என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police control room"

    • போலீஸ்காரர்கள் சின்னச்சாமி, மந்திரம் ஆகிய 2 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்.
    • குற்றவாளி மனைவி ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்தது.

    ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் சின்னச்சாமி, அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர் மந்திரம் ஆகியோர், நயினார்நாகேந்திரனை நேரில் சந்தித்து பேசியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து போலீஸ்காரர்கள் சின்னச்சாமி, மந்திரம் ஆகிய 2 பேரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

    இதேப்போல் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த போலீஸ்காரர் நல்லசாமி என்பவர், குற்றவாளி மனைவி ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து கமிஷனர் நடவடிக்கை மேற்கொண்டார். பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்ததாக போலீஸ்காரர்கள் 2பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கடந்த இரண்டு நாட்களில் 285 அழைப்புகள் பெறப்பட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
    • அனைவருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு கட்டுபாட்டு அறைக்கு இதுவரை 285 அழைப்புகள் பெறப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.

    வடமாநில தொழிலாள ர்கள் தொடர்பான போலி விடியோ பீகார் மாநிலத்தில் பரப்ப பட்டதை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்கள் அச்ச உணர்வை போக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு கட்டுப்பாடு அறை செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த இரண்டு நாட்களில் 285 அழைப்புகள் பெறப்பட்டு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உறவினர்கள் தொடர்பான அழைப்புகளும் வந்த நிலையில் அனைவருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினர் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    கவர்னர் கிரண்பேடி இன்று காலை கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவையில் குற்ற சம்பவங்கள் எது நடந்தாலும் பொதுமக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறையான 100 மற்றும் காவல் தொடர்பான புகார் வாங்க மறுத்தல், லஞ்சம் பெறுதல் போன்ற ரகசிய புகார்களை கவர்னர் உருவாக்கிய 1031 என்ற தொலைபேசியில் பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்த தொலைபேசியில் அளிக்கப்படும் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக எழுந்துள்ளது.

    இது சம்மந்தமான புகாரின் அடிப்படையில் கவர்னர் கிரண்பேடி இன்று காலை கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்,

    கடந்த முறை ஆய்வு செய்தபோது புகார் சம்மந்தமாக கம்ப்யூட்டரில் பதிவு செய்ய கூறியிருந்தார். அவற்றை ஏன் இன்னும் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இதுவரை பெற்ற புகார்கள் எவ்வளவு? அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார்.

    அதன் பின் 1031-க்கு வரும் புகார்கள் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கண்காணிக்க வேண்டும் என கூறினார்.

    புகார் கொடுப்பவர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின்போது டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம், கவர்னரின் தனி செயலர் சீனிவாஸ், ஆகியோர் உடனிருந்தனர்

    ×