search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government bus"

    • பஸ்சில் வந்த 2 வாலிபர்களும், தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
    • பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஒரு அரசு பஸ் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றது.

    பஸ்சை டிரைவர் சனல்குமார் இயக்கினார். கண்டக்டராக தனசேகரன் இருந்தார். அந்த பஸ் இரவில் தூத்துக்குடியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது பஸ்சில் 2 வாலிபர்கள் ஏறினார்கள். அவர்கள் இருவரும் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தனர். இருவரையும் பஸ்சுக்குள் வருமாறு கண்டக்டர் தனசேகரன் கூறினார்.

    ஆனால் அவர்கள் இருவரும் பஸ்சுக்குள் வருவதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அந்த வாலிபர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி பஸ்சில் வந்த 2 வாலிபர்களும், தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.

    புதுக்கோட்டை பகுதியில் அந்த பஸ் வந்தபோது வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து வழி மறித்தனர். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் அந்த வாலிபர்கள் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் பஸ்சின் கண்ணாடியையும் கல்வீசி உடைத்தனர்.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்தபடி கீழே இறங்கினார்கள். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    படுகாயம் அடைந்த டிரைவர் சனல்குமார், கண்டக்டர் தனசேகரன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் பஸ்சில் இருந்த பயணிகளை போலீசார் மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இது குறித்து டிரைவர் சனல்குமார் தூத்துக்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை கைப்பற்றி விசாரணை நடக்கிறது.

    டிரைவர், கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் முகம் வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இதையடுத்து அந்த வாலிபர்கள் யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வாலிபர்கள் குடிபோதையில் டிரைவர், கண்டக்டரை தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. வாலிபர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தசரா திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர்.
    • எனவே பக்தர்கள் வசதிக்காக ராமேஸ்வரம் அரசு குளிர்சாதன பஸ்சை குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.

    உடன்குடி:

    குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற பகுதி கிராம மக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரி கள், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்குஅனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு உவரி, குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்லும் அரசு குளிர்சாதன பஸ் குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் பக்தர்களை இறக்கிவிட்டு செல்கிறது. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை உருவாகி வருகிறது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கி வருகின்றனர், இந்த பஸ்சில் தசரா பக்த ர்கள் ஏராளமானவர்கள் தினசரி வந்து செல்கின்றனர். சுற்றுப்புற கிராம மக்கள்மற்றும் பயணிகள் வசதிக்காக இந்த அரசு குளிர்சாதன பஸ்சை குலசேகரன்பட்டினம் ஊருக்குள் வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி காலை மற்றும் மாலை வேளைகளில் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை ஏற்றாமல் செல்லும் சூழ்நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு அண்டை கிராமங்களான கண்டபட்டி, இலந்தைகுளம், உடையாம்புளி, காத்தபுரம், நாலங்குறிச்சி, ஓடைமறிச்சான், புதுப்பட்டி, காசிநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர்.

    இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி படிப்பை முடித்து நெல்லையை அடுத்த பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மேல்படிப்புக்காக சேர்கின்றனர். இவர்கள் தினமும் கல்லூரிக்கு சென்றுவர வசதியாக காலை 8 மணி அளவில் காசிநாதபுரத்தில் இருந்து மருதம்புத்தூர், உடையாம்புளி, மாறாந்தை வழியாக சீதபற்பநல்லூர், பேட்டை, டவுன் பொருட்காட்சிதிடல் வரையிலும் அரசு பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த பஸ் மதியம் 1 மணி, மாலை 6.30 மணி, இரவு 9 மணி என மொத்தம் 4 வேளைகளில் டவுனில் இருந்து காசிநாதபுரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் மூலமாக கல்லூரி மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது வேலைக்காக கிராமப்புறங்களில் இருந்து வரும் நடுத்தர குடும்பத்தினர் அதிகமாக பயன்பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி காலை மற்றும் மாலை வேளைகளில் கல்லூரிக்கு செல்லும் மாணவிகளை ஏற்றாமல் செல்லும் அவலம் இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். சில நேரங்களில் இடைப்பட்ட பகுதிகளில் இறக்கி விட்டு செல்வதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர்.

