search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers' Struggle"

    • திகாயத்தின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
    • ஏராளமான போலீசார் எல்லைகளில் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி :

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (திங்கட்கிழமை) விவசாயிகள் போராட்டம் (மகா பஞ்சாயத்து) நடத்த முடிவு செய்துள்ளனர்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாதான் இதற்கும் அழைப்பு விடுத்திருந்தது.

    இதை ஏற்று டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் நேற்று முதலே ஜந்தர் மந்தரை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் ஆக்கிரமித்து இருந்ததால், இந்த போராட்டத்தை தீவிரமாக ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியை அடையும் அனைத்து சாலைகளிலும் தடுப்பு வேலிகள் அமைத்து மூடியுள்ளனர். அத்துடன் டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களை சேர்ந்த ஏராளமான போலீசாரை எல்லைகளில் காவலுக்கு நிறுத்தி உள்ளனர்.

    மேலும் ரெயில்வே தண்டவாளங்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு போடப்பட்டு உள்ளது. எந்தவித அசம்பாவிதங்களையும் தவிர்ப்பதற்காக டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக பாரதீய கிசான் யூனியன் செய்தி தொடர்பாளரும், சன்யுத் கிசான் மோர்சசா அமைப்பின் மூத்த தலைவருமான ராகேஷ் திகாயத் நேற்று ஜந்தர் மந்தர் சென்று கொண்டிருந்தார்.

    அவரை காசிப்பூரில் தடுத்து நிறுத்திய டெல்லி போலீசார், பின்னர் கைது செய்து மது விகார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு வைத்து அவரிடம் பேச்சுவார்த்தை நடந்தது.

    போலீசாரின் வற்புறுத்தலை தொடர்ந்து அவர் போராட்டக்களம் செல்லாமல் திரும்பி சென்றார். எனினும் போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் ஆணைப்படி இயங்கும் டெல்லி போலீசாரால், விவசாயிகளின் குரலை அடக்க முடியாது என அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

    திகாயத்தின் கைதுக்கு ஆம் ஆத்மி கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

    விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன் வைத்து விவசாயிகள் நடத்தும் போராட்டத்தால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • வானூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    • நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் கோஷம் போட்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தைலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஈச்சங்காடு பகுதியில் நிலமற்ற ஆதி திராவிட விவசாயிகளுக்கு 11 ஏக்கர் நிலம் 1965-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை விவசாயிகள் ஒன்று திரண்டனர். அவர்கள் வானூர் தாலுகா அலுவலகம் முன்புபோராட்டம் செய்தனர். அப்போது நிலத்தை மீட்டுதரகோரி விவசாயிகள் கோஷம் போட்டனர்.

    அதன்பின்பு தாசில்தார் (பொறுப்பு)பிரபு வெங்கடேசிடம் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

    வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உண்டு என்றாலும், கால வரையின்றி போக்குவரத்தை மறிக்க முடியாது என நீதிபதிகள் கூறியிருந்தனர்.
    புதுடெல்லி:

    மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து வரும் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் சுமார் ஓராண்டை எட்டி விட்டது.

    பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் போன்ற இடங்களை ஆக்கிரமித்துள்ளதால், அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த போராட்டக்களங்களை சுற்றி போலீசார் வேலி அமைத்து இருந்தனர். இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

    இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட்டு இந்த இடையூறுக்கு சமீபத்தில் அதிருப்தி தெரிவித்தது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உண்டு என்றாலும், கால வரையின்றி போக்குவரத்தை மறிக்க முடியாது என நீதிபதிகள் கூறியிருந்தனர்.

    இதைத்தொடர்ந்து திக்ரி, காசிப்பூர் எல்லைகளில் போடப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை போலீசார் அகற்றியுள்ளனர். இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட வேலிகள் மற்றும் கான்கிரீட் கட்டைகள் என அங்கே வைக்கப்பட்டிருந்த வேலிகள் அனைத்தையும் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றினர்.

    இதனால் அங்கு வாகன போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. அங்கு பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது. டெல்லி போலீசாருடன் இணைந்து, துணை ராணுவமும் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    மத்திய அரசு

    இவ்வாறு டெல்லி எல்லைகளில் தடுப்பு வேலிகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கூடாது என விவசாயிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு அவர்கள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர்.

    இது குறித்து விவசாய அமைப்பான பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ராகேஷ் திகாயத் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி நடந்தால், நாடு முழுவதும் அரசு அலுவலகங்களை ஆக்கிரமித்து அவற்றை தானிய விற்பனைக்கூடங்களாக (மண்டி) மாற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.

