பண்ருட்டி அருகே அரசு பஸ் மோதி விவசாயி பலி

சந்தோஷ்குமார் (28), விவசாயி, இவர் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சந்தோஷ்குமார்.
சந்தோஷ்குமார்.
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த நடுக்குப்பம் கிழக்குத் தெரு சேர்ந்தவர்மாணிக்கவேல் இவரது மகன் சந்தோஷ்குமார் (28), விவசாயி,இவர்,நேற்று இரவு 7 மணிக்கு நடுக்குப்பம் 4 முனை ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ்மோட்டார் சைக்கிள் மீது மோதியதுங இதில் சந்தோஷ்குமாருக்கு நெற்றியில் பலத்த அடிபட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர்புதுவை பீம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டி குப்பம்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com