search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீடிப்பு"

    • குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வழக்க மாக 196.3 மில்லி மீட்டர் மழை பெய்யும்.
    • இந்த ஆண்டு வழக்கத்தை விட 2 மடங்கு அதிகம் மழை பதிவாகியுள்ளது.

    நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் வழக்க மாக 196.3 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட 2 மடங்கு அதிகம் மழை பதிவாகியுள்ளது.

    கடந்த 25 நாட்களில் 490.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பாசன குளங்கள் அணை கள் நிரம்பி வழிந்து வரு கிறது. 1500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டி நிரம்பியுள்ள தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. களியல் பகுதியில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. அங்கு 38.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப் பாண்டி, குழித்துறை, சுரு ளோடு, தக்கலை, அடையா மடை மற்றும் அதன் புற நகர் பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் மழை நீடித்து வருவதால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    மாம்பழத்துறையாறு, முக்கடல், சிற்றாறு அணை கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளும் நிரம்பும் தருவாயில் உள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 71.15 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 396 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. அணை நீர்மட்டம் 71 அடி எட்டியதையடுத்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    பரளியாறு, அரு விக்கரை, மூவாற்றுமுகம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று காலை 41.42 அடி யாக உள்ளது. அணைக்கு 498 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 220 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    அணை நீர்மட்டம் 42 அடியை எட்டும்போது கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். இன்று மாலை அல்லது நாளைக்குள் அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் அணை யின் நீர்மட்டத்தை கண் காணித்து வருகிறார்கள்.

    அணை நீர்மட்டம் 42 அடியை எட்டும்போது கோதையாறு திற்பரப்பு மற்றும் மூவாற்றுமுகம் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.


    • மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவும் மழை பெய்தது.

    குறிப்பாக சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாவட்டத்தில் பெய்து வரும் ெதாடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 3.6, கரியகோவில் 2, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 13.60 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    தேங்கியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக மங்களபுரத்தில் 15, பரமத்திவேலூர் 15, கலெக்டர் அலுவலக பகுதி 15 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 45 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • குமரி மாவட்டம் முழு வதும் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    நாகர்கோவில்,செப்.29-

    குமரி மாவட்டம் முழு வதும் மீண்டும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் விட்டு விட்டு பெய்து வந்த மழை நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    அதன்பிறகு மழை பெய்தது. நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் பொதுமக்கள் குடை பிடித்தவாறு சென்றனர். தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. பூதப்பாண்டி, கன்னிமார், கொட்டாரம், குழித்துறை, தக்கலை, குளச்சல், இரணியல், கோழிப்போர்விளை, குருந்தன்கோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணைப் பகுதியிலும் மழை பெய்து வருகிறது. சிற்றாறு 1-ல் அதிகபட்சமாக 30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. திற்பரப்பு அருவி பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டுகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக சானல்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பாசன குளங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ள ளவை எட்டியுள்ளது. பாசன குளங்களிலும், அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதை யடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 21.75 அடியாக உள்ளது. அணைக்கு 596 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 586 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 42.30 அடியாக உள்ளது.

    அணைக்கு 237 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வந்த பிறகும் முக்கடல் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து மைனஸ் அடியாகவே இருந்து வருகிறது.

    அணை நீர்மட்டம் இன்று காலை மைனஸ் 16.20 அடியாக இருந்தது. நாகர்கோவில் நகர மக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க புத்தன் அணை தண்ணீரை சப்ளை செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் பெய்த மழை மில்லி மீட்ட ரில் வருமாறு:-பேச்சிப் பாறை 16.8, பெருஞ்சாணி 11.2, சிற்றார் 1-30, சிற்றார் 2-10.4, பூதப்பாண்டி 13.4, களியல் 12, கன்னிமார் 9.4, கொட்டாரம் 11.6, குழித்துறை 15.6, மயிலாடி 16.2, நாகர்கோவில் 8.2, புத்தன் அணை 9, சுருளோடு 17.2, தக்கலை 19, குளச்சல் 16, இரணியல் 12.4, பாலமோர் 23.4, மாம்பழத்துறையாறு 24, திற்பரப்பு 21.5, கோழிப்போர்விளை 15.2, அடையாமடை 10.2, குருந்தன்கோடு 20, முள்ளங்கினாவிளை 12.8, ஆணைக்கிடங்கு 21.4.

