search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "discount"

    • ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு வரி தள்ளுபடி செய்யப்படும்.
    • இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சி ஆணையாளர் ஆர்.மோகன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களது 2023- 2024ம் நிதியாண்டிற்கான, சொத்து வரியை இந்த மாதம் ஏப்ரல் 30-ந் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீத வரி தள்ளுபடி செய்யப்படும், எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு தெரிவித்துள்ளார்.

    • போதை கும்பலில் ஒருவர் வழி மறித்தால் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி இறந்தார்.
    • மோனிஷா என்ற பெண் தலைமறைவானார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்துபிள்ளை பாளையத்தை சேர்ந்தவர் குசும்குமாரி மகன் விஷால் பொறியியல் இவர் கடந்த 7-ந் தேதி இரவு 2.15 மணிக்கு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் அருகே ஸ்கூட்டரில் சென்றபோது, நடுரோட்டில் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய போதை கும்பலில் ஒருவர் வழி மறித்தால் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி இறந்தார்.

    ஓதியஞ்சாலை போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து போதை கும்பலை சேர்ந்த நவீன்குமார், கார்த்திக் சங்கர், சூர்யகுமார், அருண்தாமஸ், முகேஷ்குமார் ஆகியோரை கைது செய்தனர். மோனிஷா என்ற பெண் தலைமறைவானார்.

    வழக்கில் சிறையில் உள்ள அருண் தாமஸ் ஜாமீன் கேட்டும், மோனிஷா முன்ஜாமீன் கோரியும் கடந்தவாரம் புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, 2 மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • எம்.சி.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும்.
    • தள்ளுபடி தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் பரதன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் தாமரைச்செல்வன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்.

    அப்போது எம்.சி.எஸ் திட்டத்தை கைவிட வேண்டும், தள்ளுபடி தொகையினை வட்டியுடன் வழங்கிட வேண்டும், நகை கடன் ஏலத்தில் நஷ்டம் என்று கூறி பணியாளர்களை பழி வாங்குவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் துணைத் தலைவர்கள் கிருஷ்ணகுமார், கோபிநாதன், இணை செயலாளர்கள் அரபுபுனிசாபேகம், கோபிநாத் உள்ளிட்ட ஏராளமானர்கள் கலந்து கொண்டனர்.

    • குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் செய்ய வேண்டும்.
    • சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    நாகப்பட்டினம் :

    நாகப்பட்டினத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி நடைபெற்றது.

    மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரபோஜி தலைமையேற்று பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். புத்தூரில் தெய பேரணியில் பல்வேறு விவசாய சங்கங்கள் பங்கேற்றனர்.

    10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் உடன் விவசாயிகள் பேரணியாக அவுரிதிடலில் சென்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட உத்திரவாதம் செய்ய வேண்டும், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தில் தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்றி விவசாயிகள் பயன்படும் வகையில் மாற்றி அமைத்திட வேண்டும், என்பன உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    பேரணி அவுரி திடலில் முடிவடைந்தது. அங்கு பொறுப்பாளர்கள் கண்டன உரையாற்றினர்.

    • நகைக்கடன் தள்ளுபடி செய்தது ஆனால் விவசாயிகளுக்கு வழங்க வில்லை.
    • 50-க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 39 பயனாளிகளுக்கு, தமிழக அரசால் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

    ஆனால், பயனாளிகளுக்கு இதுவரை நகை திருப்பி வழங்கப்படவில்லை.