    இதன் மூலம் விவசாயிகள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருப்பதை மிண்டும் உறுதி செய்துள்ளனர்.

    குமாரபாளையம் அருகே உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 7வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குமாரபாளையம்:

    மத்திய அரசின் சார்பில் பவர்கிரிட் நிறுவனம் விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு பதிலாக சாலை ஓரங்களில் புதை வட கம்பிகளை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு உயர் மின் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு வருட வாடகையும் வழங்கிட வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று 6-வது நாளாக நடைபெற்றது.

    கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் தொடங்கி உள்ள இப்போராட்டத்தில் ஈசன், முனுசாமி, குணசேகரன், தங்கவேல், எம்.சண்முகம், சுரேஷ், செல்வராஜ், ஏ.சண்முகம், சின்னதுரை ஆசிய 10 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    போராட்டத்திற்கு ஆதரவாக பெண்கள் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைகளில் கருப்புக்கொடி ஏந்தியபடி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அவரவர் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 7-வது நாளாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.

    உயர்மின் கோபுர மின் கம்பிகள் கீழே, எந்தவித மின் இணைப்பும் இன்றி மின் காந்த அலைகளால் டியூப் லைட் எரிந்ததை விவசாயிகள் நிரூபித்தனர்.

    இது குறித்து விவசாய சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ஈசன் கூறியதாவது:-

    உயர்மின் கோபுரம் வழியாக மின் கம்பிகள் செல்லும் இடங்களில் அருகில் இருக்கும் மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. புற்று நோய் உள்ளிட்ட 16 வகை நோய்கள் உண்டாகின்றன என உலக சுகாதார அமைப்புகள் கூறி உள்ளன.

    இதை தமிழக அரசு மறுத்து வருகிறது. இதை பொய்ப்பிக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை உயர்மின் கோபுரம் வழியாக 400 கே.வி. மின்சார உயர் மின் அழுத்த கம்பிகள் செல்லும் இடத்தில் கம்பிகள் கீழே டியூப் லைட்டுகள் எவ்வித மின் இணைப்பும் இன்றி எரிவதையும், உடலில் டெஸ்டர் வைத்தால் அதுவும் எரிவதை நிரூபித்து காட்டினோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூர் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று 7-வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.
    குமாரபாளையம்:

    மத்திய அரசின் சார்பில் பவர்கிரிட் நிறுவனம் விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதற்கு பதிலாக சாலை ஓரங்களில் புதை வட கம்பிகளை பதிக்கும் திட்டத்தை செயல்படுத்திட வலியுறுத்தியும், ஏற்கனவே உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பிற்கேற்ப முறையான இழப்பீடு உயர் மின் கோபுரங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு வருட வாடகையும் வழங்கிட வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    குமாரபாளையம் அருகே உள்ள படைவீடு கவுண்டனூர் பகுதியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான தொடர் போராட்டம் நேற்று 6-வது நாளாக நடைபெற்றது.

    கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமையில் தொடங்கி உள்ள இப்போராட்டத்தில் ஈசன், முனுசாமி, குணசேகரன், தங்கவேல், எம்.சண்முகம், சுரேஷ், செல்வராஜ், ஏ.சண்முகம், சின்னதுரை ஆசிய 10 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    போராட்டத்திற்கு ஆதரவாக பெண்கள் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைகளில் கருப்புக் கொடி ஏந்தியபடி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அவரவர் விவசாய நிலங்கள், கிணறுகள், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 7-வது நாளாக இந்த போராட்டம் நீடித்து வருகிறது.

    உயர்மின் கோபுர மின் கம்பிகள் கீழே, எந்தவித மின் இணைப்பும் இன்றி மின் காந்த அலைகளால் டியூப் லைட் எரிந்ததை விவசாயிகள் நிரூபித்தனர்.

    இது குறித்து விவசாய சங்க கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் ஈசன் கூறியதாவது:-

    உயர்மின் கோபுரம் வழியாக மின் கம்பிகள் செல்லும் இடங்களில் அருகில் இருக்கும் மனிதர்கள், கால்நடைகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. புற்றுநோய் உள்ளிட்ட 16 வகை நோய்கள் உண்டாகின்றன என உலக சுகாதார அமைப்புகள் கூறி உள்ளன.

