search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Alliance"

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 27 விவசாய சங்கங்களின் தலைவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். #LSPolls #DMK
    சென்னை:

    அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை 27 விவசாய சங்கங்களின் தலைவர்கள் சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-

    1. கு.செல்லமுத்து (தமிழக விவசாயிகள் சங்க கூட்டு நடவடிக்கை குழு)

    2. கே.பி.ராஜ்குமார் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)

    3. ஜி.எஸ்.தளபதி (இந்திய விவசாயிகள் சங்கம்)

    4. அக்ரி பசுமைவளவன் (விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்)

    5. இளங்கீரன் (காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க கூட்டமைப்பு)

    6. கிருஷ்ணன் (ஏரிநீர் பாசன சங்கம் மற்றும் பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்)

    7. பொன்னுசாமி (தேசிய மயமாக்கப்பட்ட கடன்பெற்ற விவசாயிகள் சங்கம்)

    8. கோபாலகிருஷ்ணன் (தேசிய நெடுஞ்சாலைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் மரவள்ளி, மக்காச் சோளம் உற்பத்தியாளர்கள் சங்கம்).

    9. சரவணன் (இயற்கை வேளாண்மை சிறுதானிய உற்பத்தியாளர் சங்கம்)

    10. வெங்கடபதி (தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கம்)

    11. விஸ்வநாதன் (தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம்)

    12. நல்லசிவம் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்)

    13. ராமமூர்த்தி (கோத்தாரி கரும்பு விவசாயிகள் சங்கம்)

    14. ஜெனார்த்தன் (படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் இலத்தூர் ஒன்றிய கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)

    15. சுதர்சனம் (படாளம் கூட்டுறவு கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)

    16. சோழந்தூர் பாலகிருஷ்ணன் (சோழந்தூர் மற்றும் 72 கண்மாய்களின் பாசன சங்கம், ராமநாதபுரம்)

    17. செல்வக்குமார் (தென்னிந்திய கரும்பு உற்பத்தியாளர் சங்கம் மற்றும் துணைத் தலைவர், வி.வி.எம். சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்கம்)

    18. அமரேசன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை).

    19. ராஜேந்திரன் (தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை)

    20. ரகுபதி (ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை).

    21. சுதர்சனம் (மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை).

    22. லோகநாதன் (பாலாறு படுகை விவசாயிகள் சங்கம்)

    23. திருப்புலிவனம் திருவேங்கடம் (அனைத்து பயிர்கள் சாகுபடி உற்பத்தியாளர்கள் சங்கம்).

    24. சென்னியப்பன் (கரும்பு வளர்ப்போர் மற்றும் சர்க்கரை ஆலை முன்னேற்றச் சங்கம்).

    25. ஜெயபிரகாஷ் (டெல்டா அமைப்பு)

    26. மு.திருவேங்கடம் (அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி விவசாயிகள் சங்கம்)

    27. ஏழுமலை (காஞ்சிபுரம் மாவட்ட இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு சங்கம்). #LSPolls #DMK
    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர். #LSPolls #CPI #DMK
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 
     
    இதற்கிடையே, திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் வெளியிட்டார். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது. 

    இதேபோல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவித்தார்.



    இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள திருப்பூர் தொகுதியில் சுப்பராயனும், நாகை தொகுதியில் செல்வராஜும் போட்டியிடுவார்கள் என அறிவித்தார். #LSPolls #CPI #DMK
    பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் 2 தொகுதிகளின் வேட்பாளர்களும் இன்று அறிவிக்கப்பட்டனர். #LSPolls #CPM #DMK
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.

    இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மதியம் வெளியிட்டார். அப்போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனி போட்டியிடுவார் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அறிவித்துள்ளது.

    நவாஸ்கனி

    இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.



    அப்போது, திமுக கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கோவை தொகுதியில் பி.ஆர்.நடராஜன் மற்றும் மதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுவார் என அறிவித்தார்.  #LSPolls #CPM #DMK
    பாராளுமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். #ParliamentElection #MKStalin #DMKAlliance
    சென்னை:

    தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.



    இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

    திமுக போட்டியிடும் தொகுதிகள்:

    சென்னை வடக்கு
    சென்னை தெற்கு
    மத்திய சென்னை
    ஸ்ரீபெரும்புதூர்
    காஞ்சிபுரம் (தனி)
    அரக்கோணம்
    வேலூர்
    தர்மபுரி
    திருவண்ணாமலை
    கள்ளக்குறிச்சி
    சேலம்
    நீலகிரி (தனி)
    பொள்ளாச்சி
    திண்டுக்கல்
    கடலூர்
    மயிலாடுதுறை
    தஞ்சாவூர்
    தூத்துக்குடி
    தென்காசி (தனி)
    திருநெல்வேலி

    காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

    திருவள்ளூர் (தனி)
    கிருஷ்ணகிரி
    ஆரணி
    கரூர்
    திருச்சிராப்பள்ளி
    சிவகங்கை
    தேனி
    விருதுநகர்
    கன்னியாகுமரி
    புதுச்சேரி

    மதிமுக- ஈரோடு
    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோயம்புத்தூர், மதுரை
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- திருப்பூர், நாகப்பட்டினம் (தனி)
    இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-  ராமநாதபுரம்
    விடுதலை சிறுத்தைகள்-  விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி)
    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- நாமக்கல்
    இந்திய ஜனநாயக கட்சி - பெரம்பலூர். #ParliamentElection #MKStalin #DMKAlliance
    தி.மு.க. கூட்டணி அகில இந்திய அளவில் விரிவடையும், வலுவடையும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
    திருச்சி:

    திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேசம் காப்போம் சனாதன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு நடக்கிறது.

