search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor kiranbedi"

    வரம்பு மீறி செயல்படும் புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு மார்க்சிஸ்டு கம்யூ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குவதற்கு பட்ஜெட்டிற்கான கோப்புகளை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திவரும் கவர்னர் கிரண்பேடியின் அடாவடி செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. 

    புதுவையில் பொருளாதார மந்தம், வேலையின்மை, கடன் சுமை என அசாதாரன சூழ்நிலை ஏற்ப்பட்டு வரும் நிலையில் செயல் மக்களின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியுள்ளது.

    மத்திய பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் மாநில கவர்னர்களை தனது சொந்த அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி வருகிறது. இதனால் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கோட்பாடு சிதைக்கப்படுகின்றன. மாநில கவர்னர்களின் அத்துமீறிய செயல்பாடுகளால் கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

    புதுவையிலும் கவர்னர் மக்கள் ஆட்சியை புறந்தள்ளி போட்டி ஆட்சியை நடத்தி வருகிறார். அனைத்து துறைகளிலும் தன்னிச்சையாக வரம்பு மீறி செயல்பட்டு வருகிறார் தற்போது நடப்பாண்டிற்க்கான மொத்த வரவு, செலவு திட்ட மதிப்பீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளது. இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்க்கு உரியதாகும்.

    மேலும் கவர்னர் தன்னிச்சையாக 3.பா.ஜனதா தலைவர்களை நியமன உறுப்பினர்களாக மத்திய அரசுக்கு பரிந்துரைத்து அவசர அவசகரமாக இரவில் பதவி பிரமானமும் செய்து வைத்தார். இத்தகைய கீழ்த்தரமான அரசியல் மற்றும் ஜனநாயக படுகொலை செயல் புதுவையில் எப்போதும் நடந்ததில்லை.

    மாநில அரசால் பரிந்துரை செய்யப்பட்டு கவர்னர் மூலமாக மத்திய அரசிடம் அனுமதி பெறுவது தான் சட்டமும், நடைமுறையும் மரபுமாக இருந்து வருகிறது.

    ஆகவே, புதுவை காங்கிரஸ் அரசு மாநிலத்தின் உரிமை, மக்களாட்சியின் அதிகாரத்தை பாதுகாத்திட நியமன உறுப்பினர்கள் தொடர்பான வழக்கில் உறுதியாக சட்டபடியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

    புதுவை மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரம், சுதந்திரமான, ஜனநாயக பூர்வமான செயல்பாடுகளுக்கு மாநில அந்தஸ்து பெறுவது தான் நிரந்தர தீர்வாகும். ஆகவே புதுவை மாநிலத்தின் நலன் மற்றும் உரிமைகளை பாதுகாத்திட மாநில அந்தஸ்து பெறுவதற்கான முயற்ச்சியில் அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டும்.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    காலாப்பட்டில் சுனாமி குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக வந்த புகாரை தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி அங்கு சென்று தொழிற்சாலைக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    சேதராப்பட்டு:

    காலாப்பட்டில் சுனாமி குடியிருப்பில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக வந்த புகாரை தொடர்ந்து கடந்த வாரம் கவர்னர் கிரண்பேடி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை பார்வையிட்டார்.

    மேலும் குடிநீர் பற்றாக்குறைக்கு அங்குள்ள தனியார் தொழிற்சாலை தான் காரணம் என்றும் அங்கு அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் அந்த தொழிற்சாலையை பார்வையிட்டு கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.

    அப்போது தொழிற் சாலையில் எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது என்ற தகவலை கவர்னர் கேட்ட போது, அது பற்றிய விவரங்கள் அங்கிருந்த அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தெரியவில்லை.

    இதையடுத்து கவர்னர் கிரண்பேடி அடுத்த முறை வரும் போது, சரியான விவரங்களை அளிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து சென்றார்.

    இந்த நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கவர்னர் கிரண்பேடி பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறை, சுற்றுச்சூழல் துறை, அறிவியல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகளுடன் காலாப்பட்டு தனியார் தொழிற்சாலைக்கு சென்றார். அங்கு மாத்திரை உற்பத்தி செய்யும் பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கிருந்த தொழிற்சாலை அதிகாரிகளிடம் இந்த தொழிற்சாலை எப்போது தொடங்கப்பட்டது? மழைநீர் சேகரிப்பு எந்த ஆண்டில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. என்று அடுக்கடுக்கான கேள்விகளை கவர்னர் கேட்டார்.

