search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gkvasan"

    ஆறுகளில் மணல் எடுப்பதற்கு அரசே உடந்தையாக உள்ளது. அதனால் தான் முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்தது என்று ஜிகேவாசன் குற்றம் சாட்டியுள்ளார். #gkvasan #mukkombu #tngovt

    திருச்சி:

    திருச்சியில் இன்று மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பா.ஜ.க. முன்னாள் எம்.பி. இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் புனித அஸ்தி தமிழகத்தின் பிரதான நதியான காவிரியில் கரைக்கப்பட்டுள்ளது. இமயம் முதல் குமரி வரை உள்ள இயற்கையினை நேசித்தவர் வாஜ்பாய். ஓடும் ஆற்றினை புனிதம் என கருதினார். சுதந்திரத்திற்கு பின்னர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே தலைவர்.

    சென்னையில் வருகிற 28ந்தேதி அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும் அஞ்சலி கூட்டம் நடை பெறுகிறது. 1ந்தேதி முதல் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட உள்ளோம் என்றார்.


    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே‌.வாசன் பங்கேற்றார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, ஆறுகளில் மணல் எடுப்பதற்கு அரசே உடந்தையாக உள்ளது. அதனால் தான் முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்தது என கூறினார். #gkvasan #mukkombu #tngovt

    காவிரி பாசன விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க அரசு ரூ.10 ஆயிரம் மானியமாக வழங்கவேண்டும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
    நாமக்கல்: 

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேரள மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மத்திய அரசும், தமிழக அரசும் முடிந்தவரை உதவி செய்யவேண்டும். தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அரசு உரிய பாதுகாப்பு, நிவாரண ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

    மேட்டூர் அணையிலிருந்து இதுவரை 60 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் கடலில் சென்று வீணாக கலந்துள்ளது. தண்ணீர் வீணாக காரணம், நீர்நிலைகளை முறையாக பராமரிக்காததுதான். தண்ணீரை வீணாக்காமல் இருக்கவும், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்தும் வகையிலும் உடனடியாக அவசிய நடவடிக்கைகளை எடுத்து, கடைமடை பகுதி வரை விவசாயம் நடைபெற ஏற்பாடு செய்யவேண்டும். இதில் தமிழக அரசு அக்கறையோடு செயல்பட வேண்டும்.

    மேலும் காவிரி பாசன விவசாயிகள் உடனடியாக விவசாய பணிகளை மேற்கொள்ள விதை நெல் இலவசமாக வழங்குவதோடு, ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் மானியம் அரசு வழங்க வேண்டும்.

    மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை அரசு கட்டாயப்படுத்தி திணிக்கக்கூடாது. 8 வழிச்சாலை, சேலம் விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றில் அரசு பிடிவாதத்தை தளர்த்திக்கொண்டு மக்களின் பாதிப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறவில்லை. இதனால்தான் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளபோதிலும், கடைமடை பகுதிகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஒரேநேரத்தில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற தேர்தல் என்பதை ஆளும்கட்சி மட்டுமே முடிவு செய்துவிட முடியாது. அரசியல் கட்சிகளுக்கு இடையே நாடு தழுவிய அளவில் பல்வேறு கட்ட அளவில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

    கிராமப்புற மக்களின் பிரச்சினைகளை தீர்க்க உள்ளாட்சி பிரதிநிதிகளால்தான் முடியும். இதனால் உள்ளாட்சி தேர்தலை விரைந்து நடத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அவரிடம் நிருபர் ஒருவர், தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்து உள்ளாரே, என கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த ஜி.கே.வாசன், “இந்தியாவின் முக்கிய பொறுப்பில் உள்ள பிரதமர், தமிழகத்தில் பயங்கரவாதம் இருக்கின்ற நிலை இருக்கிறது என கருதி பேட்டி கொடுத்துள்ளார் என்றால், அதற்கு பதில் சொல்ல வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு உண்டு. அந்த எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. ஆட்சியாளர்கள் பதில் கூறவில்லை என்றால், மக்களுக்கு சந்தேகம் மேலும், மேலும் வலுக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். மத்திய அரசுக்கும் ஒரு மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியில் பங்கு உண்டு என்பதை நினைவு கூற விரும்புகிறேன்” என்றார்.