    இதை தமிழக அரசு மறுத்து வருகிறது. இதை பொய்ப்பிக்கும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை உயர்மின் கோபுரம் வழியாக 400 கே.வி. மின்சார உயர்மின் அழுத்த கம்பிகள் செல்லும் இடத்தில் கம்பிகள் கீழே டியூப் லைட்டுகள் எவ்வித மின் இணைப்பும் இன்றி எரிவதையும், உடலில் டெஸ்டர் வைத்தால் அதுவும் எரிவதை நிரூபித்து காட்டினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி தஞ்சையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் படுத்து உருண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaStrom
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிககள் கலந்து கொண்டனர்.

    அப்போது தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் கலந்து கொண்டு பேசினார். இதில் அவர் பேசும் போது கூறியதாவது:-

    கஜா புயலால் டெல்டா விவசாயிகளின் நிலங்கள், மற்றும் வீடுகள் சேதமானது. இதில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அதிகாரிகள் பாரபட்சமக நடந்து வருகிறார்கள்.

    இதுவரை புயல் நிவாரணம் பெறாத விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் கக்கரை சுகுமா ரன் மற்றும் விவசாயிகள் சிலர் திடீரென கலெக்டர் முன்பு தரையில் படுத்து உருண்டு, கோரிக்கை வலியுறுத்தி கோ‌ஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதை பார்த்த கலெக்டர் அண்ணாதுரை கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுபோல் நூதன போராட்டம் என்ற பெயரில் ஈடுபடக்கூடாது. விளம்பரத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவரை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர். #GajaStrom
    விருத்தாசலத்தில் கரும்பு நிலுவை தொகை கேட்டு மண்டை ஓடு மற்றும் மனித எலும்புகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாச்சலம் பாலக்கரையில் கரும்புக்கான நிலுவை தொகை வழங்க கோருதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 -ந் தேதியிலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் விருத்தாசலம் பாலக்கரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விருத்தாச்சலம் சப்கலெக்டர் பிரசாந்த், தாசில்தார் கவியரசு ஆகியோர் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் விவசாயிகள் போராட்டத்தை தொடருவோம் என்றனர். அதன்படி இன்று காலை விவசாயிகள் மண்டையோடு மற்றும் மனித எலும்புகளையும் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தனியரசு தலைமை தாங்கினார்.

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-

    உலகம் முழுவதும் பதவி உயர்வு கேட்டும் ஊதிய உயர்வு கேட்டும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் நாங்கள் இருபத்தி மூன்று மாதங்களுக்கு முன்பு எங்களுடைய கரும்புகளை வெட்டி சித்தூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பினோம். ஆனால் அந்த கரும்பிற்கான பணத்தை கேட்டு போராட வேண்டிய ஒரு அவல நிலையில் இன்று போராடி வருகிறோம். ஆனால் அந்த பணத்தை சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகம் தர மறுக்கிறது.

    தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்து எங்களுக்கு தர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விருத்தாசலத்தில் கரும்பு நிலுவைத் தொகை வழங்கக்கோரி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பாம்பு-எலி தின்னும் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும், அந்த தொகையை வட்டியுடன் சேர்த்து பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சப்கலெக்டர், தாசில்தார் மற்ற அதிகாரிகள், போலீசாரும் யாரும் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் விடிய, விடிய பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கேயே சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கினார்கள்.

    நேற்று விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பட்டை நாமம் போட்டுக்கொண்டு காதில் பூ வைத்துக்கொண்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அடுத்தகட்டமாக பாம்புக் கறியை தின்னும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று 3-வது நாளாக பாம்பு, எலி கறி தின்னும் போராட்டம் நடந்தது. விவசாயி அண்ணாதுரை தலைமை தாங்கினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மாநில செயலாளர் சக்திவேல், குமரேசன், ராஜேந்திரன், விஜயன், நாகராஜ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் வாயில் பாம்பு மற்றும் எலிகளை வைத்து பச்சையாக உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். #tamilnews
    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்காததை கண்டித்து நாகையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaStorm
    நாகப்பட்டினம்:

    நாகையில் கடந்த 22-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்ட மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தர மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று காலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட சங்கத்தை சேர்ந்தவர்கள் நாகை - நாகூர் மெயின் ரோட்டில் சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணை தலைவர் அமிர்தம், அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நாகை மாலி, நகர செயலாளர் பெரியசாமி உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தில் கஜா புயலால் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு ரூ. 50 ஆயிரமும், பகுதியாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 25 ஆயிரமும், அனைத்து வீடுகள், நிலங்கள், பயிர்களுக்கு முழுவதுமாக இழப்பீடு வழங்கவேண்டும். கஜா புயல் பாதிப்புகளை கணக்கெடுக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    இந்த காத்திருப்பு போராட்டத்தின் காரணமாக நாகை - நாகூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் கிழக்கு கடற்கரை சாலை வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. #GajaStorm
    வாழப்பாடியில் உயர் மின்னழுத்த கோபுர அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புல் சாப்பிட்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வாழப்பாடி:

    விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சாலையோரத்தில் புதைவட முறையில் கேபிள் பதித்து மின்சாரத்தை கொண்டு செல்ல வலியுறுத்தியும், கடந்த 17-ந்தேதி முதல், விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    10-வது நாளாக இன்று கால்நடைகளை போல மண்டியிட்டு புல் தின்னும் நூதன போராட்டத்தில் விவசாயிகள் ஈடுப்பட்டனர். விவசாயிகள் சங்க கூட்டியக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி தலைமையில், கால்நடைகளை போல தரையில் மண்டியிட்டு, கால்நடைகளுடன் சோளத்தட்டை புல் தின்னும் நூதன போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.

    பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தியும், விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசி பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இதுவரை அரசு முன்வரவில்லை. உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை கைவிட்டு, புதைவட முறையில் சாலையோரத்தில் கேபிள் பதித்து மின்சாரத்தை கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்துவதாக தமிழக அரசு அறிவிக்கும் வரை போராட்டம் ஓயப்போவதில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினார். #tamilnews
    எழும்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகளுடன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். #ayyakannu #FarmerStruggle #KamalHassan

    சென்னை:

    தமிழக விவசாயிகளில் ஒரு பிரிவினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தென் இந்திய விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தால் டெல்லி போலீசார் திணறிப் போனார்கள். பல நாட்களாக நீடித்த இந்த போராட்டம் பின்னர் முடிவுக்கு வந்தது.

    இந்தநிலையில் அய்யாக்கண்ணு தலைமையிலான போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாய அமைப்புகளும் பங்கேற்றன.

    டெல்லியில் போராட்டத்தை முடித்துக் கொண்ட விவசாயிகள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் இன்று காலை சென்னை திரும்பினார்கள். காலை 7.30 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு வந்த அவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு சென்றனர்.

    பின்னர் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட் பாரத்தில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     


    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறி இந்த போராட்டம் நடந்தது. ஆண்கள், பெண்கள் என சுமார் 200 பேர் இதில் பங்கேற்றனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் 2 பேர் மண்டை ஓடுகளை கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர். போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். முதல்-அமைச்சரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே போராட்டத்தை கைவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். இருப்பினும் விவசாயிகள் அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.

     


    விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கமலை வரவேற்று போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். விவசாயிகளிடம் போராட்டம் குறித்து கமல் கேட்டறிந்தார்.

    பின்னர் விவசாயிக்ள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    நீங்கள் கேட்டிருக்கும் கோரிக்கைகள் நியாயமனது தான் அரசால் நிறைவேற்ற முடிந்ததுதான். நீங்கள் அனைவரும் இதேபோல் ஒற்றுமையோடு இருக்க வேண்டும். இந்த ஒற்றுமையால் தான் டெல்லியில் இவ்வளவு கூட்டத்தை கூட்ட முடிந்தது.

    உங்கள் மொழி விவசாயம். எங்களால் முடிந்தவரை உங்களோடு தோள் கொடுத்து உங்கள் கோரிக்கைகளுக்காக அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.

    கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதை தவிர வழியே இல்லை. புயலும், வெள்ளமும் மட்டுமே தேசிய பேரிடர் அல்ல. பஞ்சமும் தேசிய பேரிடர்தான்.

     


    நாங்களும் உங்கள் குடும்பம்தான். உங்கள் தொழில் எங்களுக்கு தெரியாது. ஆனால் உங்கள் கையால் வாங்கி சாப்பிடுகிறோம். அதற்கு மரியாதை செலுத்தத்தான் இங்கு வந்தேன். அரசு விவசாயிகளின் நிலைமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இப்போது கெஞ்சி கேட்கிறோம். எப்போதும் இப்படியே நிலைமை இருக்காது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகள் நாடு தழுவிய அளவில் விவசாய கடன்களை ரத்து செய்வது, விளைபொருட்களுக்கு உரிய விலை நிர்ணயிப்பது, உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அறவழி போராட்டத்தை நடத்துகிறார்கள். அவர்களுக்கு எங்கள் ஒத்துழைப்பு உண்டு.