    இதையடுத்து, நகைகளை திருப்பித் தர வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தலைமையில், பயனாளிகள் பல கட்டங்களாக போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து வட்டா ட்சியர் த.சுகுமார் தலை மையில் செப்.22 ல், நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தையில், செப். 28 ஆம் தேதிக்குள், நகை பயனாளிகளுக்கு திருப்பி வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    இந்நிலையில் உறுதியளித்தபடி 28ம் தேதி பயனாளிகளுக்கு நகை திருப்பி வழங்கப்படாததைக் கண்டித்து, நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் மற்றும் விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வீ.கருப்பையா, கோ.ராமசாமி தலைமையில் தொடர் காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்துகூட்டுற வுத்துறை துணைப் பதிவாளர் சுகி.சுவாமிநாதன், பேராவூரணி காவல் ஆய்வாளர் செல்வி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், காலை 12 மணி முதல் மாலை 3 மணி வரை இரண்டு கட்டமாக சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    சமாதானப் பேச்சு வார்த்தையில், விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் ஆர்.சி.பழனிவேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வீ.கருப்பையா, உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    அரசுத் தரப்பில், கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் கள அலுவலர் சின்னப்பொண்ணு, கள அலுவலர் ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

    இதையடுத்து கூட்டுறவு துணை பதிவாளர் சுகி.சுவாமிநாதன், இரண்டு நாளில் நகைகள் திருப்பித் தரப்படும்" என உறுதி அளித்தார்.

    இதனை ஏற்று போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

    • 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்தும் புத்தகங்களை வாங்க போதிய ஆட்கள் வரவில்விலை
    • கண்காட்சி குறித்து போதிய விளம்பரங்கள் செய்யப்படவில்லை

    அரியலூர்:

    தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் 6-வது புத்தகக் கண்காட்சி அரியலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வந்தது. ஜூன் 24 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.

    இந்த கண்காட்சியில், நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், சுமார் 83 அரங்குகளை அமைத்து தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தனர். நாள் தோறும் இரவு எழுத்தாளர்களின் எழுச்சியுரை, கருத்தரங்கம், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தன.

    அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் வருகை புரிந்தனர். இந்த புத்தக் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு, நேபாளத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட்டில், இந்திய அணியில் இடம் பெற்ற அரியலூரைச் சேர்ந்த சந்தோஷ்க்கு புத்தகங்களை பரிசாக அளித்தனர்.

    இறுதி நாளில் புத்தக விற்பனையாளர்கள் கூறுகையில், கடந்த 10 நாள்களாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில், புத்தகம் வாங்குவோரின் எண்ணிக்கை மிக, மிக குறைவாக இருந்ததது. ஒரு புத்தகம் 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்தும் கூட புத்தகங்களை வாங்க ஆளில்லை.

    அரங்கிற்கான நாள் வாடகை, தங்கும் ஊழியர்களுக்கான செலவுக்கு கூட புத்தகங்கள் விற்பனையாகவில்லை. இந்த கண்காட்சி குறித்து போதிய விளம்பரங்கள் செய்யப்படவில்லை. மேலும், அரங்கு வைத்திருப்பவர்களுக்கு போதிய வசதிகளும் செய்து தரப்படவில்லை. உணவுகள் கூட சரிவர வருவதில்லை. இந்தாண்டு நஷ்டத்துடன் செல்கிறோம் என்றனர்.

    ஹூண்டாய் நிறுவனம் தனது கார்களுக்கு இந்தியாவில் சிறப்பு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.



    கார் தயாரிப்பில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ள கொரியாவின் ஹூண்டாய் நிறுவனம் புதிதாக வென்யூ என்ற மாடல் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் அதிகபட்ச தள்ளுபடி சலுகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

    ஹூண்டாய் வெர்னா, ஐ20, சான்ட்ரோ, கிராண்ட் ஐ10, எக்ஸென்ட் என அனைத்து மாடல் கார்களுக்கும் தள்ளுபடி சலுகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. 2013-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 மாடல் 2017-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மாடலாக வெளிவந்தது. 



