search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fire"

    • கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
    • தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.

    மதுரை:

    மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 78). இவர், தெற்குமாசி வீதியில் டி.எம். கோர்ட் அருகே நகைக்கடை நடத்தி வருகிறார். கடையில் கீழ்தளத்தில் விற்பனை பிரிவும், முதல் தளத்தில் நகைகளை பாதுகாக்கும் லாக்கர் அறையும், 2-ம் தளத்தில் குடோனும் உள்ளன.

    நேற்று இரவு கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் நகைகள் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு 20-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்நிலையில் திடீரென்று 7.30 மணி அளவில் கடையின் முதல் தளத்தில் இருந்து கரும்புகை வெளிவந்தது.

    இதைப்பார்த்த கடையில் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர். இதற்கிடையே உரிமையாளரின் மருமகன் மோதிலால் (45) முதல் தளத்தில் இருந்தவர்களை எச்சரிக்கை செய்யவும், அவர்களை வெளியேற்றவும் விரைந்து சென்றார். அப் போது அங்கு மின்சார வயர்கள் தீப்பிடித்து எரிவதாக கூச்சல் போட்டார்.

    ஆனால் அதற்குள் முதல் தளத்தில் புகை மூட்டம் அதிகமானது. எதிரே நிற்பவர் கூட தெரியாத அளவுக்கு புகை அடைத்துக் கொண்டதால் அவரால் கீழே வர முடியவில்லை. முன்னதாக அந்த தளத்தில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறினர். கீழ் தளத்தில் இருந்தவர்கள் மோதிலாலின் செல்போனை தொடர்பு கொண்டபோது, அதனை எடுக்கும் நிலையில் மோதிலால் இல்லை. இதனால் அங்கு பதற்றம் அதிகமானது.

    இதுபற்றிய தகவலின் பேரில் மதுரை திடீர் நகர், மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் விபத்தில் மோதிலால் சிக்கிக்கொண்ட முதல் தளத்திற்கு சென்றனர். மேலும் தகவல் அறிந்து போக்குவரத்து போலீசாரும் அங்கு விரைந்து வந்து மாற்றுப்பாதையில் போக்குவரத்தை திருப்பிவிட்டனர்.

    இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் கடையின் முதல் தளத்தில் இருந்த கண்ணாடி கதவுகளை உடைத்து உள்ளே சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது மோதிலால் ஒரு அறையில் சிக்கி இருப்பது தெரியவந்தது.

    அந்த கதவையும் உடைத்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அளவுக்கு அதிகமான புகையை சுவாசித்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள் ளது. பின்னர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மூச்சுத்திணறி பலியான மோதிலாலுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கராச்சி:

    பாகிஸ்தான் நாட்டின் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வணிக வளாக தீ விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனையின் பின்புறம் பயன்பாட்டில் இல்லாத பழைய பிணவறையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள், காலா வதியான மருத்து வமனை பொரு ட்கள். மருத்துவமனையில் தேவையற்ற பொருட்களை வைத்திருந்த அறை திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் சண்முகம் தலைமையில் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.அரசு மருத்துவமனை திடீரென மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • விசாரணைக்கு பெண் தேவாரம் போலீஸ் நிலையம் வந்த போது திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்றார்.
    • இதுகுறித்து பெண் மீது தேவாரம் போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவா ரம் அருகில் உள்ள டி.ஓவுலாபுரத்தை சேர்ந்தவர் வேங்கையன். இவரது மனைவி கவுசல்யா(53). இவர் தனது வீட்டை தம்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த செட்டிவீரன் மகன் பெருமாளுக்கு ஒத்திக்கு விட்டிருந்தார்.

