search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt bus"

    • டிக்கெட் பரிசோதகர், ரெட் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தார்.
    • டேவிட் தனது சட்டை பையில் டிக்கெட்டை தேடி உள்ளார்.

    நெல்லை:

    ஆலங்குளத்தை சேர்ந்தவர் டேவிட்(வயது 36). இவர் நேற்று மாலை நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். இதற்காக ஆஸ்பத்திரியில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் மூலமாக இயக்கப்படும் சிவப்பு நிற பஸ்சில் சந்திப்பு பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்ற டிக்கெட் பரிசோதகர், ரெட் பஸ்சில் இருந்து இறங்கிய பயணிகளிடம் டிக்கெட்டுகளை வாங்கி பரிசோதித்தார். அந்த சமயத்தில் பஸ்சில் இருந்து இறங்கிய டேவிட்டிடம் டிக்கெட்டை கேட்டுள்ளார். உடனே அவர் தனது சட்டை பையில் டிக்கெட்டை தேடி உள்ளார். ஆனால் பையில் டிக்கெட்டை காணவில்லை.

    உடனே பரிசோதகர் அபராதம் விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார். ஆனால் டேவிட், தான் டிக்கெட் எடுத்ததாகவும் சில நிமிடங்கள் பொறுங்கள். எனது பையில் இருக்கிறதா என்று தேடிப்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அதனை ஏற்க மறுத்த பரிசோதகர் ரூ.200 அபராதமாக விதித்து ள்ளார். அபராத சீட்டு எழுதி முடித்ததும், டேவிட் தேடிய டிக்கெட் அவரது கைப்பையில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

    உடனே அவர் டிக்கெட்டை பரிசோதகரிடம் காட்டி உள்ளார். ஆனால் அபராதம் விதித்தபின் மாற்ற முடியாது என்று அலட்சியமாக கூறிவிட்டு பரிசோதகர் சென்றுவிட்டார் எனவும், பரிசோதகரின் பொறுமையின்மையால் ரூ.15 டிக்கெட்டுக்கு ரூ.200 அபராதமாக செலுத்தி உள்ளேன் எனவும் டேவிட் வருத்தத்துடன் தெரிவித்தார்.

    • இங்கு 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
    • தினமும் காலை 6, 8 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 9 .15 மணிவரை பஸ்கள் இயக்கப்படும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் பக்காசூரன் மலைக் கிராமம் உள்ளது.

    இங்கு 100-க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள மாணவ, மாணவிகளில் பலர் குன்னூரில் படிக்கின்றனர்.

    கிராமத்தினரும் அடிக்கடி வேலைக்கு சென்று திரும்புகின்றனர். பக்காசூரன் கிராமத்தில் போதிய சாலை வசதிகள் இல்லை. எனவே அங்கு வசிக்கும் மக்கள், பல கிலோ மீட்டா் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது.

    எனவே பக்காசூரன் மலைகிராமத்துக்கு அரசு பஸ் விடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் போக்குவரத்து சாலை அமைக்கப்பட்டது.

    இருப்பினும் அங்கு பஸ் சேவை தொடங்கவில்லை.. இதுகுறித்து உலிக்கல் பேரூராட்சி, மாவட்ட நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியது.

    இதனை தொடர்ந்து பக்காசூரன் மலைக்கு பஸ் சேவை தொடங்குவது என்று போக்குவரத்துத் துறை முடிவு செய்தது.

    இதன்படி அங்கு நேற்று முதல் அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பக்காசூரன் கிராமத்துக்கு தினமும் காலை 6, 8 மணி, மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 9 .15 மணிவரை பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனா. உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பக்காசூரன் கிராமத்தில் 5 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் சேவை தொடங்கப்பட்டு இருப்பது பொதுக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    • வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அய்யப்பன் அதிர்ச்சி அடைந்தார்.
    • அரசு பஸ்சை டிரைவர் கட்டி பிடித்து அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோலியனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது57). இவர் பண்ருட்டி அரசு பணிமனையில் உள்ள பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களாக பண்ருட்டியில் உள்ள பணிமனையில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வந்தது. ஆனால் டிரைவர் அய்யப்பனுக்கு பணிமனை அலுவலகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் அடிக்கடி ஆப்சென்ட் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் பாதி சம்பளம் பெற முடியாமல் அய்யப்பன் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் 6 நாள் முழுவதும் வேலைக்கு வந்தும் வருகை பதிவேட்டில் 6 நாளும் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல அய்யப்பன் பணிக்கு வந்தார். அப்போது வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து கிளை மேலாளரிடம் கேட்ட போது, எனக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளார். அலுவலகத்தில் இருப்பவர்களிடம் கேட்ட போது அவர்களும் எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளனர்.

