search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doctors"

    • கொள்ளிடம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லாரி மோதியது.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பூதலூர்:

    திருச்சி மாவட்டம் லால்குடி தாலூகா டி.கல்விக்குடி மேலகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 19).

    இவர் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பூண்டிக்கு வந்து ஹோட்டல் ஒன்றில் உணவை பார்சல் வாங்கி கொண்டு திரும்பி சென்றார்.

    பூண்டி அருகே உள்ள கொள்ளிடம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார்.உடனடியாக அருகே இருந்தவர்கள் திருக்காட்டுபள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருக்காட்டுபள்ளி போலீசார் பிரேதத்தைப் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை அருகே தேவனாஞ்சேரி கீழத்தெ ருவை சேர்ந்தவர் மகேந்திரன்.

    இவரது மகன் தேசிகன் (வயது 26).

    கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.

    இதனால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்த உறவினர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொ ண்டு வருகின்றனர்.

    • அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்புப்பட்டை அணிந்து 3-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
    • தங்கள் கோரிக்கை கள் நிறைவேறும் வரை இதுபோல் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை வண்டியூர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண், நகர்புற சுகாதார நிலையத்தில் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். பிரச வத்திற்காக சென்றபோது பிரசவம் செய்வதில் மருத் துவ ரீதியாக பிரச்சினைகள் இருப்பதாக கூறி கடந்த 29-ந் தேதி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதனையடுத்து பிரச வத்தின் போது குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அந்த பெண் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில், மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர், அரசு ஆஸ்பத்திரியின் மகப்பேறு துறையில் அத்துமீறி தலையிட்டு மகப் பேறு துறையின் பெயரை கெடுக்கும் வண்ணம் செயல் பட்டுள்ளதாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுபோல், அவர் பல வித அதிகார மீறல்களில் ஈடுபட்டதாக கூறி, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் அறி விக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார் பில் டாக்டர்கள், மாநகராட்சி சுகாதார அலுவலரை பணி நீக்கம் செய்யக்கோரி, கருப்பு பட்டை அணிந்து போ ராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 3-வது நாளா கின்று அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை புறக்கணித்து, அரசு டாக்டர் கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். தங்கள் கோரிக்கை கள் நிறைவேறும் வரை இதுபோல் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அவர் கள் தெரிவித்தனர்.

    • கட்டியை கர்ப்பப்பையில் இருந்து அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினர்.
    • இந்த கட்டி சுஜித்ராவின் கர்ப்பப்பையில் சுமார் 20 ஆண்டுகளாக இருந்து உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி சுஜித்ரா (வயது 50). சுசித்ராவுக்கு கடந்த சில நாட்களாக வயிறு வலி இருந்து வந்தது. ஒரு கட்டத்தில் சிறுநீர் மற்றும் மலம் கழிக்க முடியாமல் அவதிப்பட்டார்.

    சம்பவத்த ன்று அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகி ச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அங்கு சுசித்ராவின் வயிறு பகுதியை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு கால்பந்தை விட 16 கிலோ எடையிலான கட்டி ஒன்று சுசித்ராவின் கர்ப்பபையில் இருப்பதை கண்டுபி டித்தனர்.

    இந்த கட்டியை அகற்ற சுசித்ராவுக்கு பல்வேறு கட்ட மருத்துவ மருத்துவ பரிசோ தனைகளும், ஆலோ சனைகளும் செய்யப்பட்டது.

    இதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியின் அறுவை சிகிச்சை நிபுணர் அமுதன் தலைமையில் உதவி நிபுணர் ராஜேஷ், மயக்கவியல் நிபுணர்கள் ஆனந்தராஜ், அருண் ஆகியோர் கொண்ட டாக்டர் குழுவினர் சுசித்ராவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அதில் சுமார் 16 கிலோ எடை கொண்ட கட்டியினை கர்ப்பப்பையில் இருந்து அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.

    பைப்ரோய்டு யூட்டரஸ் எனப்படும் இந்த கட்டி சுஜித்ராவின் கர்ப்ப பையில் 20 ஆண்டுகளாக இருந்து உள்ளது. தொப்பை தானே என்று கண்டு கொள்ளாமல் அவர் விட்டு விட்டார். சிறிது, சிறிதாக அந்த கட்டி வளர்ந்து ஒரு கட்டத்தில் சிறுநீரகத்தை அடைக்கும் தருவாயில் சென்று விட்டது.