    • பெரம்பலூரில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த காலக்கெடு நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது
    • மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் அறிவிப்பு

    பெரம்பலூர்,

    அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அக் 20 -2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி 29-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்ட மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

    • கன்னியாகுமரியில் 5-வது நாளாக படகு போக்குவரத்து பாதிப்பு
    • 4 நாட்களாக கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகுஅடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்தநிலையில் பவுர்ண மியையொட்டி கடந்த 4 நாட்களாக கன்னியா குமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இன்று 5-வது நாளாக இந்த நிலை நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்கக்கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங் கடல் மற்றும் அர பிக்கடல் பகுதியில் கடல் கொந்த ளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப் பட்டது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயி லில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.

    இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவே கானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்த னர். கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து இன்று 5-வது நாளாக பாதிக்கப்பட்டது.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற் கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின.

    இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் நிறுத்தம்
    • கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, கடல் நீர்மட்டம் உயர்வது, கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் பவுர்ணமியையொட்டி கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்படுகிறது. இன்னொரு புறம் கடல் சீற்றமாகவும் கொந்தளிப் பாகவும் காணப்படுகிறது. இன்று 4-வது நாளாக இந்த நிலை நீடிக்கிறது.

    இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்து உள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற் றும் அரபிக்கடல்பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    • சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விளைச்சல் குறைவால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.
    • சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 120 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் மற்றும் பல காய்கறி மார்க்கெட்கள் உள்ளன. இங்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விற்பனைக்கு காய்கறிகள் அதிக அளவில் கொண்டு வரப்படுகின்றன. இந்த காய்கறிகளை சேலம் மற்றும் அண்டை மாவட்டங் களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

    தக்காளி

    ரூ.120 ஆக நீடிப்பு

    சமீப காலமாக சேலம் மார்க்கெட்டுகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு விளைச்சல் குறைவால் தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்துள்ளது.

    இதனால் அதன் விலை படிப்படியாக உயர்ந்தது. தொடர்ந்து அதே விலை நீடித்து வருகிறது. சேலம் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 110 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்களில் 120 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் 70 முதல் 90 ரூபாய் வரையும் விற்பனையாகிறது .

    பீன்ஸ் ரூ. 105

    உழவர் சந்தைகளில் மற்ற காய்கறிகளின் விலை விவரம் வருமாறு, உருளை கிழங்கு 34, பெரிய வெங்காயம் 25-30, பச்சை மிளகாய் 70-75, கத்திரி 30-36, வெண்டைக்காய் 30-32, முருங்கைக்காய் 30-40, பீர்க்கங்காய் 40-44, சுரக்காய் 20-25, புடலங்காய் 24-26, பாகற்காய் 50-55, தேங்காய் 20-28, முள்ளங்கி 18-20, பீன்ஸ் 95-105, அவரை 50-55, கேரட் 56-62, மாங்காய் 25-30, வாழைப்பழம் 30-55, கீரைகள் 20-24, பப்பாளி 20-24, கொய்யா 30-45, மாம்பழம் 40-60, ஆப்பிள் 180, சாத்துக்குடி 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.   

    • தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் தீவிரமடைந்துள்ளது.
    • இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.

    சேலம்:

    தென்மேற்கு பருவமழை தொடங்கி கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. காலை நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தாலும், மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ந்த காற்று வீசுவதுடன், மழை பெய்து வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் நேற்று மாலையில் மேட்டூர், காடையம்பட்டி, ஏற்காடு, பெத்தநாயக்கன்பாளையம், ஓமலூர், ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

    இதில் மேட்டூரில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாநகரத்தில் கொண்டலாம்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மா பேட்டை, புதிய பஸ் நிலை யம், 5 ரோடு பகுதிகளில் மழை பெய்தது. இதில் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு வருமாறு:- மேட்டூர்-34, காடையாம்பட்டி-9, சேலம் - 8.7, பெத்தநாயக்கன் பாளையம் - 5, ஓமலூர்- 4.6, ஆத்தூர்- 4 ஏற்காடு - 4, கெங்கவல்லி - 2, எடப்பாடி - 1, சங்ககிரி - 12 என சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 73.30 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    இன்று கனமழை பெய்யும்

    இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடல் பகுதி களில் மேலடுக்கில் வளி மண்டல சுழற்சி நிலவுவதால் தமிழகம் முழுவதும் மேலும் மழை தீவிரமடைந்துள்ளது.

    இதையொட்டி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்க

    செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது.
    • திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை கொட்டி தீர்த்தது. கொட்டாரம், சுசீந்திரம், தக்கலை, இரணியல், குளச்சல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது.

    விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவி வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியிலும் சாரல் மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 29.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வந்த நிலையில் தற்பொழுது உயர தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களில் 5¾ அடி உயர்ந்த நிலையில் நேற்று மேலும் 2¾ அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 25.95 அடியாக உள்ளது. அணைக்கு 301 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 35.71 அடியாக உள்ளது.

