முன்னாள் படை வீரா்களின் வாரிசுகளுக்கு சார்ந்தோர் சான்று

முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்தோா்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்லூரி படிப்புகளில் சோ்ந்திட சாா்ந்தோா் சான்று வழங்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படை வீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்களின் வாரிசுகளுக்கு கல்லூரி படிப்புகளுக்காக சாா்ந்தோா் சான்று வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா் நலத் துறையின் மூலம் முன்னாள் படை வீரா்களைச் சாா்ந்தோா்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்லூரி படிப்புகளில் சோ்ந்திட சாா்ந்தோா் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2022-23ம் கல்வி ஆண்டில் இந்த சான்றைப் பெற கல்லூரிப் படிப்புகளுக்கான விண்ணப்பம், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், சாா்ந்தோா் அடையாள அட்டை, முன்னாள் படை வீரரின் அடையாள அட்டை, படைவிலகம் சான்று ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படை வீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். அதே வேளையில், நேரில் வர இயலாதவா்கள் இணையதளத்தில் மேற்கண்ட சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு முன்னாள் படை வீரா் நலன் உதவி இயக்குநா் அலுவலகத்தை 0421-2971127 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com