    அவர்களுக்குள் பிரச்சி னை ஏற்பட்டதால் இதுகுறித்து தேவாரம் போலீசில் கவுசல்யா புகார் அளித்தார். விசாரணைக்கு கவுசல்யா தேவாரம் போலீஸ் நிலையம் வந்த போது திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொள்ளப்போ வதாக கூறினார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் கவுசல்யா விடமிருந்து மண்எண்ணையை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து கவுசல்யா மீது தேவாரம் போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கவுசல்யா புகாரின்பேரில் பெருமாள், அவரது மனைவி ராசாத்தி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து ள்ளனர்.

    இதனிடையே கவுசல்யாவின் கணவர் வேங்கையன், பெருமாளின் உறவினரான ரீட்டா என்பவரை தகாத வார்த்தைகளால் பேசியதால் அவர் தற்கொலைக்கு முயன்றாராம். இதுகுறித்தும் ரீட்டா அளித்த புகாரின்பேரில் தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மனைவி மாயமானதால் வேதனை
    • பேரூர் போலீசார் தீவிர விசாரணை

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையத்தை சேர்ந்தவர் தர்மன் (வயது 28).

    சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி தனது கணவரிடம் கோபித் துக்கொண்டு வெளியே சென்றார். இதனையடுத்து தர்மன் தனது மனைவி அந்த பகுதியில் உள்ள மாமியார் வீட்டிற்கு தான் சென்று இருப்பார் என நினைத்து அங்கு சென்று பார்த்தார். ஆனால் அவர் அங்கு இல்லை. பின்னர் அருகே உள்ள உறவினர் வீடுகளிலும் சென்று தேடி பார்த்தார். ஆனால் மனைவியை கண்டு பிடிக்க முடிய வில்லை.

    இதனால் மனவேதனை அடைந்த தர்மன் பெட்ரோலை அவரது முகத்தில் ஊற்றி தீ பற்ற வைத்தார். தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தர்மனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உறவினர் வாகனங்களுக்கு தீ வைத்த திருச்சி பெண் கைது செய்யப்பட்டார்
    • கணவர் 2-வது திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் வெறிச்செயல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விமல்ராஜா. இவருக்கும் திருச்சி மாவட்டம், தாத்தையார்பேட்டையை சேர்ந்த நடேசன் மகள் கோகிலா (28) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கோகிலாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் இரு வீட்டார்களும் பேசி விமல்ராஜாவையும் கோகிலாவையும் பிரித்து வைத்துள்ளனர். தற்போது விமல்ராஜா வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.

    விமல்ராஜா தன்னை பிரிந்ததற்கும், 2-வது திருமணம் செய்ததற்கும் அவரது அக்காள் கணவர் தனபால் (வயது 50) காரணம் என்று கோகிலா சந்தேகம் அடைந்தார். இதையடுத்து சம்பவத்தன்று ஈச்சம்பட்டியில் உள்ள தனபாலின் வீட்டிற்கு வந்த கோகிலா அவரது மோட்டார்சைக்கிள்களுக்கு தீ வைத்தார்.

    இதுகுறித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து கோகிலாவை கைது செய்தனர்.

    • பெரம்பலூர் பி.ஜே.பி. முன்னாள் மாவட்ட செயலாளரின் 2 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது
    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் மாவட்டம் ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால்(வயது 50). இவர் பி.ஜே.பி. கட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். அதன் பின்னர் தற்போது பி.ஜே.பி.யில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

    இந்நிலையில் தனபால் வீட்டு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை கண்ட எதிரே குடியிருக்கும் வரதராஜ் என்பவர் கூச்சலிட்டு உள்ளார். அவரின் கூச்சலை கேட்டு தனபால் வெளியே வர எந்தனித்து உள்ளார். ஆனால் வீட்டின் கதவை திறக்க முடியவில்லை.

    இதற்கு காரணம் வீட்டின் முன்பக்க கதவை வெளிப்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. பின்னர பொது மக்களுடன் உதவியுடன் கதவை திறந்து வெளியே வந்த தனபால், தீயை அணைத்துள்ளார். ஆனால் அதற்குள் 2 மோட்டார் சைக்கிள்களும் முழுவதுமாக எரிந்து கருகியது.

