search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு
    X

    திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை படத்தில் காணலாம்

    குமரியில் மழை நீடிப்பு

    • மாம்பழத்துறையில் 19.6 மி.மீ. பதிவு
    • பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வருகை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    கடந்த இரண்டு நாட் களாக மழை சற்று குறைந்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பேச்சிபாறை அணை பகுதியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் நேற்று பேச்சிப்பாறை, சிற்றார், கன்னிமார், மாம்பழத்து றையாறு, ஆணைக்கிடங்கு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. மாம்பழத்து றையாறில் அதிகபட்சமாக 19.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிபாறை பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய எச்சரிக்கை அளவைவிட கூடுதலாக உள்ளதையடுத்து பரளி ஆறு குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் சிற்றார் -1, சிற்றார் -2 அணைகளின் நீர்மட்டமும் 12 அடியை கடந்துள்ளதையடுத்து வெள்ள அபாய எச்ச ரிக்கை தொடர்ந்து விடப் பட்டு வருகிறது.ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகி றார்கள். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் கள்.

    பேச்சிப்பாறை அணை யில் இருந்து நேற்று முதல் மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.இன்று காலையிலும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பரளியாறு, குழித்துறை ஆறு,கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் கொட்டுவதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்தும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 43.14 அடியாக உள்ளது. அணைக்கு 924 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து மதகுகள் வழியாக 327 கன அடி தண்ணீரும் உபரிநீராக 1073 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வரு கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.19 அடியாக உள்ளது. அணைக்கு 639 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யில் இருந்து 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 12.23 அடியாக வும், சிற்றார்- 2 அணை நீர்மட்டம் 12.33 அடியாக வும், பொய்கை அணை நீர்மட்டம் 16.10 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.30 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்ப டும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.40 அடியாக உள்ளது.

    Next Story
    ×