    நிலத்தடி நீரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    மேலும் மக்களுக்கு பணத்தை கொடுத்து செலவு செய்வதை விட மழைநீரை சேமிக்க பெரிய குளமோ, குட்டையோ ஏற்படுத்த வேண்டும் என தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார். மேலும் இதனை வருகிற 29-ந் தேதி பார்வையிட வருவதாகவும் கவர்னர் கிரண்பேடி எச்சரிக்கை விடுத்தார்.

    தனக்கு அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டும் என்று நாராயணசாமிக்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    டெல்லி மாநில அரசில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.

    அதில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கே அதிகாரம் இருக்கிறது என்று கூறப்பட்டு இருந்தது.

    புதுவையிலும் கவர்னருக்கு அதிகாரமா? தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு அதிகாரமா? என்ற சர்ச்சை நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த நிலையில் டெல்லி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அளித்த தீர்ப்பில் கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருப்பது புதுவைக்கு பொருந்தும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

    இந்த தீர்ப்பை மீறி கவர்னர் செயல்பட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் நாராயணசாமி எச்சரித்தார்.

    இது சம்பந்தமாக கவர்னர் கிரண்பேடி கூறும் போது, டெல்லி மாநில சம்பந்தமாக அளித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது, இதை சுப்ரீம் கோர்ட்டே சுட்டிக்காட்டி இருக்கிறது என்று கூறினார்.


    இதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் -அமைச்சரவைக்கு உள்ள அதிகாரம் தொடர்பாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே அது புதுவைக்கு பொருந்தும். மேலும் அரசியல் சாசன பெஞ்ச் அளிக்கும் தீர்ப்பு எல்லா மாநிலத்துக்கும் பொதுவானது என்று கூறினார்.

    இதனால் இந்த தீர்ப்பு புதுவைக்கு பொருந்துமா? இல்லையா? என்ற சர்ச்சை நீடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவர்னர் கிரண்பேடி இது சம்பந்தமாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறும் போது,

    எனக்கு (கவர்னர்) அதிகாரம் இல்லை என சொல்பவர்கள் சுப்ரீம் கோட்டு தீர்ப்பை முழுமையாக படித்து பார்க்க வேண்டும். அதில் கவர்னருக்குள்ள அதிகாரம் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார். #Kiranbedi
    கவர்னர் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு புதுவைக்கு முழுமையாக பொருந்தும் என்று அம்மாநில முதல்-மந்திரி நாராயணசாமி மீண்டும் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தின் காரைக்கால், மாகி, ஏனாம் உட்பட வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத சென்ற 304 மாணவர்களுக்கு முதல்- அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து மொத்தமாக ரூ. 5 லட்சத்து 16 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை கல்வித்துறைக்கு அனுப்பப்படுகின்றது.

    நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். புதுவை வந்த துணை ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனியாக பேசும் போது புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து,15-வது நிதிக்கமி‌ஷனில் புதுவையை இணைத்து சிறப்பு நிதி வழங்க வேண்டும்.

    புதுவை மாநில மாணவர்களுக்கு பல்கலைக் கழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். புதுவை பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கு முழுமையாக பொருந்தும். கவர்னருக்கு கோப்புகளில் சந்தேகம் ஏற்பட்டால் அமைச்சர், அதிகாரிகளுடன் பேசி ஒப்புதல் அளிக்க வேண்டும்.


    கவர்னருக்கு விளக்கம் கேட்க அதிகாரம் உண்டு. கோப்புகளை திருப்பி அனுப்பவோ அல்லது நிராகரிக்கவோ அதிகாரம் இல்லை.

    கவர்னர் தனது கருத்தை அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் திணிக்க கூடாது. கவர்னரின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருகிறேன். சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்தும் வருகின்றேன். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம்.