    இதனால் மனவேதனை அடைந்த அய்யப்பன் திடீரென தான் ஓட்டும் பஸ்சை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ் டிரைவருக்கு வருகை பதிவேட்டில ஆப்சென்ட் போடப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து ஊழியர்களின் நலன் காக்க வேண்டும் என அய்யப்பன் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அரசு பஸ்சை டிரைவர் கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்தை ஏற்படுத்திவிட்டு அரசு பஸ்நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எறையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின்நாதன் .இவர் தனது 6மாத கர்ப்பிணி மனைவி கோகிலாவுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். தீவனூர் அருகே செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவருடன் சென்ற 6 மாதம் கர்ப்பிணி கோகிலா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்தார். அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . விபத்தை ஏற்படுத்திவிட்டு அரசு பஸ்நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து ரோஷனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஸ்களில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை.
    • பஸ்களில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமாக பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இந்த பஸ்களில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை. கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

    இதை தற்போது 5 வயது வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பஸ்களில் 5 வயதுக்கு மிகாத குழந்தை கணக்கிடப்படாது. கட்டணமும் வசூலிக்கப்படாது.

    மாவட்ட விரைவு பஸ்களில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி தற்போது 5 வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • நாய் ஒன்று அரசு பேருந்து முன்பு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய பஸ் புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாகதெரியவந்தது
    • மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    உடுமலை:

    உடுமலை கொல்லபட்டறை பகுதியில் கோவையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சாலை யோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது . இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி பலத்த சேதம் அடைந்தது . இதில் பயணம் செய்தவர்களில், கோவையை சேர்ந்த முத்துலட்சுமி (வயது56), மதுரையைச் சேர்ந்த அய்யம்மாள் (70), பொள்ளாச்சி சுஜித் (26) ஆகிய மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை நடத்திய விசாரணையில், நாய் ஒன்று அரசு பேருந்து முன்பு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய பஸ் புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாகதெரியவந்தது . இதுகுறித்து உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சாலை விபத்தில் 4 பேர் பலியாகினர்.
    • அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மயிலாடுதுறை:

    திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி அரசு சொகுசு பேருந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புறவழிச் சாலையில் பாதரகுடி அருகே சாலையோரம் நின்ற டேங்கர் லாரி மீது பஸ் அதிவேமாக மோதி எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.

    இவ்விபத்தில் அரசு பஸ் நடத்துனர் விஜயசாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த சிதம்பரம் பள்ளிப்படை கிராமத்தைச் சேர்ந்த ஓதுவார்கள் பத்மநாபன், அருள்ராஜ், பாலமுருகன் ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பஸ்சில் பயணித்த 26 பேர் படுகாயம் அடைந்து சீர்காழி மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவ மணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் பாவையிட்டு ஆய்வு செய்த மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், தி.மு.க மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா.எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் ஆகியோர் சீர்காழி அரசு மருத்து வமனை சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

    மேலும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் பயணிகளியும் சந்தித்து நலம் விசாரித்தனர். 

    • குமுளி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டது.
    • ஏற்றமான சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்ததால் பிரேக் பிடிக்காமல் பஸ் பின்னோக்கி சென்றது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இருந்து ஏராளமான பஸ்கள் குமுளி மலைச்சாலை, லோயர் கேம்ப், மேகமலை, ஹைவேவிஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான பஸ்கள் தரமற்ற முறையில் இருப்பதால் மலைச்சாலையில் விபத்தில் சிக்கி நடுவழியில் நின்று விடுவது வாடிக்கையாக உள்ளது.

    மேலும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்பதால் அளவுக்கு அதிகமான பயணிகள் மலைச்சாலையில் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ஒரு அரசு பஸ்சில் 100 பயணிகள் வரை செல்லும் நிலை உள்ளது. இதனால் அடிக்கடி பிரேக் பழுது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் குமுளி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ் 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டது. லோயர் கேம்ப் மலைச்சாலையில் மாதா கோவில் அருகே சென்றபோது பஸ்சில் பிரேக் பழுதானது. டிரைவர் மகாராஜன் இது குறித்து கண்டக்டர் சுதாகரிடம் தெரிவித்தார். ஏற்றமான சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்ததால் பிரேக் பிடிக்காமல் பஸ் பின்னோக்கி சென்றது. பஸ்சில் பிரேக் பிடிக்காதது குறித்து பயணிகளுக்கு தெரிவிக்கவே அவர்கள் அலறியடித்தவாறு பஸ்சில் இருந்து குதிக்கத் தொடங்கினர். ஆண்களும், பெண்களும் குழந்தைகளுடன் பஸ்சில் இருந்து குதித்து வெளியேறினர்.