    முடியாத பட்சத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றினோம். தற்போது நினைத்து நலமாக உள்ளார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    • திட்டச்சேரி பேரூராட்சியில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
    • திருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ஆய்வு செய்வதற்காக நாகப்பட்டினம் வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகமது ஷா நவாஸ் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் நாகப்பட்டினம் தொகுதி சார்ந்த கோரிக்கை மனுவை அளித்தார்.

    அதில் கூறியிப்பதாவது:-

    155 ஆண்டுகள் பழமையான நாகப்பட்டினம் நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும். நாகப்பட்டினம் நகராட்சியில், பாரம்பரிய நகர்மன்ற கட்டடம் பாழடைந்து உள்ளது. தொன்மையான அந்தக் கட்டடத்தை பாதுகாக்கும் வகையில் புனரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம் நகராட்சி பாரதி மார்க்கெட் மிகவும் பழுதடைந்துள்ளது.

    அதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும். நாகூர் பேருந்து நிலையம் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

    நாகப்பட்டினம் புதிய கடற்கரை மற்றும் நாகூர் சில்லடி கடற்கரையில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும்.

    நாகையில் அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். நாகையில் தமிழறிஞர் மறைமலை அடிகள் நினைவாக, கலையரங்கம் கட்ட வேண்டும்.

    நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் அவசர சிகிச்சைப் பிரிவை, நாகை மக்களின் நலன்கருதி தொடர்ந்து அங்கேயே இயங்கச் செய்ய வேண்டும்.

    நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது.

    இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.

    நாகப்பட்டினம் சூடாமணி விகாரம் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களை காட்சிப்படுத்தும் வகையில், கீழடி போல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.

    திட்டச்சேரி பேரூராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு போதிய நிதி ஆதாரம் இல்லாத நிலை உள்ளது.

    எனவே, அங்கு சிறப்பு கவனம் செலுத்தி, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தை தனி வட்டமாக (தாலுகா) அறிவிக்க வேண்டும்.

    திருச்செங்காட்டங்குடி அருள்மிகு உத்திராபதீஸ்வரர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.

    ஏனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மதுரை அரசு மருத்துவமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.
    • ஊதிய உயர்வு, பணப்பலன்களை வழங்கும் அரசாணை வெளியி டப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது.

    மதுரை

    தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், அரசு மருத்துவ மனைகள், மருத்து வக்கல்லூரிகளில் பணி யாற்றும் டாக்டர்க ளுக்கு ஊதிய உயர்வு மற்றும் பணப்பலன்களை வழங்க வேண்டி இன்று மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

    அதன்படி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத்தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    ஊதிய உயர்வு, பணப்பலன்களை வழங்கும் அரசாணை வெளியி டப்பட்டு 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதுவரை அதனை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. இதை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். டாக்டர்களின் இந்த போராட்டம் காரணமாக மதுரை அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    • ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
    • இரவு நேரத்தில் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் ஜெயபால்சங்கர், துணை த்தலைவர் காசிஅறி வழகன்,துணைச் செயலா ளர் முருகானந்தம் ஆகியோர் பல்நிகழ்ச்சி களில் பங்கேற்க நாகை வந்த மக்கள் நல்வாழ்வு த்துறை அமை ச்சர் மா.சுப்பி ரமணியன் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிப்பதாவது:-திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சே ரி,ஏனங்குடி, கணபதிபுரம், திருக்கண்ணபுரம், திருப்ப த்தாங்குடி உள்ளிட்ட ஊர்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்படுகின்றன.

    இவற்றில் தற்போது எல்லா இடங்களிலும் மருத்துவர்கள் நியமிக்க ப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. இருப்பி னும் இரவு நேரத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு,தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களும், விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவர்களும் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 1 மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார் எனவும் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன.
    • மருத்துவ உள்ள புகார்கள் எது இருந்தால் உடனே பொதுமக்கள் 104க்கு தகவல் தெரிவிக்கலாம்.

     திருப்பூர்:

    தமிழகத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இங்கு சிகிச்சைக்காக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வந்து செல்கின்றனர்.மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லூரி மருத்துவம னைகளில் பணியாற்றும் ஒரு சில டாக்டர்கள் சரியான நேரத்துக்கு வராமலும் சிலர் 3 நாட்களுக்கு ஒரு முறை பணிக்கு வந்து வருகை பதிவேட்டில் பணிக்கு வராத நாட்களிலும் கையொப்பமிடுவதாக புகார்கள் அரசுக்கு தொடர்ந்து சென்றது.

    இதையடுத்து அரசு டாக்டர்களின் வேலை நேரத்தை கண்காணிக்குமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு சுகாதார செயலாளர் ககன்தீப்சிங் பேடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மாவட்ட, தாலுகா, தாலுகா அல்லாத மருத்துவமனைகளில் உள்ள தலைமை டாக்டர்கள் காலை 7:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும், மாலை 3மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நிர்வாக பணியில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.