    முன்னதாக நாமக்கல் கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி.கே.வாசன் பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் கோஸ்டல் இளங்கோ, மாநில நிர்வாகிகள் தூ.சு.மணியன், சத்தியமூர்த்தி, வக்கீல் செல்வம், மாவட்ட துணை தலைவர் சிவராஜ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அருள் ராஜேஸ், நகர தலைவர் சக்தி வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பல்லடத்தில் விசைத்தறி ஜவுளி சந்தையை அரசு அமைத்து தர வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். #gkvasan

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை முன்னேற்றம் அடைந்து இருப்பது மகிழ்ச்சியைஅளிக்கிறது. அவர் பரிபூரண குணம் அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டமாக இருந்தாலும் அதனை அரசு அறிவித்து செயல்படுத்தும் போது அதனை ஏற்க மக்கள் விரும்பவில்லை என்றால் அத்திட்டத்தை கட்டாயப்படுத்தி மக்களிடம் திணிக்கக்கூடாது. மக்கள் விரும்புகின்ற வகையில் திட்டங்களை செயல்படுத்துவது தான் அரசின் கடமையும் ஜனநாயகமும் ஆகும். 

    மது இல்லாத தமிழகம் என்பது தான் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள். ஆகும். புதியதாக மதுக்கடை திறக்கக்கூடாது என்பதில் எங்கள் கட்சி கொள்கையுடன் உறுதியாக உள்ளோம். டாஸ்மாக் மதுபானக் கடை செயல்படும் நேரத்தை குறைப்பதோடு படிப்படியாக மதுக் கடைகளின் எண்ணிக்கையையும் அரசு குறைக்க வேண்டும்

    பல்லடம், சோமனூர் பகுதியில் 2லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது. நூல் விலை ஏற்றத்தாழ்வுகளால் ஜவுளி உற்பத்தி தொழில் பாதிப்படைந்துள்ளது. ஆண்டு முழுவதும் நூல் சீரான விலையில் விற்பனைக்கு கிடைக்க வேண்டும். விசைத்தறியாளர்களுக்கு இடைதரகர் இன்றி நேரடியாக தங்களது உற்பத்தி ஜவுளி ரகங்களை விற்பனை செய்ய பல்லடத்தை மையமாக கொண்டு விசைத்தறி ஜவுளி சந்தையை அரசு அமைத்து தர வேண்டும்.

    அதன் மூலம் விசைத் தறியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடையும். பல்லடத்தில் ஏராளமான கோழிப்பண்ணைகள் இருப்பதால் கோழி இறைச்சியை பதப்படுத்திட குளிரூட்டு மையம் அமைக்க வேண்டும். பல்லடம் நகரில் அதிக வாகன எண்ணிக்கையால் போக்குவரத்து நெருக்கடி உள்ளது அவற்றை போக்க அரசு உடனே புறவழிச்சாலை அமைக்க வேண்டும். விவசாய பகுதிகளில் மின் கம்பி மற்றும் கம்பம் பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதால் அடிக்கடி மின்சார விபத்துக்கள் நிகழ்கின்றன. அத்துடன் மின் தடையால் மக்கள் பாதிப்பதோடு திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.அவற்றை தவிர்க்கும் வகையில் அரசு மின் கம்பி மற்றும் மின் கம்பங்களை உடனே மாற்றியமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பேட்டியின் போது காங்கேயம் முன்னாள் எம்.எல்.ஏ.விடியல் சேகர், மாநில நிர்வாகிகள் திருப்பூர் மோகன்கார்த்திக், யுவராஜா,குனியமுத்தூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் இருந்தனர். முன்னதாக பல்லடம் பனப்பாளையம் பெருமாள் கோவில் முன்பு ஜி.கே.வாசனுக்கு திருப்பூர் மாவட்ட பொருளாளர் ராமசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஜெகதீசன், நகர தலைவர் பிரண்ட்ஸ் முத்துக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். #gkvasan

    திருச்சி தாராநல்லூரில் நாளை காமராஜர் பிறந்த நாள் விழா நடக்கிறது.இதில் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசுகிறார்.
    திருச்சி:

    தமிழ்மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நந்தா செந்தில்வேல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மாவட்ட  பாரத பெருந்தலைவர் காமராஜர் பேரவை மற்றும் திருச்சி  மாநகர் மாவட்ட  தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்து திருச்சி தாராநல்லூர் கீரைக்கடை, செக்கடி பஜாரில் நாளை ( 22 ந் தேதி) மாலை 3 மணிக்கு 21-ம் ஆண்டு தொடக்க விழா கல்வி நிதி வழங்கும் விழா, காமராஜர் 116-வது பிறந்த நாள் விழா நடத்துகிறது.

    விழாவையொட்டி கல்வி நிதி மற்றும் நோட்டுகள், வழங்கும் விழாவும் நடைபெறுகிறது. பேரவை  செயலாளர் டி.நாகராஜன் வரவேற்றுப் பேசுகிறார். நிறுவனத் தலைவர் வே.மூர்த்தி தலைமை தாங்குகிறார். தமிழ் மாநில காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நந்தா கே.செந்தில்வேல் முன்னிலை வகிக்கிறார். மாவட்ட பொருளாளர் கே.டி.தனபால், மாரியப்பா ஸ்டோர்  பழனிக்குமார் நிதி வழங்குகிறார்கள். விழாவில் த.மா.கா. மாநிலத்  தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கல்விநிதி,  நோட்டுகள், உபகரணங்களை மாணவ -மாணவிகளுக்கு வழங்கி பேசுகிறார்.