    மத்திய சட்டத்துறை மத்திய மாநில தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த கூட்டத்தை இன்றும் நாளையும் டெல்லியில் நடத்துகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு ஏற்றதல்ல.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #Congress #Narayanasamy #Kiranbedi
    உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி காரணமாக இன்று ஊசுடு ஏரிக்கு ஆய்வு சென்ற கவர்னர் கிரண்பேடியுடன் அதிகாரிகள் செல்லாமல் புறக்கணித்தனர்.
    புதுச்சேரி:

    யூனியன் பிரதேச கவர்னர்களுக்கு தனி அதிகாரம் இல்லை என ஆம் ஆத்மி கட்சி தொடுத்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் அமைப்பு பெஞ்ச் வழங்கிய இந்த தீர்ப்பு நாடு முழுவதுமுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்று புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    அதோடு இனி புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு கோப்புகளை பார்வைக்காக மட்டுமே அனுப்புவோம். மேலும், கவர்னருக்கு புதுவை மாநிலத்தின் பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உரிமை உண்டு. ஆனால், அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அதிகாரம் இல்லை என்றும் கூறியிருந்தார்.

    இதற்கு கவர்னர் தரப்பில் யூனியன் பிரதேசமான புதுவையும், டெல்லியும் ஒன்றல்ல என்றும் அரசியல் அமைப்பு சட்டத்தின் இருவேறு பிரிவுகளின் கீழ் 2 யூனியன் பிரதேசங்களும் இடம் பெற்றுள்ளது. இதனால், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு புதுவைக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டது.

    இதனால் ஏற்கனவே புதுவையில் நிலவி வந்த கவர்னர், முதல்- அமைச்சர் இடையிலான மோதல் முற்றி உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு கவர்னர் கிரண்பேடி மதிப்பளிக்கவில்லை என்றால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து கோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்றும் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் வழக்கம் போல் வார இறுதி நாளான இன்று கவர்னர் கிரண்பேடி ஊசுடு ஏரிக்கு ஆய்வுக்கு சென்றார். கவர்னருடன் வழக்கமாக அரசு துறையின் முக்கிய அதிகாரிகள் உடன் செல்வது உண்டு.

    ஆனால், இன்றைய தினம் ஏரிக்கு சைக்கிளில் சென்ற கவர்னருடன் பெரும்பாலான அதிகாரிகள் உடன் செல்லவில்லை. வனத்துறை அதிகாரி குமார் மற்றும் வழக்கமாக செல்லும் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எதிரொலி காரணமாகவே அதிகாரிகள் கவர்னருடன் செல்லாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

    ஊசுடு ஏரியை சுற்றிப் பார்த்த கவர்னர் கிரண்பேடி அங்கு மரக்கன்றுகளை நட்டார். பின்னர் மீண்டும் சைக்கிளிலேயே ராஜ்நிவாஸ் திரும்பினார். #Kiranbedi
    கவர்னரை விட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே கருதப்படுகிறது. #DelhiPowerTussle
    புதுச்சேரி:

    நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும் டெல்லி, புதுவை ஆகிய 2 மாநிலங்களில் மட்டுமே சட்டசபை உள்ளது.

    நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிக அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது. கவர்னர் அங்கு பெயரளவுக்குத்தான் செயல் பட முடியும்.

    ஆனால், புதுவையும், டெல்லியும் யூனியன் பிரதேசம் என்பதால் கவர்னர்கள் தங்களுக்குத்தான் அதிக அதிகாரம் என கூறி செயல்பட்டு வந்தனர்.

    புதுவையில் கவர்னர் கிரண்பேடி கவர்னராக வந்த பிறகு பல்வேறு பணிகளையும் தனது கையில் எடுத்து செயல்பட்டார்.

    இதனால் கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் மோதல் ஏற்பட்டது. இன்று வரை அந்த மோதல் நீடித்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று அமைச்சரவை தரப்பில் கூறுகிறார்கள்.

    ஆனால், கவர்னர் தனக்குத்தான் அதிக அதிகாரம் என கூறி தொடர்ந்து தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார். அவரே அரசு அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி உத்தரவுகள் பிறப்பிக்கிறார். அமைச்சரவை முடிவுகளுக்கும் உரிய அங்கீகாரம் அளிக்க மறுக்கிறார்.

    இதனால் புதுவையில் அரசுக்கும், கவர்னருக்கும் மோதல் போக்கு உச்சக்கட்டத்தில் உள்ளது.