    இதற்கிடையே இன்று காலை மாநாட்டு திடலில் இறுதிகட்ட பணிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அகில இந்திய கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர்கள் சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தமிழ்நாடு கம்யூனிஸ்டு செயலாளர்கள் இரா.முத்தரசன், பால கிருஷ்ணன் மற்றும் ஜவாஹிருல்லா, காதர் மொய்தீன், கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த மாநாடு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசார தொடக்கமாக அமையும். சனாதனத்தை எதிர்க்கும் வகையில் நடைபெறும் மாநாட்டில் தேசிய தலைவர்கள் பங்கேற்பது பெருமைக்குரியதாகும். தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றன.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தி.மு.க. கூட்டணி அகில இந்திய அளவில் விரிவடையும், வலுவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொல்.திருமாவளவனுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    முன்னதாக மாநாட்டு திடலை பார்வையிட வந்த தொல்.திருமாவளவனை கட்சியினர் வரவேற்றனர்.
    விடுதலை சிறுத்தைகள் கட்சியை தி.மு.க. கூட்டணியில் இருந்து விடுவிப்பதற்கான முயற்சியை மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளதாக எச்.ராஜா தெரிவித்தார். #HRaja #Thirumavalavan #MKStalin
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேப்பங்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தஞ்சை பெரிய கோவிலில் வாழும் கலை அமைப்பு சார்பில் நடக்க இருந்த தியான நிகழ்ச்சிக்கு கோர்ட்டு தடை விதித்திருப்பது ஏற்புடையது அல்ல. இந்து மத கோவில்களில் பக்தர்களின் வழிபாட்டு உரிமைக்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் அமைப்பு வகுத்துள்ள சட்ட விதிமுறைகளின் படி நிர்வாகம் நடக்கிறதா? என்பதை மட்டும் தான் கோர்ட்டு கண்காணிக்க வேண்டும். அதனை விட்டு விட்டு புதிதாக சட்டம் இயற்றுவதற்கு கோர்ட்டுக்கு எந்த உரிமையையும் வழங்கப்படவில்லை.

    அ.தி.மு.க.வையும், அ.ம.மு.க.வையும் இணைப்பதற்கு பா.ஜ.க. முயற்சி செய்வதாக கூறப்படும் கருத்து தவறானது. பா.ஜ.க. அதுபோன்று எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சமீப காலமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒருவிதமான பதட்டத்தை சமூகத்தில் ஏற்படுத்தி வருகிறார்.


    சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு திருமாவளவன் நடந்து கொள்ள வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் இருந்து விடுவிப்பதற்கான முயற்சியை ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

    இதனால் திருமாவளவனுக்கு அச்சம் ஏற்பட்டதால், அந்த பழியை பா.ஜ.க. மீது சுமத்தி வருகிறார். பா.ஜ.க. வை பொறுத்தவரை வரும் லோக்சபா தேர்தலிலும் மோடி தான் மீண்டும் பிரதமர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. வேண்டுமென்றே பா.ஜ.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயன்று வருகின்றனர்.

    தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் காலூன்றிய பின்புதான் ஜாதிய வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஆணவ படுகொலைகளும் அதிகரிக்க தொடங்கியது. கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். திராவிட இயக்கங்களின் அஸ்தமனத்தில் தான் புதிய தமிழகம் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #HRaja #Thirumavalavan #MKStalin
    தூத்துக்குடியில் நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகக்கோரி தஞ்சையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகக்கோரி தஞ்சை பழைய பஸ் நிலையம் முன்பு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ஜனநாயக மாதர் சங்கத்தினர், ம.தி.மு.க.வினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, ஒரத்தநாடு எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், மாநகர செயலாளர் நீலமேகம், சட்டத்திருத்தக்குழு உறுப்பினர் இறைவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், மாநகர மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் பழனியப்பன், பட்டதாரி அணி மாநில பொதுச்செயலாளர் லெட்சுமி நாராயணன், கோட்ட தலைவர்கள் கதர் வெங்கடேசன், சவுரிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், செயற்குழு உறுப்பினர்கள் மாலதி, செந்தில்குமார், மாவட்ட துணைச்செயலாளர் அன்பு, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமி நடராஜன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாரதி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தூத்துக்குடியில் போலீசாரின் துப்பாக்கி சூடு நடவடிக்கையை கண்டித்தும், எடப்பாடி பழனிச்சாமியை பதவி விலகக்கோரியும் கோ‌ஷம் எழுப்பினர்.

    பஸ் நிலையத்தின் முன்பு இந்த போராட்டம் நடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர்.

    ×