    இந்த ஆண்டு அக்டோபரில் புதிய தலைமுறை கிராண்ட் ஐ10 வர இருக்கிறது. இந்நிலையில் இந்த காருக்கு அதிகபட்சமாக ரூ.95,000 வரை தள்ளுபடி அளிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

    ஹூண்டாய் எக்ஸென்ட் காருக்கு ரூ. 85,000 வரை தள்ளுபடி கிடைக்க உள்ளது. வெர்னா மாடலுக்கு ரூ.30,000 சான்ட்ரோ மாடலுக்கு ரூ.31,000 தள்ளுபடி அளிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஹூண்டாய் ஐ 20 மற்றும் ஐ20 ஆக்டிவ் ஆகிய மாடல் கார்களுக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
    பாராளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டதற்கான கை விரல் மையை காட்டினால் ஓட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கு 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. #LoksabhaElections2019
    சென்னை:

    ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது:-

    தமிழகத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் நோக்கில் தேர்தல் நாளன்று ஓட்டுபோட்டதற்கான அடையாளமாக கைவிரலில் உள்ள மையை காண்பித்தால் மாலை 6 மணிக்கு மேல் ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு பில் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

    மக்களிடையே வாக்களிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக அனைத்து ஓட்டல்களிலும் தேர்தல் தினத்தன்று இந்த தள்ளுபடியை நடைமுறைபடுத்துகிறோம்.

    அன்றைய தினம் மாலை 6 மணி முதல் இரவு வரை இந்த தள்ளுபடி வழங்கப்படும். சென்னை மாவட்ட ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர் ரவி கூறும்போது, ‘சென்னை முழுவதும் மொத்தம் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன. இதில் 2500 ஓட்டல்கள் எங்களுடைய சங்கத்தில் உள்ளது.

    எங்கள் சங்கத்தில் சேராத ஓட்டல்களிலும் 10 சதவீத தள்ளுபடி வழங்குவோம் என்று உறுதி அளித்துள்ளார். எங்களது அறிவிப்பை சமூக வலைதளங்களில் மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். வருகிற 17-ந்தேதி ஓட்டல்கள் முன்பு அறிவிப்பு பலகையும் வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஓட்டுபோட்டதற்கான கைவிரல் மையை காண்பித்தால் அயனாவரம் மார்க்கெட்டில் உள்ள ராஜாஸ் சிக்கன் கடையில் கோழிக்கறி விலையில் 1 கிலோவுக்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும் என்று அதன் உரிமையாளர் முரளிபாபு அறிவித்திருந்த நிலையில் இப்போது ஓட்டல் உரிமையாளர்களும் 10 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. #LoksabhaElections2019
    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலையை தற்காலிகமாக குறைத்திருக்கிறது. #Nokia #flipkartoffers



    ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் நோக்கியா டேஸ் விற்பனையில் நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் வழங்கப்படுகிறது.

    இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவிகிதம் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பழைய ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்து தள்ளுபடி பெறுவதோடு, ப்ளிப்கார்ட் சார்பில் பைபேக் வேல்யூ சலுகை ரூ.99 விலையில் வழங்கப்படுகிறது.

    நோக்கியா டேஸ் விற்பனையில் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் தற்சமயம் ரூ.9,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.10,999 விலையில் வெளியிடப்பட்டது. இதேபோன்று நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,999 விலையில் வெளியிடப்பட்டது.



    இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டு இருப்பதுடன், வட்டியில்லா மாத தவணை முறை வசதியும், பைபேக் வேல்யூ சலுகை ரூ.99 விலையில் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.1500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    முன்னதாக நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என ஹெச்.எம்.டி. குளோபல் அறிவித்தது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    ப்ளிப்கார்ட் தளத்தில் அசுஸ் சிறப்பு விற்பனை துவங்கியது. அசுஸ் டேஸ் விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் ரூ.8000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. #ASUS #Flipkart



    அசுஸ் இந்தியா மற்றும் ப்ளிப்கார்ட் இணைந்து அசுஸ் டேஸ் எனும் சிறப்பு விற்பனையை நடத்துகின்றன. இன்று (ஜனவரி 9) துவங்கியிருக்கும் சிறப்பு விற்பனை ஜவனரி 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    ப்ளிப்கார்ட் அசுஸ் டேஸ் சிறப்பு விற்பனையில் அசுஸ் நிறுவன ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அந்த வகையில் சமீபத்தில் அசுஸ் அறிமுகம் செய்த சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2, சென்ஃபோன் மேக்ஸ் எம்2 மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.



