அவினாசி, தாராபுரத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது

திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை கூட்டம் நடக்கிறது. மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு குறை நிறைகளை கூறலாம்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

அவினாசி மின்சார வாரிய செயற்பொறியாளர் பரஞ்சோதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது :- திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. எனவே அவினாசியை சுற்றியுள்ள மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரில் மனு அளித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

தாராபுரம் மின்வாரிய அலுவலகத்தில் நாளை (புதன்கிழமை) காலையில் 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்லடம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைபொறியாளர் கலந்து கொள்கிறார். எனவே மின் நுகர்வோர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், தொழில் முனைவோர் கலந்து கொண்டு கூட்டத்தில் குறை நிறைகளை கூறலாம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com