    இந்த நிலையில் தான் டெல்லியில் கவர்னருக்கு உள்ள அதிகாரம் தொடர்பான வழக்கில் கவர்னரை விட தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது. அமைச்சரவையின் முடிவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அரசு செயல்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

    புதுவை யூனியன் பிரதேசம் என்பதால் அந்த தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் என்று கருதப்படுகிறது. எனவே, இதுவரை அதிகாரம் செலுத்தி வந்த கவர்னர் கிரண்பேடி இனிமேலும் அதுபோல் செயல்பட முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு புதுவை கவர்னருக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே கருதப்படுகிறது.

    இந்த தீர்ப்பால் புதுவை அமைச்சரவை மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப்படையில் இனி புதுவை அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. #DelhiPowerTussle
    கவர்னர் கிரண்பேடி தன்னுடைய முயற்சியால் மின்கட்டண பாக்கி வசூலாகி உள்ளதாக பொய்பிரசாரம் செய்து வருகிறார் என்று நமச்சிவாயம் குற்றம் சாட்டியுள்ளார்.

    புதுச்சேரி:

    அமைச்சர் நமச்சிவாயம் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை அரசு எடுத்த நடவடிக்கையாலும் பெரும் முயற்சியாலும் மட்டுமே மின்துறை அதிக அளவில் மின் கட்டண பாக்கி வசூலாகி உள்ளது. ஆனால் கவர்னர் கிரண்பேடி தன்னுடைய முயற்சியால் மின்கட்டண பாக்கி வசூலாகி உள்ளதாக பொய்பிரசாரம் செய்து வருகிறார். காகம் உட்கார பனம்பழம் விழுந்த கதையாகத்தான் இது உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காலாப்பட்டு கடற்கரையில் சுற்றுலா வளர்ச்சி பணிகளை கவர்னர் கிரண்பேடி ஆய்வு செய்தார்.
    சேதராப்பட்டு:

    புதுவையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரூ.80 கோடி செலவில்  கடற்கரை மேலாண்மை திட்டத்தின்  கீழ் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை கவர்னர் கிரண்பேடி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு  செய்து வருகிறார். 

    அதுபோல காலாப்பட்டில் மத்திய அரசு மற்றும் புதுவை அரசு இணைந்து நடத்தும் அசோகா ஓட்டல் பின்புறம் உள்ள கடற்கரையில்  சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பூங்கா, நடைபாதை மற்றும் சுற்றுலா பயணிகள் சூரிய குளியல் செய்ய வசதி மற்றும் யோகா மையம் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை கவர்னர் கிரண்பேடி இன்று காலை 6.40 மணியளவில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது நடைபெற்று வரும் பணிகள், மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். 

    இந்த பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளிடம் அவர் அறிவுறுத்தினார்.
    பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் கவனத்தோடு தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடியை நாராயணசாமி கடுமையாக தாக்கி பேசியுள்ளார். #Narayanasamy #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளது. வாரியத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகள், 4 மாநில பிரதிநிதிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் இடம்பெறுகின்றனர். இது பல ஆண்டாக தமிழகமும், புதுவையும் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.

    உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும்கூட கர்நாடக தேர்தலைமையமாக வைத்து பா.ஜனதா மேலாண்மை வாரியம் அமைப்பதை காலதாமதம் செய்து வந்தது. அதோடு வாரியத்திற்கு அதிகாரம் இல்லாமல் நீர்த்துப்போகச்செய்யும் வகையில் வாரியம் அமைப்பதற்கான வரைவு திட்டத்தையும் வெளியிட்டது. இதை புதுவை அரசு கடுமையாக எதிர்த்தது. புதுவைக்காக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல் நம்பியார் முழு அதிகாரம் கொண்ட வாரியத்தை அமைக்க வேண்டும் என வாதிட்டார். இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. வாரியம் அமைத்ததால் காரைக்காலுக்கு காவிரி நீர் கிடைக்கும். எப்போது திறந்துவிட வேண்டும் என்பதை வாரியம் முடிவு செய்யும்.

    2 நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் 10 சட்ட மன்ற தொகுதி, 2 எம்.பி. தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் பா.ஜனதா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மதச்சார்பற்ற அணிகள் ஒருங்கிணைந்தால் பா.ஜனதா வீழ்ச்சி உறுதி என்பது தெளிவாகியுள்ளது. மதச்சார்பற்ற அணிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார். 2019ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும்.

    ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி மக்கள் 13 பேர் இறந்துள்ளனர். தமிழக காவல்துறை அப்பாவி மக்களை சுட்டுக்கொன்றதை ஏற்க முடியாது, கண்டிக்கத்தக்கது. நடிகர் ரஜினிகாந்த் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று தேசவிரோத சக்திகள் நுழைந்து கலவரத்தை ஏற்படுத்தியதாக கருத்து கூறியுள்ளார். இந்த கருத்து அப்பகுதி மக்களின் மனதை புண்படுத்தியுள்ளது. இந்த கருத்து ஏற்புடையதல்ல. இதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவர் பெருந்தன்மையானவர் என்றால்அவர் கூறிய கருத்தை திரும்பப்பெற வேண்டும். மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதை ஏற்க முடியாது. ஆதாரமில்லாமல் ரஜினி பேசுவது யாரோ அவரை பின்புறம் இருந்து இயக்குகிறார்களோ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என கவர்னர் கருத்து தெரிவித்துள்ளார். இது கவர்னரின் தனிப்பட்ட கருத்து. புதுவை அரசின் கருத்து அல்ல. மத்திய அரசில் பல பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளது. இதில் பல நஷ்டத்தில்தான் இயங்குகிறது. அதுபோல வங்கிகளும் நஷ்டத்தில் இயங்குகிறது. இதற்காக இவற்றை இழுத்து மூடி விட முடியுமா? பதவி, பொறுப்பில் உள்ளவர்கள் கவனத்தோடு தங்கள் கருத்துக்களை வெளியிட வேண்டும். புதுவையில் பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இடைக்கால அறிக்கை தற்போது கிடைத்துள்ளது. அதன்படி நிறுவனங்களை புனரமைப்பு செய்வது குறித்து அரசு முடிவெடுக்கும்.


    காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசே பெட்ரோல் விலையை நிர்ணயித்தது. பா.ஜனதா பெட்ரோலிய நிறுவனங்கள் விலையை நிர்ணயிக்க வழி செய்தது. இதனால் நாள்தோறும் பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. எங்கள் ஆட்சியில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, கியாஸ் ஆகியவற்றுக்கு மானியம் அளித்தோம். சமீபத்தில் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.46 உயர்ந்துள்ளது. 4 ஆண்டில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் மத்திய அரசு ரூ.10 லட்சம் கோடி சம்பாதித்துள்ளது. இது மக்கள் பணத்தை கொள்ளையடித்ததற்கு சமம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மத்திய பா.ஜனதா அரசு மீது கோபத்தில் உள்ளனர். நாட்டில் புதுவையில்தான் குறைந்த விலையில் பெட்ரோல் விற்கப்படுகிறது.

    கிழக்கு கடற்கரை சாலையை நான்குவழி சாலையாக மாற்றும் பணி மகாபலிபுரம் வரை நிறைவடைந்துள்ளது. மகாபலிபுரத்திலிருந்து விழுப்புரம் வரை அடுத்தகட்டமாக 4 வழி சாலை விரிவடையவுள்ளது. இந்த சாலை பல்கலைக்கழகத்தின் பின்புறம் ஊசுடு, உளவாய்க்கால், நவமால்காப்போர் வழியாக விழுப்புரத்திற்கு செல்லும். நாகையிலிருந்து விழுப்புரம் வரும் சாலையுடன் அது இணையும். இதனால் சென்னைக்கு தற்போது இரண்டரை மணி நேர பயணம் ஒன்றரைமணி நேரமாக குறையும். இந்த சாலை பல்கலைக்கழகத்திற்கு முன்புறம் வந்தால் குடியிருப்புகள் பாதிப்படையும் என்பதால் பின்புறம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணி விரைவில் தொடங்கப்படும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    பேட்டியின்போது துணை சபாநாயகர் சிவகொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன் ஆகியோர் உடனிருந்தனர். #Narayanasamy #Kiranbedi
    புதுவையின் வளர்ச்சியில் இதுவரை கவர்னர் கிரண்பேடியின் பங்கு ஒரு சதவீதம் கூட இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார். #congress #Narayanasamy #Kiranbedi
    புதுச்சேரி:

    புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 4 ஆண்டுகால பாரதிய ஜனதா ஆட்சி தவறி உள்ளது. விலைவாசி உயர்ந்து பொருளாதார சீரழிவு ஏற்பட்டுள்ளது.