    அதன் பிறகு சக்கரத்தின் அடியில் பெரிய கற்களைப் போட்டு நிறுத்தினர்.

    டிரைவர் உரிய நேரத்தில் பஸ்சில் ஏற்பட்ட பழுதை தெரிவித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மலைச்சாலைகளில் இயக்கப்படும் அரசு பஸ்களை தரமான முறையில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சந்தோஷ்குமார் (28), விவசாயி, இவர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
    • அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் கிழக்குத் தெரு சேர்ந்தவர்மாணிக்கவேல் இவரது மகன் சந்தோஷ்குமார் (28), விவசாயி,இவர்,நேற்று இரவு 7 மணிக்கு நடுக்குப்பம் 4 முனை ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியதுங இதில் சந்தோஷ்குமாருக்கு நெற்றியில் பலத்த அடிபட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர்புதுவை பீம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டி குப்பம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் கண்டக்டரின் வீடு தீப்பற்றி எரிந்தது.
    • மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம்

    பெரம்பலூர்

    பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பிரதான சாலையில் வசித்து வருபவர் கலியபெருமாள்(வயது 52). இவர் பெரம்பலூர்-அரியலூர் இடையே சென்று வரும் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுமதி என்ற மனைவியும், கவிமணி, காவியா என்ற 2 மகள்களும் உள்ளனர். கலியபெருமாள் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டார். சுமதி, தனது பேரக்குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், டாக்டரிடம் காண்பிக்க பெரம்பலூருக்கு சென்று விட்டார்.

    இந்நிலையில் கலியபெருமாளின் வீட்டில் தீப்பற்றி புகை வெளியேறியது. இதைப்பார்த்த அக்கம், பக்கத்தினர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதற்கிைடயே கலியபெருமாள் வீட்டின் சமையல் அறை முழுவதும் எரிந்ததில், அங்கிருந்த அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்கள் நாசமாயின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவையில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று அரசு பஸ் புறப்பட்டு சென்றது.
    • ஆம்னி வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதின.

    வெள்ளக்கோவில் :

    கோவையில் இருந்து கும்பகோணத்திற்கு இன்று அரசு பஸ் புறப்பட்டு சென்றது. வெள்ளக்கோவில் அருகேயுள்ள வெள்ளமடை திருச்சி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திருப்பூரில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி வேனும் பஸ்சும் நேருக்கு நேர் மோதின.

    இதில் ஆம்னி வேனில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து தகவல் கிடைத்து விரைந்து சென்ற வெள்ளக்கோவில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் இறந்தவர்கள் திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்த பிரமிளா (வயது 45), அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரது மகன் லோகேஸ்வரன் (வயது26) என்பது தெரியவந்தது. மேலும் 4 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே ஒடேன் மற்றும் அதை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளது.

    இந்த கிராமங்களுக்கு கொரோனாவுக்கு முன்பு வரை அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.

    கொரோனா பாதிப்புக்கு பிறகு பஸ் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நடந்தே சென்று வந்தனர்.

    மேலும் ஒடேன், ஜக்ககம்பை கிராமத்திற்கு செல்லும் சாலையில் அதிக அளவில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்ததால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்நிலையில் தங்கள் பகுதிக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு மனு அளித்தனர். மனுவை ஏற்றுக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.

    அதனை தொடர்ந்து ஒடேன் மற்றும் அதை சுற்றி உள்ள கிராமத்திற்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு அரசு பஸ் இயக்கம் தொடங்கியது.

    ஒடேன் கிராமத்தில் பஸ்சிற்கு பூஜை செய்து தொடங்கப்பட்டது. பஸ் உல்லத் தட்டி, ஜக்ககம்பை, ஒடேன் வழியாக கோத்தகிரிக்கு இயக்கப்படுகிறது.

    கோத்தகிரியில் இருந்து காலை 6.50 மணி, மாலை 6 மணிக்கு என பஸ் இயக்கப்படுகிறது. பஸ் இயக்குவதற்கு உறுதுணையாக இருந்த கீழ் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் காவிலோரை பீமனுக்கு கிராம மக்கள் நன்றி கூறினார்கள்.

    இதில் ஊர் தலைவர் சண்முகம், ஊர் நிர்வாகிகள் காந்தி போஜன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் ஒடேன் ரவி, ராஜி, ரமேஷ், ஜெயக்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×