    முன்விரோதம் காரணமாக அவரது2 மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்கள் எரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு பரவியது.
    • நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், ராஜேந்திரா நகரில் உள்ள சன்சிட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு விற்பனை கடை உள்ளது.

    தற்போது தீபாவளி நேரம் என்பதால் பட்டாசு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று இரவு விற்பனை முடிந்து ஊழியர்கள் பட்டாசு கடையை மூடிவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் நள்ளிரவில் மின்கசிவு காரணமாக பட்டாசு கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி அருகில் உள்ள குடோனுக்கு பரவியது. பின்னர் அதன் அருகில் இருந்த ஓட்டலுக்கு தீ பரவியதால் அங்கிருந்த சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன.

    இதனால் பட்டாசு கடைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் நள்ளிரவில் வெடிகுண்டு வெடித்ததாக பீதி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

    தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடினா். தீ மேலும் மளமளவென பரவி அருகில் இருந்த மேலும் 4 கடைகள் எரிந்து நாசமானது.

    கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு கடைகளின் சுவர்களை உடைத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து ராஜேந்திரா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
    • வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    மதுரை

    தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஏராள மான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தி லேயே இரு பாலருக்கும் தனித்தனியே தங்கும் விடுதிகள் உள்ளன.

    இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் போது பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் திடீரென தீ பற்றி எரிய தொடங்கியது. இதனால் செய்வதறியாது திணறிய மாணவிகள் விடுதியில் இருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதுகுறித்து மாணவிகள் பல்கலைகழக நிர்வாகத்தி னருக்கு தகவல் தெரிவித்தனர். சில விடுதி மாணவி களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே தீயணைப்பு துறையினருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து பெரியார் மற்றும் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 2 வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் விரைந்து வந்தனர்.

    மின்சார வாரியத்திற்கும் உடனடியாக தகவல் தெரி விப்பட்டது. மின்வாரி யத்தினர் உடனடியாக மின்சாரத்தை துண்டி த்ததால் பெரும் அசம்பா விதம் நடப்பது தவிர்க்கப் பட்டது. இதனால் மின் கம்பத்தில் இருந்து புகை வந்ததால் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி வளாகம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது.

    இதில் 4 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவர்களை அருகில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் முதலு தவி சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர்.

    மழையினால் மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவி விடுதி வளாகம் முழுவதும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகமலை புதுக்கோட்டை இன்ஸ் பெக்டர் சிவகுமார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சங்கரநாராயணன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்திருப்பதை அறிந்த சங்கரநாராயணன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் சிவா தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(வயது 43). இவர் அப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

    இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டுமுன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது இருச்சக்கர வாகனம் முழுதும் தீயில் கருகி எலும்புக்கூடாக காட்சியளித்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மர்ம நபர்கள் தீவைத்திருப்பதை அறிந்த அவர் இதுதொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டதுடன் அப்பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பேட்டரி ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பெரிய வள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் வேலாயுதம் பாளையம் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது தனக்கு சொந்தமான பேட்டரி ஸ்கூட்டரில் தளவாபாளையம் அருகே மலையம்மன் திருமண மண்டபம் எதிரில் வந்து கொண்டிருந்த போது பேட்டரி ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று ஸ்கூட்டரில் வேகமாக எழுந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் பேட்டரி ஸ்கூட்டர் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.

    • கரும்புத்தோட்டத்தில் உள்ள பயிர்களில் மின்சார கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது.
    • தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் பகண்டை கூட்டு ரோட்டை சே ர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் தனது விளை நிலத்தில் கரும்பு பயிர் வைத்திருந்தார். இந்நிலையில் கரும்புத்தோட்டத்தில் உள்ள பயிர்களில் மின்சார கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இதில் கரும்பு பயிர்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுபற்றிய தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் தீயில் கருகி சேத மடைந்தது.

    ×