    அதோடு பொது மக்களுக்கு பாதுகாப்பின்மையும் உருவாகி உள்ளது. இதனை கண்டித்து புதுவையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

    பெட்ரோல்- டீசல் விலையில் தவறான கொள்கையை கடைபிடித்ததன் விளைவாக உலக அளவில் பெட்ரோல், டீசல் விலை நாட்டில் உயர்ந்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் மத்திய பா.ஜனதா அரசு மக்களுக்கு பெரிய துரோகத்தை இழைத்துள்ளது.

    புதுவை மாகி பகுதியில் நிபா வைரஸ் தாக்குதலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது இது கண்டிக்கத்தக்கது.

    பதவியில் இருக்கும் நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழக அரசு இதில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    புதுவை கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்று வருகிற 29-ந்தேதியுடன் 2 ஆண்டு காலம் முடிகிறது. 2 ஆண்டு காலம் பணி முடிந்த பிறகு ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டேன் என கிரண்பேடி ஏற்கனவே கூறியுள்ளார்.


    எனவே, அக்கூற்றை அவர் நிறைவேற்றுவார் என நம்புகிறேன். புதுவையின் வளர்ச்சியில் இதுவரை கிரண்பேடியின் பங்கு 1 சதவீதம் கூட இல்லை.

    புதுவை மாநிலம் கல்வி, சுகாதாரம், சுற்றுலா, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றில் சிறிய மாநிலங்களில் முதலிடம் வகிக்கிறது. உயர்கல்வியில் அகில இந்திய அளவில் புதுவை 5-வது இடம் பிடித்துள்ளது.

    சுகாதாரத்துறையில் அனைவருக்கும் மருத்துவம் என புதிய திட்டத்தை இந்தியாவில் முதன்முறையாக தொடங்கி உள்ளோம். புதுவை மாநில வளர்ச்சி 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய குழு அமைத்துள்ளோம். இந்த குழுவின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    கடந்த ஆட்சியின் ரூ.500 கோடி கடனை அடைத்துள்ளோம். இதுவரை மாநில வளர்ச்சிக்கு கவர்னர் கிரண்பேடி தடையாகவே இருந்துள்ளார்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

    பேட்டியின் போது லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார். #congress #Narayanasamy #Kiranbedi
    புதுவையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக சட்டசபை வருகிற 4-ந்தேதி கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் இன்று அறிவித்துள்ளார். #PuducherryAssembly
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது.

    இதேபோல் நடப்பு நிதி ஆண்டில் மார்ச் மாதமும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி கூடிய சட்டசபை கூட்ட தொடரில் கவர்னர் கிரண்பேடி உரையாற்றினார். இதிலும் 4 மாதங்களுக்கு அரசின் செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்-அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.


    இந்த நிலையில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக புதுவை சட்டசபை வருகிற 4-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் இன்று அறிவித்துள்ளார்.

    வருகிற 4-ந்தேதி சட்டசபை கூடும் நாளில் முதல்-அமைச்சர் நாராயணசாமி முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என கூறப்படுகிறது. மேலும் சட்டசபைகூட்டத்தொடர் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது. #PuducherryAssembly
    கவர்னர் கிரண்பேடி இன்று காலை கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் குற்ற சம்பவங்கள் எது நடந்தாலும் பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையான 100 மற்றும் காவல் தொடர்பான புகார் வாங்க மறுத்தல், லஞ்சம் பெறுதல் போன்ற ரகசிய புகார்களை கவர்னர் உருவாக்கிய 1031 என்ற தொலைபேசியில் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்த தொலைபேசியில் அளிக்கப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக எழுந்துள்ளது.

    இது சம்மந்தமான புகாரின் அடிப்படையில் கவர்னர் கிரண்பேடி இன்று காலை கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்,

    கடந்த முறை ஆய்வு செய்தபோது புகார் சம்மந்தமாக கம்ப்யூட்டரில் பதிவு செய்ய கூறியிருந்தார். அவற்றை ஏன் இன்னும் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இதுவரை பெற்ற புகார்கள் எவ்வளவு? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார்.

    அதன் பின் 1031-க்கு வரும் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கண்காணிக்க வேண்டும் என கூறினார்.

    புகார் கொடுப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின்போது டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், கவர்னரின் தனி செயலர் சீனிவாஸ், ஆகியோர் உடனிருந்தனர்

    ×