search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ex-servicemen"

    • நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.
    • நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் தெரிவிக்கலாம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களை சார்ந்தோர்கள் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

    எனவே நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரை சார்ந்தோர்கள் தங்களுக்கு குறைகள் இருப்பின் மாவட்ட கலெக்டரால் நடத்தப்படும் இச்சிறப்பு முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு தங்களது குறைகளை இரட்டை பிரதியில் விண்ணப்பம் மூலம் தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

    • முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகின்றன.
    • முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: -

    சேலம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது, தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மை குழுக் கூட்டத்தில் தமிழக ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.

    இக் கூட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டு முதல் முன்னாள் படைவீரர் குழந்தைகளுக்கு கல்வி மேம்பாட்டு நிதியுதவியாக (கல்வியுதவி தொகை) 1 முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2,000-மும், 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.4,000-மும், 9 முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.5,000-மும், 11 முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.6,000-மும் உயர்த்தி வழங்கிட முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.
    • மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் ஈரோடு மாவட்ட முன்னாள் படை வீரர்கள் மற்றும் படை வீரர்களின் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் வழங்கினர்.

    இதில் 11 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி திருமண மானியம், கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி மானியம் என 8 முன்னாள் படை வீரர்கள் மற்றும் படை வீரர்களின் சார்ந்தோர்களுக்கு ரூ.74 ஆயிரம் மதிப்பில் மானியத்தொகைக்கான உத்தரவு ஆணைகளை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) குமரன், மாவட்ட முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் - கலெக்டர் உத்தரவுமுன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் - கலெக்டர் உத்தரவுஇயக்குநர் மணிவண்ணண் உட்பட துறை சார்ந்த அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும்
    • கோரிக்கைகளை மனுவாக இரு பிரதிகளில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தைச சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வருகிற 22-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படை வீரா்கள், படையில் பணிபுரியும் படை வீரா்கள் மற்றும் அவரைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டமானது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் 22-ந்தேதி ( திங்கட்கிழமை) பிற்பகல் 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முன்னாள் படை வீரா்கள், அவா்களைச் சாா்ந்தோா் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுவாக இரு பிரதிகளில் சமா்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மனுவினை நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சிமன்ற கூடத்தில் வருகிற 17-ந் தேதி (புதன்கிழமை) மாலை 3.30 மணிக்கு கலெக்டர் தலைைமயில் நடக்கிறது.

    இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர், படைவீரர்களை சார்ந்தோர் வருகை புரிந்து குறைகளை இரட்டைப்பிரதிகளில் மனுவினை நேரடியாக வழங்கி தீர்வு பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
    • பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் இந்த நிதிவழங்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 ஆக உள்ளது.

    இந்நிலையில், ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் ஆதரவற்ற நிலையில் தவிக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த உதவித்தொகை தற்போது ரூ.3,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பாதுகாப்புத்துறை மந்திரி முன்னாள் ராணுவ வீரர்கள் நல உதவியின் கீழ் ஆதரவற்றோர் நிதியுதவித் திட்டம் மூலம் இந்தத் தொகை வழங்கப்படும். இதன்மூலம் பல முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் பயன்பெறும் என பதிவிட்டுள்ளார்.

    • முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்தோா்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்லூரி படிப்புகளில் சோ்ந்திட சாா்ந்தோா் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
    • கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படை வீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் வாரிசுகளுக்கு கல்லூரி படிப்புகளுக்காக சாா்ந்தோா் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா் நலத் துறையின் மூலம் முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்தோா்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்லூரி படிப்புகளில் சோ்ந்திட சாா்ந்தோா் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2022-23ம் கல்வி ஆண்டில் இந்த சான்றைப் பெற கல்லூரிப் படிப்புகளுக்கான விண்ணப்பம், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சாா்ந்தோா் அடையாள அட்டை, முன்னாள் படை வீரரின் அடையாள அட்டை, படைவிலகம் சான்று ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படை வீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அதே வேளையில், நேரில் வர இயலாதவா்கள் இணையதளத்தில் மேற்கண்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

    இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு முன்னாள் படை வீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தை 0421-2971127 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×