search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flag hoisting"

    • 12-ந் தேதி மாலை 7 மணிக்கு அன்னையின் சப்பரபவனி நடைபெறுகிறது.
    • 13-ந்தேதி 10-ம் திருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கு கியது. முதல் திருவிழாவை தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளர் சகாயம் அடிகளார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கள்ளிகுளம் பிளாரிட்டி சமூக அலுவலகம் தேவராஜன், வடக்கன்குளம் ஜெபமாலை தூதுவர் சபை ஜான் பொஸ்கோ, ஆனைகுளம் பங்கு தந்தை லூர்துசாமி, பார்பரம்மாள்புரம் பங்கு தந்தை அமல்ராஜ், இளங்குளம் பங்கு தந்தை பிரான்சிஸ், சேசுசபை குரு வில்ப்ரட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

    11-ந் தேதி (புதன்கிழமை) 8-ம் திருவிழா நடைபெறும். அதில் காலை 5.30 மணிக்கு திருச்செபமாலை, திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை பவனி, நற்கருணை ஆசீர், நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவான 12-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு திருச்செபமாலை, திருப்பலி மாலை 5 மணிக்கு திருச்செபமாலை பவனி, நற்கருணை ஆசீர், நவநாள் திருப்பலி மாலை 7 மணிக்கு அன்னையின் சப்பரபவனி தொடர்ந்து மாலை ஆராதனை நடைபெறுகிறது.

    13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 10-ம் திருவிழா காலை 6 மணிக்கு செபமாலை, திருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு செபமாலை, திருப்பலி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி அதைத்தொடர்ந்து அன்னையின் கொடி இறக்கம் நடைபெறும்.

    திருவிழா ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் ஜேசுதுரை அடிகளார், உதவி பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் அன்பிய பொறுப்பாளர் குழு, பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    • இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது.

    திருவொற்றியூர்:

    மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்ட தர்மபதி மிகவும் பிரசித்தி பெற்றது, இங்கு ஆண்டு தோறும் 10 நாள் புரட்டாசி திருவிழா வெகு விமரிசையாக நடை பெறும். இந்த விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

    இதையொட்டி அய்யாவின் பக்தர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திரு நாமக்கொடியை கையில் ஏந்தியவாறு பள்ளியறையை 5 முறையும்,கொடி மரத்தை 5 முறையும் அய்யா அரஹர சிவ என்ற நாமத்தை உச்சரித்தபடி சுற்றி வந்தனர்.

    பின்னர் பதிவலம் வந்து காலை 6.30 மணியளவில் திருநாமக்கொடி ஏற்றப்பட்டது.

    இரவு 8 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். விழா நாட்களில் தினமும் மாலை திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது.

    தினமும் இரவு அலங்கரிக்கப்பட்ட அன்ன வாகனம், கருடவாகனம், மயில் வாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சர்ப்ப வாகனம், மலர்முக சிம்மாசன வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம், இந்திரவாகனம், பூம்பல்லக்கு வாகனங்களில் அய்யா பதிவலம் வருகிறார்.

    விழாவின் 8-வது நாளான 13-ந்தேதி இரவு 8.30 மணிக்கு சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணி விடை, 9மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேராட்டம் 15-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற உள்ளது. அன்று காலை 6 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6.30 மணிக்கு திருத்தேர் அலங்காரம், 10.30 மணிக்கு பணிவிடை நடக்கிறது. இதையடுத்து காலை 11.30 மணிக்கு அய்யா திருத்தேரில் வீதி உலா வருகிறார்.

    தேரோட்டத்தை தெலுங்கானா மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார். இதில் தமிழ்நாடு பனைமரத்தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் ஏ. நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயத்துரை, ஞானதிரவியம் எம்.பி., நெல்லை -தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் தலைவர் டி.பத்மநாபன்.

    திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செல்வராஜ்குமார், நெல்லை-தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க முன்னாள் செயலாளர் கொட்டிவாக்கம் ஏ.முருகன், பிரைட் சி.முருகன், சி. அருணாசலம் உள்ளிட்ட முக்கிய பரிமுகர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், இரவு10.30 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடை பெறுகிறது. பின்னர் இரவு 1.30 மணிக்கு அகண்டநாமம், 1.45 வைகுண்ட சோபனம், அண்டநாமம், திரு நாமக்கொடி இறக்குதல், பள்ளி யுணர்த்தல், திருநாள் சேவை மகத்துவகானம், இனிமம் வழங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அய்யா வைகுண்ட தர்மபதி அறக்கட்டளை தலைவர் பி. துரைப்பழம், பொது செயலாளர் ஏ. சுவாமி நாதன், பொரு ளாளர். பி. ஜெயக் கொடி, கூடுதல் செயலாளர் டி. ஐவென்ஸ், துணை செயலாளர் வி. சுந்தரேசன், இணை பொது செயலாளர் கே. ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    விழா நாட்களில் பக்தர்கள் சென்று வர போக்குவரத்து வசதி மற்றும் பொது சுகாதாரம் நவீன கழிப்பறைகள் உணவு வசதி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியினை பல்வேறு முக்கிய இடங்களில் பாவரசு ஏற்றி வைத்தார்.
    • முக்கிய சாலையில் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    உடுமலை,அக்.3-

