நெல்லை சந்திப்பில் அரசு பஸ் கண்ணாடி கல் வீசி உடைப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தை கடந்து தேவர் சிலை அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் சிவராஜ் பஸ்சை நிறுத்தினார்.அப்போது ஆற்றுப் பாலம் அருகே இருட்டான பகுதியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் சிலர் கல் வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர்.
நெல்லை சந்திப்பில் அரசு பஸ் கண்ணாடி கல் வீசி உடைப்பு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

நெல்லை:

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்றிரவு ரெட் பஸ் ஒன்று சந்திப்பு பஸ் நிலையத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. நெல்லை கொக்கிரகுளம் ஆற்றுப்பாலத்தை கடந்து தேவர் சிலை அருகே பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்குவதற்காக டிரைவர் சிவராஜ் பஸ்சை நிறுத்தினார்.

கண்ணாடி உடைப்பு

அப்போது ஆற்றுப் பாலம் அருகே இருட்டான பகுதியில் நின்று கொண்டி ருந்த மர்ம நபர்கள் சிலர் கல் வீசி பஸ்சின் பின்பக்க கண்ணாடி யை உடைத் தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சிவராஜ், சந்திப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.

அவர்களை கைது செய்த பின்னரே, மதுபோ தையில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவரும். 

X

Maalai Malar
www.maalaimalar.com