search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.கே.வாசன்"

    • எதிர்க்கட்சிகளின் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.
    • தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.

    மதுரை

    தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தென் மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் மதுரையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரதீய ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஆசையில் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடியுள்ளன. பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் முரண்பாட்டின் முழு வடிவமாகும். பா.ஜ.க.வுடன் தனியாக மோதினால் வெல்ல முடியாது என்பதால் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளது. ஆனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தலை த.மா.கா. சந்திக்கும். விரைவில் எங்கள் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய உள்ளன.

    டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடினால் தான் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கை காக்க முடியும். தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும்போது அமலாக்கத் துறை சோதனையை சரி என்கிறது. ஆனால் ஆளுங் கட்சியாக மாறிய பின் தவறு என்கிறது.

    தி.மு.க. மக்களுக்கு அதிக வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றியுள்ளது. தமிழக ஆளுநர் தனது சட்டத்திற்கு உட்பட்டு பணிகளை செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் மாவட்டத் தலை வர் ராஜாங்கம், நிர்வாகிகள் கே.எஸ்.கே.ராஜேந்திரன், சித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பள்ளபாளையம் வாளவாடி ஆகிய இடங்களிலும் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    • ஆதித்யா ராஜ் மற்றும் மாநில,மாவட்ட,நகர,வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    உடுமலை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே .வாசன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்உடுமலை நகரத்தில் ஏரி பாளையம் மற்றும் ரயில் நிலையம் அருகிலும் மேலும் போடிபட்டி,பள்ளபாளையம் வாளவாடி ஆகிய இடங்களிலும் கட்சி கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜையும்,அன்னதானமும் நடைபெற்றது. விழாவில் மாவட்டத் தலைவர் டி.ரெத்தினவேல்,மாநில செயற்குழு உறுப்பினர் யு .கே. சி. முத்துக்குமாரசாமி, மாநில இளைஞரணி துணைத்தலைவர் அபிராமி செந்தில்குமார்,நகரத் தலைவர் பாலகிருஷ்ணன்,வட்டாரத் தலைவர்கள் அருளானந்தம்,ரவிச்சந்திரன் மாவட்ட மகளிர் அணி தலைவி மீனா குமாரி,மாவட்ட இளைஞரணி தலைவர் பிரசாந்த் குமார்,மாவட்ட மாணவர் அணி தலைவர் ஆதித்யா ராஜ் மற்றும் மாநில,மாவட்ட,நகர,வட்டார நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி நடந்தது
    • மாவட்ட தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி வழங்கினார்

    வேலூர்:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூரில் திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் வேலூர் மாநகர மாவட்ட த.மா.கா. தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ஸ்ரீ சாய் தஞ்சம் முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில செயலாளர் சிவானந்தம், மாவட்ட நிர்வாகிகள் அச்சுதன், தேசபக்தன், சீனிவாசன், ரமேஷ், கோவிந்தராஜ், மகேஷ், தொரப்பாடி கிருஷ்ணன், பேங்க் மனோகரன், திருநாவுக்க ரசு, வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஜி.கே.வாசன் பிறந்தநாளையொட்டி கோவிலில் த.மா.கா.வினர் வழிபாடு செய்தனர்
    • வாகை ஜெயராஜ் ஏற்பாட்டில் கொடியேற்றி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    மதுரை

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்எம்.பி.யின் 58-வது பிறந்தநாள் விழா மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது.இதையொட்டி மதுரை மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.

    மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் சிறப்பு அர்ச்சனையும், மகபூப்பாளையத்தில் மாநில சிறப்பு அழைப்பாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

    தெற்கு வாசல் மொய்தீன் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகையும், 47-வது வார்டு தலைவர் லியாகத் அலி, நகர சிறுபான்மை பிரிவு தலைவர் ஆபீக், உசேன் ஏற்பாட்டில் கொடியேற்றியும் இனிப்பு வழங்கப்பட்டது.

    தூய மரியன்னை தேவாலயத்தில் மதுரை மாவட்ட துணை தலைவர் சூசை ஏற்பாட்டில் சிறப்பு பிராத்தனை நடந்தது. மாநில இணை செயலாளர் பிரேம் குமார் ஏற்பாட்டில் காமராஜர் சாலையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

    மதுரை ஆவின் பால்பண்னை பாட்ஷா, சேகர், மாரிச்சாமி ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

    புதூரில் 11-வது சர்க்கிள் தலைவர் மாணிக்கவாசகர், 14-வது வார்டு தலைவர் புதூர் பாண்டி ஏற்பாட்டில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு 64-வது வார்டு தலைவர் செல்வம், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் இடும்பன் பாலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாகை ஜெயராஜ் ஏற்பாட்டில் கொடியேற்றி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    ஜி.கே.வாசன் பிறந்தநாளையொட்டி இன்று மாலை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொள்கை பரப்பு செயலாளர் சிவசுந்தரம் ஏற்பாட்டில் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது.

    பிறந்த நாள் நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.கே.ராஜேந்திரன், நிர்வாகிகள் பைரவ மூர்த்தி, மைதீன்பாட்ஷா, நடராஜன், மணி, சீனிவாசன், பிரேம்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • குடியரசுத் தலைவர் தேர்தலில், திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
    • பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து

    குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    இந்நிலையில் திரவுபதி முர்முவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் மிக உயர்ந்த அரசமைப்புச் சட்டப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரவுபதி முர்முக்குஎனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து உயர்ந்த நிலைக்கு வந்துள்ள தாங்கள், நசுக்கப்பட்ட குரல்களின் பக்கம் துணைநின்று துடிப்புமிகுந்த அரசியலமைப்பின்பாற்பட்ட மக்களாட்சியை உறுதிசெய்வீர்கள் என உறுதியாக நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  


    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் 15வது குடியரசுத் தலைவராக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு பாமக சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் .

    திரௌபதி முர்மு சாதாரண குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் முதல் குடிமகளாக உயர்ந்திருக்கிறார். மிகவும் எளிமையானவர். அடித்தட்டு மக்களின் தேவைகளையும், பிரச்சனைகளையும் நன்கு அறிந்தவர் என்பது அவரது கூடுதல் சிறப்பாகும்.

    இந்தியாவின் 53 ஆண்டுகால குடியரசு வரலாற்றில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இது சமூகநீதிக்கும் மகளிர் அதிகாரத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  


    இந்நிலையில் குடியரசு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் திரவுபதி முர்முவை டெல்லியில் நேரில் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி திருச்சி காவிரி ஆற்றில் இன்று கரைக்கப்பட்டது. #gkvasan #ilaganesan #Vajpayeesashes

    திருச்சி:

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் இன்று 6 இடங்களில் கரைக்கப்பட்டது. திருச்சியில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதில் பா.ஜ.க. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இல.கணேசன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில துணை தலைவர் சுப்பிரமணியம் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு அஸ்தியை கரைத்தனர்.

    முன்னதாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாயின் அஸ்தி திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. லால்குடியில் இருந்து புறப்பட்டு அரியமங்கலம், டி.வி.எஸ். டோல்கேட், பீமநகர், உறையூர், சத்திரம் பேருந்து நிலையம் வழியாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை வந்தடைந்தது. வழியில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொண்டு வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினர்.

    ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையை அடைந்ததும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்பட்டது. இதில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பா.ஜ.க. திருச்சி மாவட்ட தலைவர் தங்கராஜய்யன் மற்றும் புதிய தமிழகம், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்ததும், காவிரி ஆற்றில் அஸ்தி கரைக்கப்பட்டது.  #gkvasan #ilaganesan #Vajpayeesashes

    ×