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் உடுமலை யூனியன் ஆபீஸ் அருகே திறக்கப்பட்டது.கட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி கட்சி முதன்மை செயலாளர் ஏ.சி. பாவரசு திறந்து வைத்தார். முன்னதாக காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு முக்கிய சாலையில் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதனை தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியினை பல்வேறு முக்கிய இடங்களில் பாவரசு ஏற்றி வைத்தார்.

    திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதிஷ் குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு திருப்பூர் மண்டல துணை செயலாளர் ஜல்லிபட்டி முருகன், கிறிஸ்தவ சமூக நீதி பேரவை மாநில துணை செயலாளர் கிப்டன் டேவிட் பால், எல்எல்எப்., அரசு போக்குவரத்து கழகம் மாநில துணைச் செயலாளர் சிடிசி சத்தியமூர்த்தி, துப்புரவு பணியாளர்கள் மேம்பட்டு மைய மாநில துணை செயலாளர் விடுதலைமணி, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன் ஈஸ்வரன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளர் சயீத் இப்ராஹிம், உடுமலை ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம், உடுமலை நகர பொறுப்பாளர் பொன் சக்திவேல்,உடுமலை நகர செயலாளர் ரவிக்குமார் , குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டி பாபு ,மகளிர் விடுதலை இயக்கம் லட்சுமி,ராமாத்தாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மானாமதுரையில் புனித குழந்தை தெரசாள் தேவாலய பெருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • வருகிற 30-ந்தேதி ரத பவனி நடைபெறுகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புனித குழந்தை தெரசாள் தேவாலயம் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு திருப்பீடம் அர்ச்சிப்பு விழா மற்றும் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    புதிய திருப்பீடம் அர்ச்சிப்பு விழாவில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் (பொறுப்பு) ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு புதிய திருப் பீடத்தை திறந்து வைத்து அர்ச்சிப்பு செய்து வைத்தார்.குழந்தை தெரசாள் ஆலயத்தின் அருட்தந்தை பாஸ்டின் மற்றும் மறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான அருட் பணியா ளர்கள், பங்கு இறைமக்கள் விழாவில் கலந்து கொண்ட னர்.

    முன்னதாக இந்த ஆலயத்தின் 84 -ம் ஆண்டு பெருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடை பெற்றது. புனித குழந்தை தெரசாள் உருவம் தாங்கிய கொடியை ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பங்கு இறை மக்கள் சார்பில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுரை நிகழ்த்தப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக புனித குழந்தை தெரசாள் சொரூ பம் தாங்கிய மின்விளக்கு ரத பவனி வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. மறுநாள் அக்டோபர் 1-ந் தேதி நற்கருணை பவனியு டன் இந்த ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை புனித குழந்தை தெரசாள் ஆலய அருட்தந்தை பாஸ்டின், பங்கு இறை மக்கள், அருட் சகோதரிகள், பங்கு பேரவையினர் செய்துள்ளனர்

    • புனித குழந்தை தெரசாள் தேவாலய பெருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • இறை மக்கள், அருட் சகோதரிகள், பங்கு பேரவையினர் செய்துள்ளனர்

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புனித குழந்தை தெரசாள் தேவாலயம் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டு திருப்பீடம் அர்ச்சிப்பு விழா மற்றும் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    புதிய திருப்பீடம் அர்ச்சிப்பு விழாவில் சிவகங்கை மறை மாவட்ட ஆயர் (பொறுப்பு) ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு புதிய திருப் பீடத்தை திறந்து வைத்து அர்ச்சிப்பு செய்து வைத்தார்.குழந்தை தெரசாள் ஆலயத்தின் அருட்தந்தை பாஸ்டின் மற்றும் மறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான அருட் பணியா ளர்கள், பங்கு இறைமக்கள் விழாவில் கலந்து கொண்ட னர்.