    அசுஸ் டேஸ் விற்பனையில் தள்ளுபடியில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

    - அசுஸ் சென்ஃபோன் 5 இசட் 8 ஜி.பி. + 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ.8,000 குறைக்கப்பட்டு ரூ.28,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    - அசுஸ் சென்ஃபோன் 5 இசட் 6 ஜி.பி. + 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.8,000 குறைக்கப்பட்டு ரூ.24,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    - அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 6 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    - அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 4 ஜி.பி. + 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.10,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    - அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்1 3 ஜி.பி. + 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.8,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    - அசுஸ் சென்ஃபோன் லைட் எல்1 ரூ.1,000 குறைக்கப்பட்டு ரூ.4,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

    இதுதவிர மொபைல் பாதுகாப்பு திட்டம் அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 (ரூ.1,299) மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்2 (ரூ.799) தற்சமயம் ரூ.99 விலையில் வழங்கப்படுகிறது. புதிய சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உரிய நேரத்துக்குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்வது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. #centralgovernment
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்தது. அங்கு ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

    இதனால், விவசாயிகள், காங்கிரசுக்கு ஆதரவாக திரும்பும் நிலை ஏற்படும் என்று பா.ஜனதா கருதுகிறது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், விவசாயிகள் பிரச்சினை முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகளை கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, விவசாயிகளின் பயிர் கடன்களுக்கு வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிப்பது பற்றி பரிசீலித்து வருகிறது. தற்போது, விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் ரூ.3 லட்சம்வரை குறுகிய கால பயிர் கடன் அளிக்கப்படுகிறது. உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தினால், 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இந்நிலையில், உரிய தேதிக் குள் பயிர் கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு மீதி 4 சதவீத வட்டியையும் தள்ளுபடி செய்யும் திட்டத்தை அறிவிக்கலாமா? என்று மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

    ஏற்கனவே, வட்டி தள்ளுபடி மூலம் மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி சுமை ஏற்பட்டு வருகிறது. வட்டியை முற்றிலுமாக தள்ளுபடி செய்தால், இந்த சுமை ரூ.30 ஆயிரம் கோடியாக உயரும் அபாயம் உள்ளது.

    விவசாயிகளுக்கு மற்றொரு சலுகையாக, உணவு தானிய பயிர்களின் காப்பீட்டுக்கு அவர்கள் செலுத்தி வரும் பிரிமியம் தொகையை தள்ளுபடி செய்யவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.



    இயற்கை காரணிகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கு காப்பீடு வழங்கும்வகையில், ‘பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா’ என்ற பயிர் காப்பீட்டு திட்டம், 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகளிடம் இருந்து 2 சதவீதம், 1.5 சதவீதம், 5 சதவீதம் என பயிர்களுக்கு ஏற்ப குறைவான பிரிமியம் தொகையே வசூலிக்கப்பட்டு வருகிறது. மீதி பிரிமியத்தை மத்திய-மாநில அரசுகள் ஏற்று வருகின்றன.

    இனிமேல், விவசாயிகள் செலுத்தும் சொற்ப பிரிமியத்தையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதனால், அவர்கள் ஓராண்டுக்கு செலுத்தும் ரூ.5 ஆயிரம் கோடி பிரிமியத்தை மத்திய அரசே ஏற்க வேண்டி இருக்கும்.