    நேற்று வரை கஜா புயல் பாதித்த பகுதிகளில் தான் இருந்தேன். எங்கள் குரல் எதிர்க் கட்சிகளின் குரல் அல்ல. மக்களின் குரலாக பார்க்க வேண்டும். 15 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் பல கிராமங்களில் மின்சாரம் இல்லை. குடி தண்ணீர் வசதி இல்லை. மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.

    இன்னும் ஒரு கிராம நிர்வாக அதிகாரிகள் கூட போய் பார்க்கவில்லை. நாங்கள் போன பல இடங்களில் மக்கள் ஆத்திரத்தில் கண்ணீர் அஞ்சலி என்று வைத்திருந்ததை பார்த்தோம்.

    நாங்கள் அரசை விமர்சிக்க வில்லை. பணிகளை துரிதப்படுத்த வேண்டியது எங்கள் கடமை. அதைத்தான் சொல்கிறோம். இதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். சேத விவரங்களை கூட இருந்த இடத்தில் இருந்தே சேகரித்ததாகத்தான் நான் கருதுகிறேன். மத்திய அரசு இடைக்காக நிவாரணம் வழங்கி இருப்பதற்கு நன்றி.

    விவசாயிகள் டெல்லியில் போராடிய விதம் தவறு என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறி இருப்பது சரியல்ல. விவசாயிகள் பசியோடு இருக்கிறார்கள். பசிக்காக போராடுபவர்களும் இப்படித்தான் போராட வேண்டும், அப்படித்தான் போராட வேண்டும் என்று சொல்ல முடியாது.

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் அவலங்களை நேரில் பார்த்து வந்தவன் நான். அங்குள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பரிசீலனையில் இருப்பதாக கூறுகிறார்கள். அதற்கான கால அவகாசம் இல்லை. உடனே தள்ளுபடி செய்வதுதான் நல்லது.

    பாதிக்கப்பட்டுள்ள பகுதி முழுவதுமாக மீண்டு வருவதற்கு இன்னும் 7 ஆண்டுகள் ஆகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயிகள் எழும்பூரில் இருந்து இன்று மதியம் செல்லக்கூடிய வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்களில் செல்வதற்கு முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் விவசாயிகள் தொடர்ந்து சில மணிநேரம் எழும்பூர் ரெயில் நிலையத்திலேயே தங்கி இருக்க வேண்டி இருந்தது. அதுவரை போலீஸ் பாதுகாப்பு தேவைப்பட்டதால் ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் பேசி வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து அனைத்து விவசாயிகளையும் ஒரே ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர். #ayyakannu #FarmerStruggle #KamalHassan

    விவசாயிகள் போராட்டம் தொடரும் என்று எழும்பூர் ரெயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #ayyakannu #FarmerStruggle #Delhifarmerprotest


    எழும்பூர் ரெயில் நிலையத்தில் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாங்கள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று டெல்லியில் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தினோம். டெல்லியில் நிர்வாணமாக ஓடியும் போராட்டம் நடத்தினோம். ஆனால் அந்த போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்கள். நாங்கள் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தியதற்கு காரணம் இருக்கிறது.

    விவசாய கடன்களை கட்ட முடியாமல் திணறிய விவசாயிகளின் வீடுகளுக்கு வங்கி அதிகாரிகள் சென்று நெருக்கடி கொடுத்தனர். வங்கி கடன்களை கட்டாத விவசாயிகளின் வீட்டு பெண்களை மானபங்கம் செய்ய வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் பேசினார்கள். அதனால்தான் நிர்வாணமாக ஓடி போராட்டம் நடத்தினோம்.

    நாங்கள் போராட்டம் நடத்தி ஒரு வருடம் ஆகி விட்டது. ஆனால் எங்களின் போராட்டத்துக்கு பிரதமர் மோடி செவி சாய்க்க வில்லை.


    1 லட்சம் கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி மட்டுமே மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டு உள்ளது. ஆனால் மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக ரூ.354 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது. இது ஒரு மூலைக்கும் போதாது. விவசாயிகள் மேலும் மேலும் தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    புயலால் சரிந்த தென்னை மரங்களுக்கு குறைவான இழப்பீடே அறிவிக்கப்பட்டுள்ளது. அதை உயர்த்தி வழங்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும். எல்லாவித போராட்டங்களையும் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ayyakannu #FarmerStruggle #Delhifarmerprotest

    ×