    முன்னதாக இந்த ஆலயத்தின் 84 -ம் ஆண்டு பெருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடை பெற்றது. புனித குழந்தை தெரசாள் உருவம் தாங்கிய கொடியை ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார்.

    தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பங்கு இறை மக்கள் சார்பில் வெவ்வேறு தலைப்புகளில் மறையுரை நிகழ்த்தப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக புனித குழந்தை தெரசாள் சொரூ பம் தாங்கிய மின்விளக்கு ரத பவனி வருகிற 30-ந் தேதி நடைபெறுகிறது. மறுநாள் அக்டோபர் 1-ந் தேதி நற்கருணை பவனியு டன் இந்த ஆண்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை புனித குழந்தை தெரசாள் ஆலய அருட்தந்தை பாஸ்டின், பங்கு இறை மக்கள், அருட் சகோதரிகள், பங்கு பேரவை யினர் செய்துள்ளனர்

    • திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை பிரம்மோற்சவ விழா தொடக்கம்
    • நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி கொடிமரத்தில் கட்டுவற்காக புனித தர்ப்பை புல், பாய், கயிறு ஆகியவை திருமலைக்கு கொண்டு வரப்பட்டன. அவை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) வருடாந்திர (சாலகட்லா) பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின்போது, தங்கக் கொடிமரத்துக்கு பயன்படுத்தப்படும் புனித தர்ப்பை புல், பாய் மற்றும் கயிறு ஆகியவை திருமலைக்கு வந்தன. திருப்பதி தேவஸ்தான வனத்துறை அலுவலகத்தில் இருந்து துணை வனத்துறை அதிகாரி சீனிவாசுலு, அந்தத் துறை பணியாளர்கள் புனித தர்ப்ப புல், பாய், கயிறு ஆகியவற்றை நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாகக் கொண்டு வந்து, கோவிலுக்குள் எடுத்துச் சென்றனர்.

    கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் சேஷ வாகனத்தின் மீது புனித தர்ப்பை புல், தர்ப்பை பாய், கயிறு ஆகியவை வைக்கப்பட்டன. நாளை நடக்கும் கொடியேற்ற நிகழ்ச்சியில் இந்தப் புனித பொருட்கள் பயன்படுத்தப்படும்.

    பிரம்மோற்சவ விழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் கருட கொடியேற்றம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி 'துவஜாரோஹணம்' என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி கோவிலின் தங்கக் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டு, பிரம்மோற்சவ விழாவில் பங்கேற்க முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.

    ருத்விக்குகள் கொடிமரத்தை சுற்றி வேத மந்திரங்களுடன் தர்ப்ப பாயை போர்த்துவர். கொடிமரம் வரை தர்ப்பை கயிறு கட்டப்படும். தர்ப்பை கயிறு, பாய் ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தான வனத்துறையினர் 10 நாட்கள் இரவும் பகலுமாக மிகுந்த அர்ப்பணிப்புடன் இந்தப் புனித பொருட்களை தயாரித்துள்ளனர். தர்ப்பையில் சிவ தர்ப்பை, விஷ்ணு தர்ப்பை என 2 வகைகள் உள்ளன. அதில் ஏழுமலையான் கோவிலில் 'விஷ்ணு தர்ப்பை' பயன்படுத்தப்படுகிறது.

    இந்த விஷ்ணு தர்ப்பை புல் திருப்பதி மாவட்டம் ஏர்ப்பேடு மண்டலம் செல்லூர் கிராமத்தில் வளர்க்கப்படுகிறது. அதை, தேவஸ்தான வனத்துறையினர் அறுவடை செய்து, திருமலைக்கு கொண்டு வந்து ஒரு வாரம் மிதமான வெயிலில் உலர்த்தி காய வைத்து, நன்றாகச் சுத்தம் செய்து பாய், கயிறு தயார் செய்தார்கள். வனத்துறை ஊழியர்கள் 22 அடி நீளம், 7½ அடி அகலத்தில் தயாரித்த தர்ப்பை பாய் மற்றும் 200 அடிக்கு மேல் நீளமுள்ள கயிறு திருமலைக்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தர்ப்பை புல், கயிறு, பாய் ஊர்வலத்தில் கோவில் துணை அதிகாரி லோகநாதம், பறக்கும் படை அதிகாரி பாலிரெட்டி மற்றும் வனத்துறையினர் பங்கேற்றனர்.

    • பிரமோற்சவத்தின் முதல் நாள் மாநில அரசின் சார்பில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.
    • கருட சேவையின் போது நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி மலையில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் அவர் பிரம்மதேவனை அழைத்து உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதை மகிழ்ச்சியுடன் ஏற்று பிரம்மதேவர் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று நிறைவுபெறும் விதமாக 9 நாட்கள் உற்சவத்தை நடத்தினார்.