    இதனை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த பஸ்சில் கூட்டத்தை சமாளிக்க உடையாம்புளி வரை இயக்கப்படும் பஸ்சை மருதம்புத்தூருக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலரும், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளருமான சங்கீதா சுதாகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலனுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், நெல்லையில் இருந்து ராணி அண்ணா கல்லூரி வழியாக மனுஜோதி ஆசிரமம் சென்று உடையாம்புளி வரை இயக்கப்படும் அரசு பஸ்சை மருதம்புத்தூர் வரை நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • வேகத்தடை காரணமாக பஸ் மெதுவாக சென்றதை பயன்படுத்தி அவர்கள் பஸ்சை வழி மறித்துள்ளனர். பைக்கை ஓட்டி வந்த நபருடன் 3 பேர் ஏறி உள்ளனர்.
    • பஸ்சில் இருந்த பயணிகள் அவர்களை சத்தமிடவே கண்டக்டர் வைத்திருந்த பணப்பையை அந்த கும்பல் பறித்துக் கொண்டு அங்கிருந்த தப்பி சென்றது.

    ஆத்தூர்:

    திருச்செந்தூரில் இருந்து மதுரை நோக்கி 45 பயணிகளுடன் ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அதனை புதுக்கோட்டை அல்லிக்குளத்தை சேர்ந்த டிரைவர் பட்டுராஜ் (வயது 45) என்பவர் ஓட்டிச் சென்றார். அந்த பஸ்சில் நெல்லை கே.டி.சி. நகரை சேர்ந்த ராமசாமி என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    கண்டக்டரை தாக்கி கொள்ளை

    இடைநில்லா இந்த பஸ்சை முக்காணி ரவுண்டானாவில் 2 பேர் கை சைகை காட்டி நிறுத்தி ஏற முயற்சித்துள்ளனர். ஆனால் பஸ் நிற்காமல் சென்று விட்டது. பஸ் பழைய காயல் அருகே சென்றபோது முக்காணியில் வழி மறித்த அதே நபர்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டி வந்துள்ளனர். அங்கிருந்த வேகத்தடை காரணமாக பஸ் மெதுவாக சென்றதை பயன்படுத்தி அவர்கள் பஸ்சை வழி மறித்துள்ளனர். பைக்கை ஓட்டி வந்த நபருடன் 3 பேர் ஏறி உள்ளனர்.

    பின்னர் அவர்கள் கண்டக்டரை அடித்ததாகவும், அவரை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அவர்களை சத்தமிடவே கண்டக்டர் வைத்திருந்த பணப்பையை அந்த கும்பல் பறித்துக் கொண்டு அங்கிருந்த தப்பி சென்றது.

    அந்த பையில் ரூ.11,500 பணம் இருந்துள்ளது. இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் பஸ் கண்டக்டர் ராமசாமி புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை சேகரித்து அதில் பதிவான காட்சிகள் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தை கடந்து தேவர் சிலை அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் சிவராஜ் பஸ்சை நிறுத்தினார்.
    • அப்போது ஆற்றுப் பாலம் அருகே இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் கல் வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்றிரவு ரெட் பஸ் ஒன்று சந்திப்பு பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தை கடந்து தேவர் சிலை அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் சிவராஜ் பஸ்சை நிறுத்தினார்.

    கண்ணாடி உடைப்பு

    அப்போது ஆற்றுப் பாலம் அருகே இருட்டான பகுதியில் நின்று கொண்டி ருந்த மர்ம நபர்கள் சிலர் கல் வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடி யை உடைத் தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சிவராஜ், சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.

    அவர்களை கைது செய்த பின்னரே, மதுபோ தையில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும். 

    • பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர்.
    • ஆராய்ச்சிகுப்பம் கிரா மத்தை சேர்ந்த பா.ம.க. பிர முகர் சேட்டு மகன் ராம் குமாரை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவதிகை பகுதியில் நேற்று முன்தினம் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசு பஸ் மீது கற்களை வீசி தாக்கினர். இதில், பஸ்சின் முன் பக்க கண்ணாடி சேதமானது. இந்த சம்பவம் குறித்து அரசு பஸ் டிரைவர் பழனி பண்ருட்டிபோலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பார் வை யிட்டு விசாரணை நடத்தினர்.

