search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sugar cane balance"

    விருத்தாசலத்தில் கரும்பு நிலுவைத் தொகை வழங்கக்கோரி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பாம்பு-எலி தின்னும் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும், அந்த தொகையை வட்டியுடன் சேர்த்து பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சப்கலெக்டர், தாசில்தார் மற்ற அதிகாரிகள், போலீசாரும் யாரும் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் விடிய, விடிய பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கேயே சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கினார்கள்.

    நேற்று விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பட்டை நாமம் போட்டுக்கொண்டு காதில் பூ வைத்துக்கொண்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அடுத்தகட்டமாக பாம்புக் கறியை தின்னும் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

    அதன்படி இன்று 3-வது நாளாக பாம்பு, எலி கறி தின்னும் போராட்டம் நடந்தது. விவசாயி அண்ணாதுரை தலைமை தாங்கினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, மாநில செயலாளர் சக்திவேல், குமரேசன், ராஜேந்திரன், விஜயன், நாகராஜ், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் வாயில் பாம்பு மற்றும் எலிகளை வைத்து பச்சையாக உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். #tamilnews
    விருத்தாசலத்தில் கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தரக் கோரி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் பட்டை நாமம் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரைய தொகையை சித்தூர் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடம் இருந்து மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும், அந்த தொகையை வட்டியுடன் சேர்த்து பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் காலையில் இருந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த போராட்டத்தில் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சப்கலெக்டர், தாசில்தார் மற்ற அதிகாரிகள், போலீசாரும் யாரும் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் விவசாயிகள் விடிய, விடிய பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கேயே சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கியனூரை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி (வயது 65) என்பவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்த விவசாயிகள் விரைந்து வந்து கோவிந்தசாமியை மீட்டு சிகிச்சைக்காக அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விவசாயி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இன்று விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் பட்டை நாமம் போட்டுக்கொண்டு காதில் பூ வைத்துக்கொண்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்திற்கு மாதவன், வேல்முருகன், ராஜா, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த போராட்டத்தின் போது சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகள் கரும்பு ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பி பல மாதங்கள் ஆகி விட்டது. இருபத்தி மூன்று மாதங்கள் ஆகியும் இந்த கரும்பு ஆலைகள் விவசாயிகளுக்கு உரிய பணத்தை தர மறுக்கிறது. கரும்பு பணத்தை மாவட்ட கலெக்டர் தான் வாங்கித் தரவேண்டும். ஆனால் அவரும் கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசும் கண்டு கொள்வதில்லை.

    இதனை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடத்தினோம். மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு பணத்தை வாங்கித் தருவார்கள் என நம்பினோம். ஆனால் அவர்கள் வாங்கித் தரவில்லை ஆலை நிர்வாகம் எங்களுக்கு பணம் தராமல் பட்டை நாமம் போட்டு விட்டது, அதுமட்டுமில்லாமல் விவசாயிகளிடம் இருந்து ஆலை நிர்வாகம் கையெழுத்து வாங்கி 400 கோடியை வாங்கி விவசாயிகள் தலையில் கட்டி விட்டது. ஆனால் வங்கி கடனைக் கேட்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் விட்டுள்ளது.

    இது எங்கள் காதிலும் பூ வைத்து விட்டது போலாகி விட்டது. அதனால்தான் பட்டை நாமம் போட்டு காதில் பூ வைத்துக் கொண்டு போராட்டத்தை தொடங்கி உள்ளோம், இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் இனிமேல் நாங்கள் சாப்பிட வழியில்லை. இதனால் நாளை நாங்கள் பாம்புக் கறியை தின்னும் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழக அரசு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். எங்களை பாம்பு கறியை திண்ண வைத்து விடாதீர்கள். விவசாயிகளுக்கு கரும்பு பணத்தை பெற்றுத் தரும் வரை எங்களது போராட்டம் பல்வேறு வடிவில் தொடரும்.
    ×