    பிரம்ம தேவர் நடத்திய உற்சவம் என்பதால் திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரமோற்சவம் என்று அழைக்கப்பட்டு வருவதாக புராணங்கள் கூறுகிறது.

    இந்த ஆண்டு வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    22-ந்தேதி கருட சேவை 23-ந் தேதி தங்க தேரோட்டம் 25-ந் தேதி திருத்தேர் 26-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

    கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றனர்.

    பிரமோற்சவ நாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், வாகன சேவைகள் நடைபெற உள்ளன. அப்போது 9 மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரமோற்சவத்தின் முதல் நாள் மாநில அரசின் சார்பில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார்.

    கருட சேவை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிவார்கள். அப்போது பக்தர்கள் நெரிசல் இன்றி எளிதில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    கருட சேவையின் போது நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். பக்தர்கள் வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. மாடவீதிக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களை வரிசையில் அனுமதித்து கருட சேவையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

    கருட சேவையின் போது 2 அல்லது 3 மணி நேரம் வரை பொறுமையாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அதிகாரிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

    திருப்பதி பிரமோற்சவ விழாவை வெட்டி ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் சென்னை, வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    • கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும்.
    • விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் நடைபெறும். இந்த விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    காலை 10 மணிக்கு கொடி கோவிலை சுற்றி வந்தது. 11 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. முன்னதாக கொடிமரம் அருகே வெள்ளி மூஷிக வாகனத்தில் உற்சவர் கற்பகவிநாயகரும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேசுவரரும் எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    முதல் நாள் திருவிழாவான நேற்று கற்பகவிநாயகர் மூஷிக வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்தார். 2-ம் நாள் திருவிழாவான இன்று(திங்கட்கிழமை) இரவு சிம்ம வாகனத்திலும், 12-ந்தேதி பூத வாகனத்திலும், 13-ந்தேதி கமல வாகனத்திலும், 14-ந்தேதி இரவு ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 16-ந்தேதி மயில் வாகனத்திலும், 17-ந்தேதி குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இதேபோல் 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாறு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் படையல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. இத்துடன் சதுர்த்தி விழா நிறைவு பெறுகிறது.

    விழாவில் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • திருவிழா தொடங்கியதையொட்டி தினசரி காலை 6.30 மணிக்கு திருப்பலியும் மற்றும் பல்வேறு சபை சார்பில் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
    • வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்னை மரியாள் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை புனித வளன் பள்ளி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணப்பாடு ஊராட்சி கடற்கரை ஓரத்தில் மணலும் கல்லும் சேர்ந்த சுமார் 50 அடி உயரத்தில் மணல் குன்று உள்ளது.

    இந்த குன்றின் மீது அமைந்துள்ள திருச்சிலுவை நாதர் திருத்தலத்தின் 444- வது ஆண்டு மகிமை பெரும் திருவிழா இன்று காலை 8 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு திரு விழா தொடங்கியது.

    நிகழ்ச்சிக்கு அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமை தாங்கி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் வழங்கி, மறையுறை நிகழ்த்தி கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் அப்பம் வழங்கினார். இதில் ஊர் மக்கள் அனைவரும், குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    திருவிழா தொடங்கி யதையொட்டி தினசரி காலை 6.30 மணிக்கு திருப்பலியும் மற்றும் பல்வேறு சபை சார்பில் நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்னை மரியாள் பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியாக காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை புனித வளன் பள்ளி வளாகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக் கிறது.

    விழாவின் முக்கிய நாட்க ளான 13-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6,30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகைக்கு சிறப்பான வரவேற்பு, மாலை பெரும் விழா மற்றும் மாலை ஆரா தனை சிறப்பு மறையுறை நடக்கிறது.

    14-ந்தேதி (வியாழக் கிழமை) மகிமை பெரு விழாவையொட்டி அதி காலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாள திருப்பலியும், 6 மணிக்கு திருத்தலத்தை சுற்றி வந்து, மகிமை பெரும் விழா நிகழ்ச்சி, புதிய சபையினர் தேர்வு செய்தல், மாலை 4 மணிக்கு பங்கு ஆலயத்தில் நற்கருணை நடக்கிறது.

