என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்துக்குள்ளான அரசு பஸ்சை படத்தில் காணலாம்.
உடுமலையில் மரத்தில் அரசு பஸ் மோதி விபத்து
- நாய் ஒன்று அரசு பேருந்து முன்பு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய பஸ் புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாகதெரியவந்தது
- மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடுமலை:
உடுமலை கொல்லபட்டறை பகுதியில் கோவையில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக சாலை யோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது . இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி பலத்த சேதம் அடைந்தது . இதில் பயணம் செய்தவர்களில், கோவையை சேர்ந்த முத்துலட்சுமி (வயது56), மதுரையைச் சேர்ந்த அய்யம்மாள் (70), பொள்ளாச்சி சுஜித் (26) ஆகிய மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறை நடத்திய விசாரணையில், நாய் ஒன்று அரசு பேருந்து முன்பு குறுக்கே வந்ததால் நிலை தடுமாறிய பஸ் புளிய மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாகதெரியவந்தது . இதுகுறித்து உடுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story