search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St. Fathima Cathedral"

    • 12-ந் தேதி மாலை 7 மணிக்கு அன்னையின் சப்பரபவனி நடைபெறுகிறது.
    • 13-ந்தேதி 10-ம் திருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் புனித பாத்திமா அன்னை பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கு கியது. முதல் திருவிழாவை தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளர் சகாயம் அடிகளார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    கள்ளிகுளம் பிளாரிட்டி சமூக அலுவலகம் தேவராஜன், வடக்கன்குளம் ஜெபமாலை தூதுவர் சபை ஜான் பொஸ்கோ, ஆனைகுளம் பங்கு தந்தை லூர்துசாமி, பார்பரம்மாள்புரம் பங்கு தந்தை அமல்ராஜ், இளங்குளம் பங்கு தந்தை பிரான்சிஸ், சேசுசபை குரு வில்ப்ரட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

    11-ந் தேதி (புதன்கிழமை) 8-ம் திருவிழா நடைபெறும். அதில் காலை 5.30 மணிக்கு திருச்செபமாலை, திருப்பலி, மாலை 6.30 மணிக்கு செபமாலை பவனி, நற்கருணை ஆசீர், நவநாள் திருப்பலி நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவான 12-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு திருச்செபமாலை, திருப்பலி மாலை 5 மணிக்கு திருச்செபமாலை பவனி, நற்கருணை ஆசீர், நவநாள் திருப்பலி மாலை 7 மணிக்கு அன்னையின் சப்பரபவனி தொடர்ந்து மாலை ஆராதனை நடைபெறுகிறது.

    13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) 10-ம் திருவிழா காலை 6 மணிக்கு செபமாலை, திருவிழா சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு செபமாலை, திருப்பலி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை பவனி அதைத்தொடர்ந்து அன்னையின் கொடி இறக்கம் நடைபெறும்.

    திருவிழா ஏற்பாடுகளை பேராலய பங்குத்தந்தை ஜான்சன் ஜேசுதுரை அடிகளார், உதவி பங்குத்தந்தை ஆரோக்கியதாஸ் மற்றும் அன்பிய பொறுப்பாளர் குழு, பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    ×