    இதர டாக்டர்கள் காலை 7:30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் இருப்பதை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணி நேரங்களில் இல்லையா, மருத்துவ சேவை குறைகள், அரசு மருத்துவமனையில் லஞ்சம் கேட்கிறார்களா உள்ளிட்ட புகார்கள் இருந்தால் உடனே பொதுமக்கள் 104க்கு தகவல் தெரிவிக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

    • முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தொடங்கி வைத்தார்.
    • முகாமில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    தென்காசி:

    கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்தபேரி ஊராட்சியில் தேசிய காசநோய் எதிர்ப்பு திட்டம் முகாம் நடைபெற்றது. முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் டி.கே.பாண்டியன் தொடங்கி வைத்தார். நடமாடும் வாகனம் மூலம் நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு நெஞ்சு சளி, இருமல், பசியின்மை, எடை குறைதல் போன்றவை பார்க்கப்பட்டது.

    மேலும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனைகளை வட்டார மருத்துவர் பழனிக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் சாமுவேல், ஆய்வக சுகாதார மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் செவிலியர்கள் மேற்கொண்டனர். முகாமில் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் 135 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
    • தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கிருமாம் பாக்கத்தில் தனியார் மருத்துவம், என்ஜினீயரிங், நர்சிங் உள்ளிட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது.

    கிருமாம்பாக்கம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா சப்ளை செய்வதாக தொடர் புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ் உள்ளிட்டோர் அந்த பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இதில் அந்த பகுதியிலிருந்த தனியார் மருத்துவ கல்லூரி அருகே நின்ற 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களில் 2 பேர் டாக்டர்கள் என்பது தெரியவந்தது.

    சென்னையை சேர்ந்த பல் டாக்டர் குற்றாலீஸ்வரன்(29), புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்த டாக்டர் கார்த்திகேயன்(26) மற்றும் கடலூர் மாவட்டம் அன்னவல்லி கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் ரவிக்குமார்(29) என தெரியவந்தது.

    ரவிக்குமார் ரெட்டிச் சாவடியில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது டாக்டர்கள் குற்றாலீஸ்வரனும் கார்த்திகேயனும் டீ கடைக்கு வரும்போது அவர்களுடன் என்ஜினீயர் ரவிக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    3 பேரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கஞ்சா பழக்கத்துக்கு அடிமையான இவர்கள் முதலில் ஆரோவில் பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

    அதன்பிறகு தங்களது உபயோகத்துக்கு போக மீதி கஞ்சாவை நண்பர்களுக்கு விற்று வந்துள்ளனர். அதில் நல்ல வருமானம் கிடைக்கவே சென்னையை சேர்ந்த கஞ்சா வியாபாரி விக்னேசிடம் கிலோ கணக்கில் கஞ்சா வாங்கி வந்து சிறு சிறு பொட்டலங்களாக கல்லூரி மாணவர்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா, ரூ.21 ஆயிரம் ரொக்கம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

    • புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.
    • ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.

    சென்னை:

    அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

    அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாமதமாக பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும். உள் நோயாளிகள் பிரிவை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.

    புறநோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் தாமதத்தை தவிர்க்க வேண்டும்.

    ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முகாமை நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிர்வாகி மகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • நேதாஜி சுபாஷ் சேனை சேர்ந்த மற்றும் இளைஞர்கள் 36 பேர் ரத்ததானம் வழங்கினர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் வடக்கு ரத வீதியில் உள்ள அண்ணா படிப்பகத்தில் ராஜாஸ் கல்லூரி பல் மருத்துவம் மற்றும் பொது மருத்துவம், அகர்வால் கண் மருத்துவ முகாம், அன்னை வேளாங்கன்னி ரத்த மையம் மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிர்வாகி மகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் 300-க்கும் மேற்ப்பட் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    நேதாஜி சுபாஷ் சேனை சேர்ந்த மற்றும் இளைஞர்கள் 36 பேர் ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செல்வகுமார், ஆன்றனி மைக்கேல், ராஜேஷ், அகமது மற்றும் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக வள்ளியூர் பேரூராட்சி துணை தலைவர் கண்ணர், கவுன்சிலர்கள் மாடசாமி, சங்கர், சுப்பு லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நேதாஜி சுபாஷ் சேனை தென்மண்டல இளைஞரணி தலைவர் சுகுணா கணேசன் ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாக ரமேஷ் கண்ணன் வரவேற்றார். முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.

    ×