    அணைக்கு 826 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-பேச்சிப்பாறை 6.6, பெருஞ்சாணி 14.6, சிற்றாறு 1-12, சிற்றார் 2-16.8, களியல் 6, கன்னிமார் 3.6, கொட்டாரம் 1.2, குழித்துறை 4, மயிலாடி 5.4, நாகர்கோவில் 2.2, சுருளோடு 9.6, தக்கலை 5.3, குளச்சல் 4.6, இரணியல் 6.2, திற்பரப்பு 14.2, கோழிப்போர்விளை 10.2, அடையாமடை 2, முள்ளங்கி னாவிளை 9.6, ஆணைக்கிடங்கு 4.

    தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குலசேகரம் தடிக்காரன்கோணம், கீரிப்பாறை பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்க ளில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு நேற்றிலிருந்து லேசான சாரல் மழை பெய்து வந்தது.
    • மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்..

    கடலூர்:

    வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு நேற்றிலிருந்து லேசான சாரல் மழை பெய்து வந்தது    இதனை அடுத்து நேற்று மாலை நேரத்தில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசி இரவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை வரை நீடித்தது. இதனால் தெருக்களில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியது.

    இந்த மழை கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், முதுநகர், செம்மண்டலம், பாலூர் நடுவீரப்பட்டு, மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடலூர் துறைமுக பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை நீட்டித்து மீன்வளத்துறை அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கடலோரப் பகுதி பொது மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தெரிவிக்க ப்பட்டுள்ளது.   மேலும் கடல் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் துறைமுகப்பகுதி மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்களை 31-ம் தேதியிலிருந்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் மீறி சென்றால் அவர்களுக்கு வழங்க ப்படும் மானியமும் ரத்து செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகா ரிகள் தெரிவித்தனர். தற்போது கடலூர் துறைமுக பகுதியில் கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறது.

    • திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    • அருவியில் ஆனந்தமாக நீராடினர்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நகர் பகுதிகளில் சாரல் மழையும் புறநகர் பகுதிகளில் பரவலான மழையும் பெய்தது.

    பேச்சிப்பாறை, பெரு ஞ்சாணி அணைப்பகுதி களில் நீடித்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து கணிசமான அளவில் உள்ளது. கொட்டாரத்தில் 2.5 மில்லி மீட்டரும், பூதப்பாண்டியில் 1.4 மில்லி மீட்டரும், பெருஞ்சாணி, மயிலாடி பகுதிகளில் 1.2 மில்லி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை அணைக்கு 748 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 285 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து முறையே 585, 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர் மழை மற்றும் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு போன்றவற்றால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த நீராடி வருகின்றனர். விடுமுறை நாளான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராள மானோர் திற்பரப்பு வந்திருந்தனர். அவர்கள் அருவியிலும், நீச்சல் குளத்தி லும் குடும்பத்தினருடன் நீராடி மகிழந்தனர்.

    • கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
    • சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் கடந்த 2000-ம் ஆண்டு 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை கடலின் நடுவே நிறுவப்பட்டுள்ளதால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி உப்புக் காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சிலையில் உள்ள உப்புத்தன்மை நீக்கப்பட்டு பின்னர் ரசாயன கலவை பூசப்படும்.

    இதன் மூலம் சிலை உப்புக் காற்றினால் சிலை சேதமடையாமல் நீண்ட காலம் நீடித்து நிற்கும். அதன்படி கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. சிலையை சுற்றிலும் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினமும் இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சிலையில் உள்ள உப்புத் தன்மையை அகற்றுவதற்காக தற்போது சிலையை சுற்றிலும் காகிதகூழ் ஓட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிலையின் மீது ஒட்டப்பட்ட காகிதத்தை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி உப்பு படிந்திருக்கும் அளவு கண்டறியப்படும். சிலையில் ஒட்டப்படும் காகிதகூழ் பி.எச். வேல்யூ 7 என்ற அளவில் இருந்தால், அதன் பின்னர் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை சிலையின் மீது பூசப்படும்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக சிலையின் மீது ஒட்டப்பட்டு இருந்த காகிதகூழ் மழையில் நனைந்து தண்ணீரில் கரைந்து சேதமடைந்து விட்டன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மழை குறைந்த பின்னர் மீண்டும் காகிதகூழ் ஒட்டப்பட்டு அதன் பின்னர்தான் பராமரிப்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனால் கடந்த 6-ந்தேதி முடிய வேண்டிய சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர். இதற்கிடையே கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியுள்ளதால் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட மேலும் ஒரு மாதம் தாமதமாகலாம் என்று தெரிய வருகிறது.

    ×