    புகாரின் பேரில் போலீ சார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர். இந்நிலையில் பஸ்சின் மீது கற்களை வீசி தாக்கியவர் முத்து நாராயணபுரம் கிரா மத்தை சேர்ந்த முத்தையன் மகன் விஜயசேகர் (வயது 25) என்பது தெரியவந்தது. இதைய டுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இவர் பா.ம.க. வை சேர்ந்த வர் ஆவார். இதேபோல் பண்ருட்டி அருகே பாவைக்குளம் பகு தியில் அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த ஆராய்ச்சிகுப்பம் கிரா மத்தை சேர்ந்த பா.ம.க. பிர முகர் சேட்டு மகன் ராம் குமாரை (37) காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்

    • பல நாட்கள் காலை நேரங்களில் கூத்தன்குழி கிராமத்திற்கு செல்லாமல் கூடங்குளத்திலேயே திரும்பி வந்து விடுகிறது.
    • குறிப்பாக மாலை 6.40-க்கு ராதாபுரத்தில் இருந்து வள்ளியூருக்கு செல்ல வேண்டிய பஸ் 6.15 மணிக்கும், இரவில் ராதாபுரத்தில் இருந்து 8.20 மணிக்கு கிளம்ப வேண்டிய பஸ் 7.45-க்கும் இயக்கப்பட்டு வருகிறது.

    வள்ளியூர்:

    நெல்லை மாவட்டம் வள்ளியூர் பணிமனையில் இருந்து கூத்தன்குழி கிராமத்திற்கு கும்பிளம்பாடு, ராதாபுரம், கூடங்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம் வழியாக 17சி அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. காலையில் கூத்தன்குழி மற்றும் அதன் அருகில் உள்ள கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

    ஆனால் பல நாட்கள் காலை நேரங்களில் கூத்தன்குழி கிராமத்திற்கு செல்லாமல் கூடங்குளத்திலேயே திரும்பி வந்து விடுகிறது. சில நாட்கள் ராதாபுரத்திலேயே திரும்பி விடுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை மட்டும் இயக்கப்படுகிறது.

    குறிப்பாக மாலை 6.40-க்கு ராதாபுரத்தில் இருந்து வள்ளியூருக்கு செல்ல வேண்டிய பஸ் 6.15 மணிக்கும், இரவில் ராதாபுரத்தில் இருந்து 8.20 மணிக்கு கிளம்ப வேண்டிய பஸ் 7.45-க்கும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் வள்ளியூர் செல்ல 1 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தான் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே 17சி பஸ்சை முறையாக இயக்க வள்ளியூர் பணிமனை கிளை மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் பாரதீய ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று ராதாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராதை காமராஜ் தெரிவித்து உள்ளார்.

    • மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சென்ற பயணிகளை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் இறக்கி விட்டனர்.
    • கேள்விகளுக்கு வனத்துறை அதிகாரிகள் மழுப்பலான பதில்களை ஆர்.டி.ஐ. பதிவுக்கு தெரிவித்துள்ளர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு, காக்காச்சி ஆகிய தேயிலை தோட்ட பகுதி களுக்கு அரசு பஸ்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்களின் உறவி னர்கள் செல்ல வனத்துறை யினர் அனுமதி மறுத்த நிலையில், கடந்த மே மாதம் 26 -ந் தேதி மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சென்ற பயணிகளை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறியும் உரிமை சட்டம்

    இந்நிலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியை சேர்ந்த வக்கீல் ராபர்ட் சந்திரகுமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசு பஸ்சில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுப்பு, வனத்துறையினர் வாகனம் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது என சுமார் 32 கேள்விகள் கேட்டுள்ளார்.

    இந்த கேள்விகளுக்கு வனத்துறை சார்பில் யூகத்தின் அடிப்படையில் கேள்வி உள்ளது என மழுப்பலான பதில்களை வனத்துறை அதிகாரிகள் அந்த ஆர்.டி.ஐ. பதிவுக்கு தெரிவித்துள்ளர்.

