search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் மழை நீடிப்பு
    X

    கோப்பு படம் 

    குமரியில் மழை நீடிப்பு

    • திற்பரப்பில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    • அருவியில் ஆனந்தமாக நீராடினர்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நகர் பகுதிகளில் சாரல் மழையும் புறநகர் பகுதிகளில் பரவலான மழையும் பெய்தது.

    பேச்சிப்பாறை, பெரு ஞ்சாணி அணைப்பகுதி களில் நீடித்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து கணிசமான அளவில் உள்ளது. கொட்டாரத்தில் 2.5 மில்லி மீட்டரும், பூதப்பாண்டியில் 1.4 மில்லி மீட்டரும், பெருஞ்சாணி, மயிலாடி பகுதிகளில் 1.2 மில்லி மீட்டரும் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை அணைக்கு 748 கனஅடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 285 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளில் இருந்து முறையே 585, 100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    தொடர் மழை மற்றும் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு போன்றவற்றால், திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த நீராடி வருகின்றனர். விடுமுறை நாளான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராள மானோர் திற்பரப்பு வந்திருந்தனர். அவர்கள் அருவியிலும், நீச்சல் குளத்தி லும் குடும்பத்தினருடன் நீராடி மகிழந்தனர்.

    Next Story
    ×