search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு  தடை இல்லை- தகவல் அறியும் உரிமை சட்டத்தில் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
    X

    மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை இல்லை- தகவல் அறியும் உரிமை சட்டத்தில் போக்குவரத்து கழகம் அறிவிப்பு

    • மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சென்ற பயணிகளை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் இறக்கி விட்டனர்.
    • கேள்விகளுக்கு வனத்துறை அதிகாரிகள் மழுப்பலான பதில்களை ஆர்.டி.ஐ. பதிவுக்கு தெரிவித்துள்ளர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, நாலு முக்கு, காக்காச்சி ஆகிய தேயிலை தோட்ட பகுதி களுக்கு அரசு பஸ்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் தொழிலாளர்களின் உறவி னர்கள் செல்ல வனத்துறை யினர் அனுமதி மறுத்த நிலையில், கடந்த மே மாதம் 26 -ந் தேதி மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சென்ற பயணிகளை மணிமுத்தாறு வனச்சோதனை சாவடியில் வனத்துறையினர் இறக்கி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறியும் உரிமை சட்டம்

    இந்நிலையில் மாஞ்சோலை, நாலுமுக்கு தேயிலை தோட்ட பகுதியை சேர்ந்த வக்கீல் ராபர்ட் சந்திரகுமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அரசு பஸ்சில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுப்பு, வனத்துறையினர் வாகனம் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கின்றது என சுமார் 32 கேள்விகள் கேட்டுள்ளார்.

    இந்த கேள்விகளுக்கு வனத்துறை சார்பில் யூகத்தின் அடிப்படையில் கேள்வி உள்ளது என மழுப்பலான பதில்களை வனத்துறை அதிகாரிகள் அந்த ஆர்.டி.ஐ. பதிவுக்கு தெரிவித்துள்ளர்.

    மேலும் இதேபோல் போக்குவரத்து கழகத்திற்கு அனுப்பிய தகவல் அறியும் உரிமை சட்ட பதில் மனுவில், போக்குவரத்து கழகம் சார்பாக தெரிவிக்கையில், நெல்லை மண்டலத்தில் இருந்து மாஞ்சோலைக்கு அரசு பஸ்சில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி ஏதும் மறுக்கப்படவில்லை.

    மேலும் மணிமுத்தாறு சோதனை சாவடியில் பயணிகள் யாரும் கட்டா யப்படுத்தி இறக்கப்படு வதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

    எனவே அம்பை வனச் சரகத்தில் உள்ள அதிகாரி களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×