    அத்துடன், நடப்பு நிதியாண்டில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடன் அளவை ரூ.11 லட்சம் கோடியாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

    விவசாயிகளுக்கான சலுகைகளை வகுப்பது பற்றி உயர்மட்ட அளவில் ஆலோசனை கூட்டங்களை மத்திய அரசு நடத்தி வருகிறது. புத்தாண்டு பரிசாக இத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.#centralgovernment
    ஆண்டு இறுதியை முன்னிட்டு டொயோட்டா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குகிறது. #Toyota



    டொயோட்டா நிறுவன கார் மாடல்களுக்கு ஆண்டு இறுதியை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுக்க இயங்கி வரும் ஜப்பான் நிறுவனத்தின் விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. 

    பழைய மாடல்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் புது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2019 முதல் டொயோட்டா கார் மாடல்களின் விலை 4 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கும் நிலையில், புது சலுகைகள் புதிய கார் வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிகிறது.



    டொயோட்டா ஃபார்ச்சூனர்

    ஃபார்ச்சூனர் எஸ்.யு.வி. கார் வாங்குவோருக்கு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர் மாடலில் 2.8-லிட்டர் டீசல் மோட்டார் கொண்ட மாடலுக்கு அதிகபட்ச தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதே போன்று 166 பி.ஹெச்.பி. பவர் கொண்ட 2.7-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலுக்கும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

    டொயோட்டா யாரிஸ்

    இந்தியாவில் மாருதி சுசுகி சியாஸ், ஹோன்டா சிட்டி மற்றும் ஹூன்டாய் வெர்னா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா யாரிஸ் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 7-ஸ்டெப் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. புது யாரிஸ் மாடலுக்கு அதிகபட்சம் ரூ.1.1 லட்சம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகிறது.



    டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா

    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இன்னோவா மாடலுக்கு நேரடி போட்டியாக எந்த மாடலும் இல்லை என்றாலும், இரண்டாம் தலைமுறை மாருதி சுசுகி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராசோ உள்ளிட்டவை விற்பனையில் போட்டி போடுகின்றன. டொயோட்டா எம்.பி.வி. மாடலில் 150 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.4 லிட்டர் டீசல், 174 பி.ஹெச்.பி. வழங்கும் 2.8 லிட்டர் டீசல், 168 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 2.7 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. 

    வாடிக்கையாளர்கள் டீசல் என்ஜின் கொண்ட மாடல்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலான சலுகைகளுடன், எக்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடல்களுக்கு அறிவிக்கப்படாத மறைமுக சலுகை வழங்கப்படுகிறது என்றாலும், இந்த கார் பெற இரண்டு மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா எடியோஸ்

    டொயோட்டா எடியோஸ் செடான், ஹேட்ச்பேக் (எடியோஸ் லிவா) மற்றும் கிராஸ்-ஹேட்ச் (எடியோஸ் கிராஸ்) என மூன்று வித வேரியன்ட்களில் கிடைக்கிறது. அனைத்து வேரியன்ட்களும் பெட்ரோல் மற்றும் டீசன் என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அவ்வாறு 68 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.4-லிட்டர் டீசல் என்ஜின், செடான் மற்றும் கிராஸ் ஹேட்ச் மாடலில் 90 பி.ஹெச்.பி., 1.5 லிட்டர் பெட்ரோல், ஹேட்ச்பேக் மாடலில் 80 பி.ஹெச்.பி., 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதி வரை டொயோட்டா எடியோஸ் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தள்ளுபடி மற்ரும் சலுகைகள் வழங்கப்படுகிறது.



    டொயோட்டா கொரோலா ஆல்டிஸ்

    ஸ்கோடா ஆக்டேவியா மற்றும் ஹூன்டாய் எலான்ட்ரா மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட கொரோலா ஆல்டிஸ் 140 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.8-லிட்டர் பெட்ரோல் என்ஜின், 88 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் வேரியன்ட்களில் கிடைக்கிறது. கொரோலா ஆல்டிஸ் வாங்கும் வாடிக்கையாளர்கள் கார் விலையில் இருந்து அதிகபட்சம் ரூ.75,000 வரையிலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை பெற முடியும்.
    ×