    த.மா.கா வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி.ரவீந்திரன், தெற்கு மாவட்ட தலைவர் டி.குணா,  நிர்வாகிகள் பி.எல்.ஏ. சிதம்பரம், புலியூர் நாகராஜன், பேரவை நிர்வாகிகள் ராஜாங்கம், ஏசுவடியான், டி.சரவணன், முருகேசன், பழக்கடை சரவணன், எஸ்.ராஜன்,  ரவி , செல்வமுருகன், விஜய், பிரபாகர், மாரீசன் த.மா.கா. நிர்வாகிகள் கொட்டப்பட்டு சண்முகம்,  இண்டர்நெட் ரவி, செயற்குழு உறுப்பினர்கள் தர்மராஜ், அனந்தராஜா, மற்றும் பலர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    விழாவில் மாநகர மாவட்ட நிர்வாகிகள், கோட்டத் தலைவர்கள் ,வார்டு தலைவர்கள், மற்றும் பல்வேறுஅணியினர், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். 

    இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
    பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் தடையின்றி செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பி.எஸ். சேகர்-எஸ்.ரத்னா மணிவிழா நடந்தது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீண்ட நாட்களாக விவசாயிகள் எதிர்பார்த்து வந்த கல்லணை டெல்டா மாவட்ட பாசனத்துக்காக நாளை திறக்கப்பட உள்ளது. தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், பாசன வாய்க்கால்களை இதுவரை முறையாக தூர்வாரும் பணிகளை செய்யவில்லை. எனவே கடைமடை வரை பாசனத்திற்கு தண்ணீர் செல்லுமா? என்ற நிலை உள்ளது.

    எனவே கடைமடை வரை தண்ணீர் தாமதமின்றி தடையின்றி செல்ல தமிழக அரசு முழுமையான நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான இடு பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் நிறைவேறவில்லை.

    விவசாயிகளின் நலன் கருதி வங்கிகளில் வாங்கிய விவசாய கடன்களை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

    இந்த ஆண்டாவது தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளுடன் ஆலோசித்து அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது த.மா.கா. நகர தலைவர் பி.எஸ்.சங்கர், மாவட்ட தலைவர் ஜிர்ஜிஸ், நகர செயலாளர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    இன்று தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று ஜிகேவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #gkvasan #parliamentarymonsoonsession

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இன்று தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமான முறையில் தொடர்ந்து நடைபெற்று மக்கள் நலன் காக்கும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, நடைமுறைக்கு வர வேண்டும்.

    இந்தக் கூட்டத்தொடர் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 10-ந்தேதி வரை தடையில்லாமல் தொடர வேண்டும். மேலும் நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் இரு அவைகளிலும் ஆரோக்கியமான வாக்குவாதத்திற்கு உட்பட்டு அவையானது சுமூகமாக நடைபெற வேண்டும்.

    அதே நேரத்தில் அவையில் தேவையில்லாமல் கூச்சல், குழப்பங்களுக்கு இடம் கொடுக்காமல் மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஆக்கப்பூர்வமான முறையில் விவாதம் நடத்துவதற்கான சூழலுக்கு மத்திய பா.ஜ.க. உறுப்பினர்களும், எதிர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் இடம் கொடுத்தால் தான் நாட்டு மக்களுக்கும் நல்லது; நாட்டின் வளர்ச்சிக்கும் உகந்தது.

    குறிப்பாக மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்பு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக திட்டங்களை அறிவித்து, நிலுவையில் உள்ள மக்கள் விரும்பும் மசோதாக்களை மட்டும் நிறைவேற்றவும், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவும் முன்வர வேண்டும். ஏற்கனவே ரயில்வேத்துறை உட்பட பல துறைகளுக்கு அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள திட்டங்களை தொடர்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும்.

    மேலும் வேலைவாய்ப்பை உருவாக்கவும், கச்சா எண்ணெய் விலையை கட்டுப் படுத்துவதற்கும், வங்கி மோசடிகளை தவிர்ப்பதற்கும், முதலாளிகளிடம் இருந்து வராக்கடன்களை வசூல் செய்வதற்கும், ஊழல், லஞ்சம், சுரண்டல் ஆகியவை நாட்டில் எந்த மாநிலத்திலும் நடைபெறாமல் இருப்பதற்கும், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கும், மீனவர்கள் பிரச் சினைக்கு தீர்வுகாண கச்சத்தீவை மீட்க வேண்டும், பாலியல் பலாத்காரத்துக்கு தூக்குதண்டனை கொடுப்பதற்கும், பெண் உரிமை, பாதுகாப்புக்கு முழு உத்தரவாதம் அளிப்பதற்கும், சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும், ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

    தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கு இடம் கொடுக் கக்கூடாது என்பதற்கும், வெளிநாட்டு வங்கிகளில் சட்டவிரோதமாக சேமிக்கப்பட்டுள்ள பணத்தை மீட்பதற்கும், மதவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சாதி, மத, பேதமற்ற சமதர்ம சமுதாயத்திற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பதற்கும், நாட்டின் எல்லைப்புற பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிப்பதற்கும், மக்கள் ஏற்கமுன்வராத, விரும்பாத திட்டங்களை முடக்குவதற்கும், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும், நிவாரணத் தொகையையும் கொடுப்பதற்கும் முக்கிய முடிவுகளை எடுத்து அதற்குண்டான அறிவிப்புகளை நாடாளுமன்றம் நடைபெறுகின்ற நாட்களிலே அறிவித்து அவைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது மத்திய பா.ஜ.க. அரசின் கடமை.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #gkvasan #parliamentarymonsoonsession

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடத்தும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #GKVasan #TNPSCExam

    மதுரை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியுள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு முதல்-அமைச்சரோ, சம்பந்தப்பட்ட துறையே இதுவரை பதில் அளிக்கவில்லை.

    எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவர ஆளும் கட்சிகள் மட்டுமல்ல எதிர்க் கட்சிகளும் இணைந்து குரல் கொடுத்தன. அதன் பயனாகத்தான் நமக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கிடைத்துள்ளது.

    டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை தனியார் மூலம் நடத்த அரசு முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன. இதனால் பல குளறுபடிகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. இது ஏற்புடையதல்ல.

    மாநில அரசு நிதி நெருக்கடி என கூறியுள்ளது. ஆனால் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது.

    அதற்கு முன் போக்குவரத்து தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை உடனே வழங்க வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் கூறினார். #GKVasan #TNPSCExam

    மக்கள் சம்மதம் இல்லாமல் 8 வழிச்சாலை அமைக்கக் கூடாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #GKVasan #GreenWayRoad

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு த.மா.கா.வை தயார் படுத்தும் வகையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகள் வாரியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். கட்சியின் வளர்ச்சிக்கும், செயல் பாட்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது வருகிற தேர்தலில் நல்ல பலன் தரும் என்று நம்புகிறேன்.தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது வரவேற்கத்தக்கது.

    சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை அமைப்பதற்கு மக்களின் சம்மதத்தை பெற வேண்டியது அவசியம். பொது மக்களுக்கும், விவசாயத்துக்கும், தொழில் வளர்ச்சிக்கும் எவ்விதமான இடையூறும் இருக்கக்கூடாது.

    இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி பூரண சம்மதத்தை பெற வேண்டும். மக்கள் சம்மதிக்காவிட்டால் மாற்று வழி அல்லது இருக்கிற பாதையை விரிவுபடுத்துவது போன்றவற்றைத்தான் ஆலோசிக்க வேண்டும்.

    புழல் சிறைக்குள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பது கவலை அளிக்கிறது. சென்னையில் வழிப்பறி, கொள்ளை அதிகரித்து வருகிறது. இதில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தும் திருடர்கள் வருவதாக கூறப்படுகிறது. அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்க வேண்டும். கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது பிடிவாதபோக்கை கைவிட வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்குமா? என்ற சந்தேகமே வரக்கூடாது. அதை நிரந்தரமாக மூடுவதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

    பயங்கரவாதிகள் ஊடுருவல் பற்றி மத்திய மத்திரி பொன்.ராதா கிருஷ்ணன் கூறுவது தமிழக உளவுத்துறை சரியில்லையோ என்ற கருத்தைத் தான் ஏற்படுத்துகிறது. அப்படியென்றால் அவர் மத்திய உளவுத்துறையிடம் சொல்லி அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது ஞானதேசிகன், சக்தி வடிவேல், ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.என். அசோகன், விடியல்சேகர், மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், கொட்டிவாக்கம் முருகன் மற்றும் துறைமுகம் செல்வகுமார், கக்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.#GKVasan #GreenWayRoad

    காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். #gkvasan #cauveryissue

    திண்டுக்கல்:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல்- டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும்.

    கச்சா எண்ணை விலை ஏற்றத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறி வருகிறது.

    ஆகையால் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல் டீசலை கொண்டு வரவேண்டும். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது. பா.ஜனதா- காங்கிரஸ் எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தருவது தொடர்பாக 2 கட்சிகளும் ஒன்று சேர்ந்து தண்ணீர் தராமல் துரோகம் செய்து வருகின்றனர்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதனை சரி செய்வது ஆளுங்கட்சியின் கடமையாகும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வங்கிக் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபடுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #cauveryissue

    ×