search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கு முழுமையாக பொருந்தும்- நாராயணசாமி
    X

    உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கு முழுமையாக பொருந்தும்- நாராயணசாமி

    கவர்னர் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு புதுவைக்கு முழுமையாக பொருந்தும் என்று அம்மாநில முதல்-மந்திரி நாராயணசாமி மீண்டும் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தின் காரைக்கால், மாகி, ஏனாம் உட்பட வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத சென்ற 304 மாணவர்களுக்கு முதல்- அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து மொத்தமாக ரூ. 5 லட்சத்து 16 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை கல்வித்துறைக்கு அனுப்பப்படுகின்றது.

    நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம். புதுவை வந்த துணை ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் தனியாக பேசும் போது புதுவைக்கு சிறப்பு மாநில அந்தஸ்து,15-வது நிதிக்கமி‌ஷனில் புதுவையை இணைத்து சிறப்பு நிதி வழங்க வேண்டும்.

    புதுவை மாநில மாணவர்களுக்கு பல்கலைக் கழகத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். புதுவை பல்கலைக் கழகத்தில் சுற்றுச்சூழல் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளேன்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுவைக்கு முழுமையாக பொருந்தும். கவர்னருக்கு கோப்புகளில் சந்தேகம் ஏற்பட்டால் அமைச்சர், அதிகாரிகளுடன் பேசி ஒப்புதல் அளிக்க வேண்டும்.


    கவர்னருக்கு விளக்கம் கேட்க அதிகாரம் உண்டு. கோப்புகளை திருப்பி அனுப்பவோ அல்லது நிராகரிக்கவோ அதிகாரம் இல்லை.

    கவர்னர் தனது கருத்தை அமைச்சர்கள் மீதும் அதிகாரிகள் மீதும் திணிக்க கூடாது. கவர்னரின் செயல்பாடுகளை தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருகிறேன். சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்தும் வருகின்றேன். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம்.

    மத்திய சட்டத்துறை மத்திய மாநில தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்த கூட்டத்தை இன்றும் நாளையும் டெல்லியில் நடத்துகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு ஏற்றதல்ல.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #Congress #Narayanasamy #Kiranbedi
    Next Story
    ×