    மேலும் இதேபோல் போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பிய தகவல் அறியும் உரிமை சட்ட பதில் மனுவில், போக்குவரத்து கழகம் சார்பாக தெரிவிக்கையில், நெல்லை மண்டலத்தில் இருந்து மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ஏதும் மறுக்கப்படவில்லை.

    மேலும் மணிமுத்தாறு சோதனை சாவடியில் பயணிகள் யாரும் கட்டா யப்படுத்தி இறக்கப்படு வதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

    எனவே அம்பை வனச் சரகத்தில் உள்ள அதிகாரி களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆறுமுகநேரியின் வட பகுதியில் உள்ள பொதுமக்கள் பஸ்சிற்காக வெகுதூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது.
    • விழிப்புணர்வு நடவடிக்கையாக, ஸ்டேட் பாங்க் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதற்கான அரசாணை நகல் அவ்வழியே சென்ற அரசு பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி - திருச்செந்தூர் வழித்தடத்தில் சுமார் 3 கிலோமீட்டர் தூர சாலை ஆறுமுகநேரி பேரூ ராட்சியின் எல்லைக்குள் அடங்கி உள்ளது.

    7 இடங்களில் பஸ் நிறுத்தங்கள்

    இங்கு 7 இடங்களில் பஸ் நிறுத்தங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலான பஸ்கள் மெயின் பஜார் சந்திப்பு நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்கின்றன. குறிப்பாக இந்த வழியில் இயங்கும் சுமார் 135 முறை இயங்கும் அரசு பஸ்கள் அனைத்தும் சந்திப்பு நிறுத்தத்தில் மட்டுமே நின்று செல்கின்றன.

    இதனால் ஆறுமுகநேரியின் வட பகுதியில் உள்ள பொது மக்கள் பஸ்சிற்காக வெகு தூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. இல்லை யென்றால் ஆட்டோவிற்கு செலவு செய்ய வேண்டி உள்ளது.

    இத்தனைக்கும் இப்பகுதி யில் தான் போலீஸ் நிலையம், சந்தை, தபால் நிலையம், ெரயில் நிலையம், சிவன் கோவில், 3 திருமண மண்ட பங்கள் ஆகியவை உள்ளன.

    மாலைமலரில் செய்தி

    இந்நிலையில் வடக்கு பஜார் அம்மன் கோவில், மத்திய பஜார் ஸ்டேட் பாங்க் ஆகிய நிறுத்தங்களில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல அரசாணை இருந்தும் அங்கு பஸ்கள் நிற்காமல் செல்வது பற்றி கடந்த 7-ந் தேதி 'மாலைமலர் ' நாளிதழில் விரிவான செய்தி வெளியாகி யிருந்தது. இதனை கவனத்தில் எடுத்து பரிசீலனை செய்த திருச் செந்தூர் அரசு போக்கு வரத்து கழக பணிமனை அதிகாரிகள் உடனடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    அதன்படி ஸ்டேட் பாங்க் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மற்றும் கன்டக்டர்களுக்கு அறிவுரை கள் வழங்கியுள்ளனர். மேலும் இதனை கண்காணிக்கும் நடவடிக்கை யில் செக்கிங் இன்ஸ் பெக்டர்கள் 2 பேர் ஈடுபட்டுள்ளனர். இதனை பயணிகள் பாராட்டி வரு கின்றனர்.

    இதனிடையே விழிப்பு ணர்வு நடவடிக்கையாக, ஸ்டேட் பாங்க் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்வதற்கான அரசாணை நகல் அவ்வழியே சென்ற அரசு பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கன்டக்டர்களிடம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்களான தங்கமணி, அமிர்தராஜ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

    • அரசு பஸ்- லாரி மோதல்; 32 பயணிகள் உயிர் தப்பினர்.
    • எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே திருப்பத்தூர்-மதுரை நெடுஞ்சாலையில் அதிகாலை 5.30 மணி அளவில் தஞ்சாவூரில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. இதில் 32 பயணிகள் இருந்தனர்.

    எதிர்திசையில் மதுரை யில் இருந்து தேவ கோட்டை நோக்கி சரக்கு லாரி அதி வேகமாக வந்தது. எஸ்.எஸ்.கோட்டை சிவல்பட்டி பிரிவு அருகே வந்தபோது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியது.