    மாலை 5 மணிக்கு கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது, திருவிழாவில் முக்கியமான நாட்களான 13 மற்றும்

    14-ந்தேதி தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கேரளா வில் இருந்தும் இறை மக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ஏராளமான மக்கள் கார், பஸ், வேன் போன்ற வாக னங்களில் குடும்பத்துடன் வந்து 2 நாள் தங்கியிருந்து திருப்பலியில் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை மணப்பாடு புனித யாகப்பர் பங்குத் தந்தையர்கள் மற்றும் விழாக்குழுவினர், ஊர் மக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
    • 2-ம் திருவிழாவில் இருந்து 6-ம் திருவிழா வரை கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா வருகிற 15-ந்தேதி வரை 12 நாட்கள் விழா நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    தொடர்ந்து கொடி மரத்துக்கு அபிஷேகம் நடை பெற்று தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள், இணை ஆணையர் கார்த்திக், டி.வி.எஸ். ஸ்ரீனிவாசா சேவா அறக்கட்டளை இயக்குனர் விஜயகுமார், பி.ஜி. மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் வி.சி.ஜெயந்திநாதன், கோவில் பணியாளர்கள், ஏரல் சேர்மன் கோவில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    காலை10 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடந்தது. மாலை 4 மணிக்கு சாய ரட்சை தீபாராதனை, நடக்கிறது. இன்று மாலை அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத் தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    8-ந்தேதி 5-ம் திரு விழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடவருவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    9-ந்தேதி 6-ம் திருவிழா அன்று காலை கோரதமும், இரவில் வெள்ளி ரதமும் வீதி உலா நடைபெறும். 10-ந்தேதி 7-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.

    அதனைத்தொடர்ந்து 8.45 மணிக்கு சுவாமி ஆறுமுகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சேர்கிறார்.

    அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    11-ந்தேதி 8-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி வலம் வந்து மேலக்கோவில் சேர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது.

    பகல் 12 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் சுவாமி பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் வந்து சேர்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகி்ற 13-ந்தேதி (புதன் கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது.

    2-ம் திருவிழாவில் இருந்து 6-ம் திருவிழா வரை கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. 4.30-க்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    7-ம் திருவிழா 10-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • அன்னை ஆலயத்தில் 333 ஆண்டு ஆடம்பரத் தேர் பவனி வருகின்ற 10-ம் தேதி நடக்கிறது.
    • புதுவை வட்டார முதன்மை குரு ரொசாரியோ சிறப்பு அழைப்பாக கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 333 ஆண்டு ஆடம்பரத் தேர் பவனி வருகின்ற 10-ம் தேதி மாலை நடக்கிறது. அதனை முன்னிட்டு நாளை காலை 6 மணி அளவில் திருப்பலி நடைபெற்று கொடியேற்றம் நடக்கிறது.

    இதில் புதுவை வட்டார முதன்மை குரு ரொசாரியோ சிறப்பு அழைப்பாக கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். பங்குத்தந்தை அந்தோணிரோச் தலைமை தாங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் பங்கு நிர்வாக குழு பொறுப்பாளர்கள் லூர்துசாமி, அந்தோணிராஜ், மில்கி, பங்கு மக்கள், தன்னார்வலர்கள் குழு உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    • ஆரோக்கிய அன்னை தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    வாடிப்பட்டி

    தென்னகத்து வேளாங்கன்னி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் திருவிழா நேற்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நேற்று மாலை 6.15மணிக்கு மதுரை மறை மாவட்ட பேராயர் அந்தோணிபாப்பு சாமி தலைமையில் அன்னையின் கொடியேற்றமும், சிறப்பு திருப்பலியும் நடந்தது.

    மேலும் இதன் முக்கியவிழாவான வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆரோக்கிய அன்னையின் பிறப்புப்பெருவிழா, இறைவார்த்தை சபை 148-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவஊற்று இயேசுவின் அருமருந்து 23-வதுஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடக்கிறது. அன்றுமாலை 5 மணிக்கு நற்கருணை ஆராதனையும், 6 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத்திருப்பலியை யும் தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ்துரைராஜ் நடைபெற உள்ளது. இரவு 7மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் வண்ணவிளக்குகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனியும் நடக்கிறது.

    9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6.30 ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குதந்தை வளன் தலைமையில் இறக்கப்பட்டு நன்றிதிருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இந்த திருவிழா ஏற்பாடு களை எஸ்.வி.டி.அதிபர் வளன், எஸ்.வி.டி. நிர்வாகி ஆன்றனி வினோ, உதவி பங்குதந்தை அடைக்கலராஜ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்ற னர்.

    இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இன்ஸ் பெக்டர் முத்து தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகே சன், மாயாண்டி, உதயக்குமார், அழகர்சாமி உள்ளிட்ட போலீசார்கள் செய்து வருகின்றனர்.

    ×