என் மலர்
நீங்கள் தேடியது "Fire"
- காரைக்குடியில் செருப்பு குடோனில் தீ விபத்தில் ரூ. ரூ.பல லட்சம் செருப்புகள் எரிந்து நாசகியது.
- 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செகண்ட் பீட் அருகே உள்ள டாக்சி ஸ்டாண்ட் பகுதியில் தனியார் செருப்பு குடோன் உள்ளது.
பழமையான கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த குடோனில் மின் கசிவு காரணமாக இன்று காலை தீப்பற்றி எரிந்தது. குடோனில் இருந்த ரூ. பல லட்சம் மதிப்பிலான செருப்புகள் எரிந்து சேதமானது.
காரைக்குடி தீயணைப்பு நிலையம் ஊருக்கு வெளியே 3 கிலோமீட்டர் தூரம் தள்ளி இருந்ததால் தீயை அணைக்க வருவதற்கு தாமதம் ஆனது.அதன் பின்பு காரைக்குடி, தேவகோட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- அவரது அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டுக் கொன்றதாக கொலையாளி தெரிவித்தார்.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் அலுவலகம் தலைநகர் டோக்கியோவில் உள்ளது. இந்த அலுவலகம் அருகே வாலிபர் ஒருவர் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வாலிபர் திடீரென்று தன் உடலில் தீ வைத்து கொண்டார். உடலில் தீ எரிந்தபடி ஓடிய அவரை போலீசார் தடுத்து நிறுத்தி தீயை அணைத்தனர். பின்னர் சுய நினைவை இழந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு சார்பில் இறுதிச் சடங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நபர் பிரதமர் அலுவலகம் அருகே தீக்குளித்துள்ளார்.
இது தொடர்பாக டி.வி. சேனல் ஒன்று கூறும்போது, "முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு அரசு இறுதி சடங்கை நடத்தும் திட்டத்தை எதிர்ப்பதாக போலீசாரிடம் கூறிய பின்னர் அந்த நபர் தனக்கு தானே தீ வைத்து கொண்டார்" என்று தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் பிரசாரத்தில் ஈடுபட்டபோது வாலிபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது அரசியல் நடவடிக்கை பிடிக்காததால் சுட்டுக் கொன்றதாக கொலையாளி தெரிவித்தார்.
ஷின்சோ அபேவுக்கு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியை வருகிற 27-ந்தேதி நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் பாதி பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2 கடைகள் தீயில் எரிந்து நாசமானது.
- தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.
புதுக்கோட்டை
விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாதிரிபட்டி பிரிவு சாலையில் 2 பெட்டிக்கடைகள் உள்ளன. நேற்று அதிகாலை 2 கடைகளும் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அந்த கடைகள் கீற்று கொட்டகையாக இருந்ததால் தீ மளவளவென்று பரவியது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இருப்பினும் கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீ மளமளவென எரிந்ததால் வீட்டிலிருந்த எந்த பொரு ள்களும் எடுக்க முடிய வில்லை.
- வீடு எரிந்து 2 மணி நேரத்துக்கு பிறகு மின் துறையைச் சார்ந்த ஊழியர் ஒருவர் வந்ததாக தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த பெருமுளை கிராமத்தில் உள்ள பழைய காலனி ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 4 குடிசை வீடுகளில் 5 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கட்டிமுத்து, ராஜவேல், ரங்கசாமி, அஞ்சலை, சக்திவேல் ஆகிய 5 பேரின் கூரை வீடுகள் இன்று காலை மின் கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் 4 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீ மளமளவென எரிந்ததால் வீட்டிலிருந்த எந்த பொரு ள்களும் எடுக்க முடிய வில்லை.
அதனால் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் விரைந்து வந்து தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவாமல் தீயை அனைத்தனர். இது குறித்து அங்கு வசிக்கும் பொது மக்கள் கூறுகையில், மின் கம்பி அறுந்து கூரை மேல் விழுந்ததால் தீ பிடித்து எரிந்தது. மின் கம்பி அறுந்து விழுந்து வீடு தீப்பற்றி எரிவதாக திட்டக்குடி மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் வீடு எரிந்து 2 மணி நேரத்துக்கு பிறகு மின் துறையைச் சார்ந்த ஊழியர் ஒருவர் வந்ததாக தெரிவித்த னர். அடுத்தடுத்து 4 வீடுகள் தீ பிடித்து எரிந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத போது அவரது உடலில் கடலெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
- அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பி.ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி சிவகாமி (74). இவர் உடல் நிைல சரியில்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இதனால் அவர் வேதனை அடந்து மனம் உடைந்து வந்தார். இந்த நிலையில் சிவகாமி வீட்டில் யாரும் இல்லாத போது அவரது உடலில் கடலெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதில் அவர் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக கோபி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவகாமி இறந்தார்.
இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விருதுநகர் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள தென்னிலைக்குடியைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மனைவி வள்ளி (வயது 65). இவருக்கு கடந்த சில வருடங்களாக உடல்நல பாதிப்பு இருந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வள்ளி சம்பவத்தன்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். படுகாயமடைந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி வள்ளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
- வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான நூல் மில் உள்ளது. இந்த நூல் மில்லில் ஊழியர்கள் நேற்று பகலில் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது திடீரென பஞ்சு அரைக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.இதையறிந்த ஊழியர்கள் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் மற்றும் வேலுச்சாமி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் ஊழியர்கள் காயமின்றி தப்பினர். சேதம் குறித்து கணக்கிட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
- வங்கி ஊழியர்கள் மீது புகார் தெரிவித்தார்.
- கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது.
கோவை
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் பொது மக்கள் தங்களது கோரிக்கை சம்பந்தமான மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.
இதனையொட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென தான் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைப் பார்த்த போலீசார் அவரது கையில் இருந்த மண்எண்ணை கேனை பறித்து அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
பின்னர் போலீசார் அவரிடம் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:-
எனது பெயர் ராஜேந்திரன் (வயது 60). ஆட்டோ டிரைவர். நான் கடந்த ஜூன் மாதம் வடவள்ளியில் உள்ள ஏ.டி.எம் மையத்துக்கு சென்று ரூ.2500 பணம் எடுக்க முயன்றேன். பணம் வரவில்லை.
ஆனால் எனது கணக்கில் பணம் பிடித்தம் செய்ததாக காட்டியது. இதுகுறித்து வங்கி மேலாளரிடம் முறையிட்டபோது அவர்கள் என்னை தரக்குறைவாக பேசி அலைக்கழிக்கின்றனர்.
மேலும் நான் ஏ.டி.எம்-மில் பணம் எடுத்துவிட்டு பொய்யான தகவலை கூறுவதாகவும், போலீசில் புகார் அளிப்போம் எனவும் மிரட்டுகின்றனர்.
எனவே இந்த பிரச்சினை தொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி எனது பணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீரவநல்லூர் அருகே உள்ள வடக்கு காருக்குறிச்சியை சேர்ந்தவர் இசக்கிமுத்து(வயது 26). கட்டிட தொழிலாளி.
- மோட்டார் சைக்கிள் தீயில் கருகி எலும்புக்கூடாக காட்சியளித்தது.
நெல்லை:
வீரவநல்லூர் அருகே உள்ள வடக்கு காருக்குறிச்சியை சேர்ந்தவர் முத்தையா பாண்டியன். இவரது மகன் இசக்கிமுத்து(வயது 26). கட்டிட தொழிலாளி.
சம்பவத்தன்று இரவு இசக்கிமுத்து வேலைக்கு சென்றுவிட்டு தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் தீயில் கருகி எலும்புக்கூடாக காட்சியளித்தது.
இரவு நேரத்தில் வந்த மர்ம நபர் யாரோ மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்திருப்பதை அறிந்த இசக்கிமுத்து, வீரவநல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் யார்? எதற்காக தீ வைத்தார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- போலீசார் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
- அலமாரிகள் எரிந்து நாசமானது.
அரவேணு,
கோத்தகிரியில் இருந்து ஊட்டி, குன்னூர் செல்லும் சாலையில் அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது. அங்கு ஒரு மண்டபம் உள்ளது. மண்டபத்தின் மேல் பகுதியில், காய்கறி மற்றும் பழக்கடை செயல்பட்டு வந்தது.
கடந்த சில மாதம் முன்பு அங்கு கடை நடத்தி வந்தவர் கடையை காலி செய்தார். ஆனால், கடையில் பயன்படுத்திய மரத்தால் ஆன அலமாரிகளை கொண்டு செல்லாமல், அங்கேயே வைத்திருந்தார்.
இந்தநிலையில் இரவு 10.15 மணியளவில் பழக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த அலமாரிகள் தீப்பிடித்து எரிந்தது. அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். கடையில் பொருட்கள் எதுவும் இல்லாததால், அலமாரிகள் எரிந்து நாசமானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- லேப்டாப் சார்ஜ் ஏற்றும்போது தீ விபத்தில் வீட்டில் பொருட்கள் எரிந்து நாசமாகியது.
- திருமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
திருமங்கலம்
திருமங்கலம் முகமதுஷா புரம் தேவர் தெரு சேர்ந்தவர் ஆனந்தன். இவரது வீட்டில் கார் டிரைவர் மாணிக்கம் (வயது 28) குடியிருந்து வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி நேற்று இரவு 7 மணி அளவில் லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டு மெத்தையில் வைத்துள்ளார்.
அப்போது திடீரென மின்கசிவினால் லேப்டாப் சார்ஜர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீ கண்ணி மைக்கும் நேரத்தில் மளமள வென எரிய தொடங்கியது.இதனால் அதிர்ச்சியடைந்த இந்திராணி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். அக்கம் பக்கத்தினர் உடனடி யாக தீயை அணைக்க முற்பட்டனர்.
ஆனால் தீ பற்றி எரிய தொடங்கியதால் தீயை அணைக்க முடியவில்லை. உடனடியாக திருமங்கலம் தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் கொடுத்த னர். திருமங்கலம் தீயணைப்பு அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனை த்தும் எரிந்து நாசமாயின.
- தீயில் கருகி முதியவர் பலியானார்.
- கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் அருகே உள்ள பெரிய தாதம்பட்டியைச் சேர்ந்தவர் ராமராஜ் (வயது 62). திருமணமாகாத இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு மனநலம் பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலில் வசிக்கும் தனது சகோதரி சரஸ்வதி வீட்டிற்கு ராமராஜ் வந்துள்ளார்.
அன்றிரவு சாப்பிட்டு விட்டு வெளியே சென்ற ராமராஜ் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவர் தாதம்பட்டிக்கு சென்றிருக்கலாம் என குடும்பத்தினரும் கருதி விட்டனர்.இதற்கிடையில் சரஸ்வதி வீட்டில் எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் மண்டபத்தில் உடல் கருகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணன் கோவில் போலீசார் சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்தவர் ராமராஜ் என தெரியவந்தது.
வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.