    இருப்பினும் அரசு பஸ் டிரைவர் சேகர் சுதாரித்துக் கொண்டு சாதுரியமாக செயல்பட்டதால் சாலையோர தடுப்பில் மோதி பஸ் நின்றது. இதனால் பஸ்சில் பயணம் செய்த 32 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். விபத்தில் சிக்கிய லாரியின் முன்பகுதி நொறுங்கியது. சரக்கு லாரியின் டிரைவர் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் விபத்து நடந்த இடத்தின் வழியாக அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் காரில் தனது ஊருக்கு சென்றுகொண்டிருந்தார். அவர் விபத்து நடந்திருப்பதை பார்த்தவுடன், தனது காரில் இருந்து இறங்கிச்சென்று அரசு பஸ்சின் டிரைவர் சேகர் மற்றும் கண்டக்டரிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். இந்த விபத்து குறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து பொட்டல்காடு என்று தனியாக ஒரு பஸ் போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படுகிறது.
    • தூத்துக்குடி மாநகர பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி கிடைக்காமல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் சாலைகளில் காத்து நிற்கும் அவல நிலை இருந்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்டம் பாரதீய ஜனதா கட்சி சார்பாக தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    மாநில துணைத்தலைவர் முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் சித்ராங்கதன் ஆலோசனையின்படி, மாவட்ட பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் தலைமையில் பா.ஜனதா நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து பொட்டல்காடு என்று தனி யாக ஒரு பஸ் போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப் படுகிறது. ஆனால் அந்தப் பஸ் கடந்த 1 மாதமாக பொட்டல்காடு கிராமத்திற்கு வராமல் புறக்கணித்து செல்கிறது.

    இதனால் அந்த பொட்டல் காடு பகுதியில் உள்ள தொழிலாளர்கள், பெரிய வர்கள், பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். தினசரி 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மீண்டும் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முதல் பொட்டல் காடு கிராமத்திற்கு அரசு பஸ் முறையாக இயக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    அப்போது மாநகர தெற்கு மண்டல தலைவர் மாதவன், செயலாளர் பாலக்குமார் மற்றும் பொட்டல்காடு ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் காலை, மாலை நேரங்களில் போதிய பஸ் வசதி கிடைக்காமல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் சாலைகளில் காத்து நிற்கும் அவல நிலை இருந்து வருகிறது.

    மாணவர்கள் படிக்கட்டு களில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவது அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்களின் உயிரை பாதுகாக்கும் வகையில் விபத்து ஏற்படு வதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது

    திருப்பூர் : 

    திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை செல்லும் அரசு பேருந்து நேற்று இரவு 11.30 மணி அளவில் வெளியேறியது. அப்போது பேருந்து நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்த திருப்பூர் முத்தனம்பாளையத்தை சேர்ந்த பாலு (வயது 45) என்பவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருப்பூர் தெற்கு போலீசார் தாராபுரத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஈஸ்வரனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி., காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் மத்திய பஸ் நிலையம் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது.கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து கோவை, உடுமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்தும் இடம், பயணிகள் நடந்து செல்வதற்காக நடைமேடை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பயணிகள் நடைமேடையை பயன்படுத்தாமல் பஸ் நிலைய வளாகப்பகுதியிலேயே நடந்து செல்கின்றனர். மேலும் பஸ் நிலையம் மற்றும் சில இடங்களில் இரு சக்கர வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே இரு சக்கர வாகனங்களை வாகன நிறுத்தத்தில் நிறுத்துவதற்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது மட்டுமின்றி பஸ் நிலையத்திற்குள் நுழையும் பஸ்கள் வேகமாக வருவதால் நடந்து செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைகின்றனர். பஸ் நிலையத்திற்குள் நுழையும் போதும், வெளியே செல்லும் போதும் பஸ்கள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. மேலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே பஸ் நிலைய முன்பகுதி, மேம்பாலத்தின் கீழ் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும், வாகனங்கள் தாறுமாறாக செல்வதை தடுக்கவும் போலீசார் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×