விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.






